வர்ணங்கள்
- சிவப்பு, மஞ்சள், நீலம் என்பன மூலவர்ணங்களாகும். இம் மூலவர்ணங்களை தேவைக்கேற்ப ஒன்றுடன் ஒன்று கலப்பதன் மூலம் ஏனைய வர்னங்களைப் பெறலாம். மூலவர்ணங்களை பிரதான வர்ணம், ஆரம்ப வர்ணம், அடிப்படை வர்ணம், மற்றும் தூய வர்ணம் எனவும் அழைக்கப்படும்.
- மூலவர்ணங்களை ஒன்றுடன் ஒன்று கலப்பதன் மூலம் ஊதா, செம்மஞ்சள், பச்சை போன்ற வர்ணங்கள் பெறப்படும். இவை கலப்பு வர்ணங்கள் எனப்படும். கலப்பு வர்ணங்களை அயல் வர்ணம், இரண்டாம் வர்ணம் மற்றும் துணை வர்ணம் எனவும் அழைக்கப்படும்.
- இவற்றை வர்ணச்சக்கரம் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
வர்ணச்சக்கரம்
- மூலவர்ணங்கள் மூன்றையும் கலப்பதன் மூலம் கபில வர்ணம் பெறப்படும்.
எதிர்வர்ணங்கள்
- வர்ணச்சக்கரத்தில் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ள வர்ணங்கள் எதிர்வர்ணங்களாகும்.
அதாவது, மூலவர்ணங்கள் இரண்டைக் கலக்கும்போது கிடைக்கும் கலப்புவர்ணமானது எஞ்சிய மூலவர்ணத்திற்கு எதிர்வர்ணமாகும்.
உதாரணம் :
சிவப்பு எதிர்வர்ணம் பச்சை
மஞ்சள் எதிர்வர்ணம் ஊதா
நீலம் எதிர்வர்ணம செம்மஞ்சள்
குளிர்வர்ணங்கள்
- கண்ணிற்கு குளிர்மையுணர்வைத் தருவதும் பின்செல்லும் இயல்புடையதுமான வர்ணங்கள் குளிர்வர்ணங்களாகும்.
உதாரணம் : பச்சை, நீலம், ஊதா
வெப்பவர்ணங்கள்
- நீண்ட தூரத்திற்கு தெரியக்கூடியதும் முன்செல்லும் இயல்புடையதுமான வர்ணங்கள் வெப்பவர்ணங்களாகும்.
உதாரணம் : மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு
பொதுவர்ணங்கள்
- கறுப்பு மற்றும் வெள்ளை என்பன பொதுவர்ணங்களாகும்.
வர்ண ஒத்திசைவு
- அயல்வர்ணங்களை அருகருகே தீட்டும்போது ஏற்படும் தன்மை வர்ண ஒத்திசைவு எனப்படும்.
வர்ணபலம்
- வர்ணமொன்றை மென்மையாகவும் கருமையாகவும் தீட்டும்போது ஏற்படும் தன்மை வர்ணபலம் எனப்படும்.
பயிற்சி வினாக்கள்
- மூலவர்ணங்கள் எவை?
- மூலவர்ணங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
- கலப்புவர்ணங்கள் எவை?
- கலப்புவர்ணங்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
- மூலவர்ணங்கள் மூன்றையும் கலப்பதன் மூலம் பெறப்படும் வர்ணம் எது?
- ஊதாவிற்கு எதிர்வர்ணம் யாது?
- முன்செல்லும் வர்ணங்களை எவ்வாறு அழைப்பர்? உதாரணம் தருக?
- பின்செல்லும் வர்ணங்களை எவ்வாறு அழைப்பர்? உதாரணம் தருக?
- பொது வர்ணங்கள் எவை?
- கருத்துள்ள வாக்கியம் ஒன்று எழுதுக.
i. வர்ண பலம்:
ii. வர்ண ஒத்திசைவு: