வட்டதாகே
- தாதுகோபுரமொன்றின் பாதுகாப்பைக் கருதி தாதுகோபத்தை சுற்றி அமைக்கப்படும் மனைஃஅரன் வட்டதாகே எனப்படும்.
- தூபகர, வேதியகர, சேகெய எனும் பெயர்களால் இது அழைக்கப்படுகின்றது.
- இலங்கை பௌத்த கட்டட நிர்மாணிப்பின் இன்னுமொரு சிறந்த நிர்மாணிப்பாக உள்ள வட்டதாகே சிறிய தாதுகோபங்களைச் சுற்றியே நிர்மாணிக்கப்படுகின்றன.
- வட்டவடிவ அமைப்பைக் கொண்ட இதன் கூரை தாதுகோபத்துக்குப் பாதுகாப்பான கூரையொன்றாக அமைக்கப் பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
- முகட்டை(கூரையை) தாங்கி நிற்கும் கற்றூண்கள் மிக நுணுக்கமான செதுக்கல் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
- இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்டது தூபாராம வட்டதாகேயாகும்.
பல காலங்களுக்குரிய உயர்கலைப் பண்புகளைக்கொண்ட வட்டதாகே நிர்மாணிப்புகள்
அநுராதபுரக் காலம்
♦ தூபாராம வட்டதாகே
♦ திரியாய வட்டதாகே
பொலனறுவைக் காலம்
♦ மெதிரிகிரிய வட்டதாகே
♦ பொலனறுவை வட்டதாகே
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காணுதல் …………………………………..………………
2. காலப்பகுதி ……………………………………..……………………..
3. மறுபெயர்கள் ………………………………………………………..
4. அமைப்பு ……………………………..…………………………………..
5. கட்டப்பட்ட நோக்கம் ……………………………….…………