லியனாடோ டாவின்சி – Leanardo da vinci (1452 – 1519)
மறுமலர்ச்சிக்கால தலைசிறந்த கலைஞராகிய லியனாடோ டாவின்சி கி.பி. 1452 இல் வின்சி (Vinci) நகரத்தில் பிறந்தார். 67 ஆண்டு காலம் வாழ்ந்து கி.பி. 1519 இல் உயிர் துறக்கும் வரை அவர், ஓவியப் படைப்பாக்கம் தொடர்பாகப் பரிசோதனைகள் செய்தார். அவர் பதினேழு (17) வருட வயதை அடைத்திருந்த நிலையில் 1469 இல் புளோரன்ஸ் நகரில் குடியமர்ந்ததன் விளைவாக தமது கலைத்திறன்களை மேலும் விருத்திசெய்து கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டியது.
லியனாடோ டாவின்சி ஓவியக்கலை மட்டுமன்றி, சிற்பக்கலை, கட்டட நிர்மாணம். எந்திரவியல், கணிதம், இசை போன்ற பல்வேறு துறைகளில் பாண்டித்தியத்தையும் படைப்பாக்கத்திறனையும் கொண்டிருந்தார். ‘புளோரன்ஸ் நகரில் புகழ்வாய்ந்த ஓர் ஒவியராகிய வெரக்கியோ (Verrocchio) எனும் கலைஞரிடம் ஓவியக்கலை கற்கச் சென்ற அவர், அக்கலைஞரின் கீழ், ஏறத்தாழ ஆறு ஆண்டு காலம் பயிற்சி பெற்றார். வெரக்கியோ’ வினால் வரையப்பட்ட “ஞானஸ்நானம்” எனும் ஓவியத்தில் ஒரு தேவதூதரின் உருவத்தை டாவின்சி வரைந்ததாகவும், டாவின்சியின் அபாரத்திறமையைக்கண்ட அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகின்றது. சுபசெய்தி (Annunciation) எனும் படைப்பு அவர் முதன்முதலாக சுயமாக வரைந்த ஓவியங்களுள் ஒன்றாகும். அத்தோடு இறுதிப் போசன விருந்து, மொனாலிசா, பாறைகளின் கன்னி மரியாள் (Vergin of the rock), லீடாவும் அன்னப் பறவையும், பர்சி பூசகர்கள் இயேசுபிரானைச் சந்தித்தல் போன்ற பல ஓவியங்கள் டாவின்சியினால் தீட்டப்பட்டவையாகும்.
டாவின்சியினது ஓவியப்படைப்புக்களின் சிறப்பியல்புகள்
டாவின்சியானது கலைப்படைப்புக்களில் கட்புல உருவங்கள் பெரிதும் ஒழுங்கமைந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பொருள்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு குறித்து அவர் விசேட கவனஞ் செலுத்தியுள்ளார். கேத்திரகணித அமைப்புக்களைக் கவனத்திற்கொண்டு வரைதல், கூட்டான உருவங்களைக் குழுக்களாக அமைத்தல் போன்றவை டாவின்சியின் ஓவியங்களில் காணப்படும் மற்றுமோர் இயல்பாகும். உதாரணமாக, ‘பாறைகளின் கன்னி மரியாள்’ எனும் ஓவியம் கூம்பக மாதிரிக்கமைய வரையப்பட்டுள்ளது. ‘இறுதிப் போசனவிருந்து’ எனும் ஓவியத்தில் சீடர்கள் மும்மூன்று பேராகக் குழுக்களாக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர்.
மனித உருவங்களை வரையும்போது உண்மையான எடுத்துக்காட்டுக்களைப் பயன்படுத்திச் சரியானவாறு மனித உடலமைப்பு இயல்புகள் காட்டப்பட்டுள்ளன. உயிரோட்டமான தன்மை, உடலின் வசீகரத்தன்மை ஆகியன நன்கு வெளிக்காட்டப்படும் வகையில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அத்தோடு அவ்வுருவங்களின் உடல்நிலைகள், உடலின் நளினத்தன்மையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் காட்டும் வகையில் வரையப்பட்டுள்ளன. மனித உணர்வுகளை ஓவியமாக வரைவதில் தலைசிறந்த ஓவியர் டாவின்சி எனக் கருதப்படுகின்றது. மொனாலிசா, இறுதிப் போசன விருந்து ஆகிய இரண்டு ஓவியங்களையும் இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
ஓவியத்தில் வரைந்துள்ள உருவங்களின் உருண்டு திரண்ட தன்மை, முப்பரிமாண இயல்பு ஆகியவற்றைக் காட்டுவதற்காக வரணங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். தைல வர்ண ஊடகத்தைப் பயன்படுத்தி, நிறத்தின் பேதங்களை மிக நுணுக்கமாகக் காட்டுவதன் மூலம், முப்பரிமாண இயல்புகளை நன்கு வெளிக்காட்டியுள்ளார். முப்பரிமாண இயல்புகளுடன் கூடவே ஒளி-நிழல் தன்மையைக் காட்டுவதிலும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. டாவின்சியினால் திண்மத்தன்மை வெளிக்காட்டப்படும் வகையில் வர்ணந்தீட்டும் போது நிழலின் மீது ஒளி மிகச் செறிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிறந்தீட்டும் கோட்பாடு கியரொஸ்குரோ (Chiaroscuro) என அழைக்கப்படுகின்றது. இதற்காக கபில நிறத்தின் வெவ்வேறு பேதங்களைக் கொண்ட இருண்ட நிறத் தொகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டாவின்சி பயன்படுத்திய “சுவுமரோ (Sfumoto)” உத்தி அவரது மற்றுமொரு சிறப்பியல்பாகும். இவ்வுத்தியின்போது வர்ணமொன்றின் நடுச்சாயலை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி வர்ணப் பேதமானது மங்கலான அதாவது மெல்லிய புகைமூட்டம் போன்ற தன்மை (hazy cffcct) வெளிப்படுமாறு பூசப்பட்டுள்ளது. மேலும் ஓர் உருவத்தின் மீது அல்லது சம்பவத்தின் மீது விசேட கவனஞ் செலுத்தி ஒளிர்வான தன்மை வெளிப்படுமாறு வர்ணந்தீட்டியுள்ளமை டாவின்சியின் மற்றுமோர் இயல்பாகும். டாவின்சியின் பெரும்பாலான ஓவியங்களில் இருண்ட பின்னணியிலிருந்து வெளிப்படும் வகையில் வரையப்பட்ட மனித உருவங்களைக் காண முடிகின்றது. அதாவது பின்னணிப் பொருள்கள் இருண்ட நிறங்களில் காட்டப்பட்டுள்ளதோடு, அதன் மீது உருவங்கள் ஒளி பொருந்தியதாக பிரகாசமான (bright) வர்ணங்கள் காட்டப்பட்டுள்ளது.
டாவின்சி தளத்தின் மீது உருவங்களை கொண்டுவரும்போது முன்னணி, இடையணி, பின்னணி என்றவாறாக சில தளங்களில் கட்டியெழுப்பி, உருவங்களை வரைந்துள்ளார். பல தளங்களில் உருவங்களைக் காட்டுவதன் மூலம் ஓவியத்தின் ஆழமும், தூரக்காட்சித்தன்மையும் நன்கு – வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உருவங்களை ஒழுங்கமைக்கும்போது இடையணித்தளத்தின் மீது பிரதான பாத்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும், உருவங்களையும் வர்ணங்களையும் பயன்படுத்தி தளத்தின் அழகும் தூரதரிசனமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
ஒன்றுக்கொன்று எதிரான கட்புல நோக்கங்களையும் எண்ணக்கருக்களையும் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்துதலையும் டாவின்சியின் படைப்பாக்கங்களில் காண முடிகின்றது. உதாரணமாக, * மொனாலிசா’ ஓவியத்தில் இளம் யுவதியின் உருவத்திற்குப் பின்னால் சனசூனியமான மப்பும்மந்தாரமுமான சூழலே காட்டப்பட்டுள்ளது. அழகும் தன்னந் தனிமையும் ஒரே வெளியில் காட்டப்பட்டுள்ளது.
மொனாலிசா (Mona Lisa)
டாவின்சியினால் வரையப்பட்ட பிரபல்யம் வாய்ந்த உருவப்படம் மொனாலிசா ஆகும். கி.பி. 1503 – 06 இற்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாகக் கருதப்படும் இது டாவின்சியினால் பொப்லர் எனப்படும் மரப்பலகையின்மீது தைல வர்ணத்தினால் வரையப்பட்டுள்ளது. தற்போது பாரிஸ் நகர, லுவர் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்தும் வகையில் கட்புல அடிப்படைகள் மற்றும் கோட்பாடுகளின்படி வரையப்பட்டுள்ள உருவப்பட ஓவியங்களுள் சிறப்பான ஒரு படைப்பாக்கமாகும்.
மொனாலிசா – monalisa (1503) மொனாலிசாவின் உடலினது மேற்பகுதி யைக் காட்டும் இந்த ஓவியம், கூம்பக வடிவ அமைப்பொன்றினுள் தீட்டப்பட்டுள்ளது. வெளியைக் கொண்ட பின்னணி இதில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் பின்னணியும் ஒளிபடும் தன்மையும் தனிச்சிறப்பானவை. ஓவியத்தின் பின்னணியில் Mysterious அடிவான ஒளியூட்டம் அடங்கிய ஒளி நிலைமை காணப்படுகின்றது. காட்டுப்பாங்கான தனித்தன்மையான விநோதமான (fantacy) தன்மையை வெளிப்படுத்தும் பின்னணியில் மெனாலிசாவின் பாவ வெளிப்பாட்டுத்தன்மை பெரிதும் முனைப்பாக்கப்பட்டுள்ளது. தன்னந் தனிமையைக் குறிக்கும் வெளியொன்றின் மீது ஓர் அழகிய இளம் பெண்ணைக் காட்டியிருத்தலானது ஒரு வகையில் எதிரான இரட்டைத் தன்மையை ஒன்றுடனொன்று தொடர்பு படுத்துவ தாகவும் அமைந்துள்ளது.
தேவையற்ற ஆபரணங்கள், அலங்கரிப்புக்கள் எதுவும் இன்றி மிக எளிமையான வகையிலேயே இப்பெண் உருவம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இப்பெண் உருவம் தம்மைப் பார்ப்பவரை நேரடியாக நோக்குவதாக அமைந்துள்ளது. பெண்ணின் பார்வை (Gazc) சிறப்பான ஓர் அம்சமாக உள்ளது. மொனாலிசாவின் பார்வை பல உணர்வுகளின் சேர்மானத்தைக் காட்டும் ஒரு சந்தர்ப்பமாகும் என்பது விமர்சகர்களின் கருத்தாகும். மொனாலிசா ஓவியத்தில் முகத்தின் பகுதிகளை நுணுகி நோக்குகையில் கலைஞர் அதற்காக சுவுமொரோ (Sfumoto) உத்தியைக் கையாண்டுள்ளமையைத் தெளிவாக இனங்காண முடிகின்றது.
மொனாலிசாவின் முகமும் உடலின் முன்புறத்தே வைத்துக்கொண்டிருக்கும் இரு கைகளும் முன்புறமிருந்து வரும் ஒளியினால் ஒளியூட்டம் பெற்றுள்ளன. உடலின் உருண்ட திரண்ட தன்மையைக் காட்டுவதற்கும் ஓவியத்தைச் சமநிலைப்படுத்துவதற்கும் மிகச் சிறப்பாக ஒளி பயன்படுத்தப்பட்டுள்ளது. உருவத்தின் நிறங்கள் சமச்சீராகவும் சமனிலையாகவும் ஒன்றுடனொன்று இணைந்து செயற்படலானது அக்கோட்பாடுகளுக்கு இடையே உள்ள இடைத் தொடர்பாகிய சேர்மானத்தன்மையை நன்கு வெளிப்படுத்தி நிற்கிறது.
மொனாலிசா என வழங்கப்படும் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள பெண் உருவம் யாருடையது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வசாரி எனும் கலை வரலாற்றாசிரியரின் எழுத்தாக்கங்களுக்கமைய பிரான்செங்கோ ஜியோகொன்டா இனது மனைவியாகிய லீசாவினுடைய உருவமே இது என பலர் நம்புகின்றனர். கூடவே இது பெண்மைத்தன்மையுடன் காட்டப்பட்ட லியானாடோ டாவின்சியின் அல்லது அவரது தாயாரின் உருவமாக இருக்க இடமுண்டு எனச் சில கலை விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இறுதிப் போசன விருந்து
இறுதிப் போசன விருந்து எனும் இந்த ஓவியம் மிலான் நகரில் லுடொவிக்கோ இல்மோரே எனும் வமிசாதிபதியின் கீழ் சேவையாற்றும் காலத்திலேயே லியனாடோ டாவின்சியால் வரையப்பட்டுள்ளது. 13.9 அடி அகலமும் 29.10 அடி நீளமுமுள்ள இந்தச் சுவரோவியம் அவ்வமிசாதிபதியின் குடும்பத் தேவாலயமாகிய புனித மரியா தெலா கிரேசி தேவாலயத்தின் ஆச்சிரமத்தின் போசன கூடத்தில் வரையப்பட்டுள்ளது. இது ரெம்பறா ஊடகத்தைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.
இயேசு தனது சீடர்களுள் ஒருவரால் தான் காட்டிக்கொடுக்கப்படுவேன்” என்று கூறியவுடன் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையே இந்த ஓவியத்தின் விடயப் பொருளாக உள்ளது. யூதாஸ் எனும் காட்டிக்கொடுப்பவனின் முகத்தில் காணப்படும் ஆவல், ஏனைய சீடர்கள் ஒருவரோடொருவர் உரையாடும் விதம், இயேசு பிரான் மிகச் சாந்தமாக அமர்ந்திருக்கும் விதம் ஆகியன இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தப் படைப்பாக்கத்தில் உணர்வு வெளிப்பாட்டை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த டாவின்சி முயற்சி செய்துள்ளார்.
நேர்கோட்டு தூரதரிசனத்தின்படி (Lincar Perspective) வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தின் மறைவுப் புள்ளியில் (vanishing point) இயேசு பெருமானின் தலை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதோடு, இரு புறத்திலும் சீடர்கள் பன்னிரண்டு பேரும் நான்கு குழுக்களாகப் பிரித்து செல்லும் வகையில் வரையப்பட்டுள்ளது. மேலும் இயேசு பெருமானின் தலையின் பின்புறத்தே உள்ள திறந்த பகுதி, தலையைச் சூழவுள்ள ஓர் ஒளிவட்டம் போன்று காட்சியளிக்கின்றது. டாவின்சி, பெரும்பாலும் ஓவியத்தில் மனித உருவங்களை வரைந்து அதற்கு ஒப்பானவாறு பின்னணியைத் திட்டமிட்டுள்ளமையால் ஓவியத்தின் . பின்னணிக்கும் முன்னணிக்கும் இடையே சீரான தொடர்பு காணப்படுகின்றது. சுவர்களுக்கிடையே சீடர்களின் உருவங்கள் ஒளிபொருந்தியதாகக் காட்டப்பட்டுள்ளன.
கியரொஸ்குரே (Chiaroscuro) நிறந்தீட்டும் கோட்பாட்டின்படி வர்ணந்தீட்டும்போது கபில வர்ணத்தின் வெவ்வேறு சாயல்களைக் கொண்ட இருண்ட வர்ணத் தொடரானது முப்பரிமாண இயல்புகளுடனும் தூரதரிசன இயல்புகளுடனும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தின் ஒட்டுமொத்த உருவங்களின் தொகுதியானது பெரிதும் நாடகப் பாணியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. முன்னணியில் பதியும் ஒளிக் கற்றைகளால் மனித உருவங்களும் முனைப்புறுத்தப்பட் டுள்ளன. அனைவரது கவனமும் இயேசுவை நோக்கியதாக இருந்தபோதிலும் அவர் அக் குழப்பகரமான தோற்றப்பாடுடன் தொடர் புறுவது கிடையாது. பெரிதும் மானிடப் பண்பு களுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஓர் ஓவிய மாக இதில் ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட முன்னர் நிலவிவந்த தெய்வ வாத இயல்புக ளாகிய அழகிய ஒளிவட்டங்கள், தேவ தூதர்கள், எடுப்பான பின்னணிக் காட்சிகள், தெய்வீக ஒளி போன்றவை தவிர்க்கப் பட்டுள்ளன. அதற்குப் பதிலாக இயேசு சீடர் களும் நிஜ உலகில் மனித உருவத்தில் காட்டப்பட்டுள்ளனர்.
பாறைகளின் கன்னி மரியாள்
இது கன்னி மரியாள். குழந்தை இயேசு, புனித யுவான் (ஜோன்), தேவ தூதுக் கன்னிகை ஒருவர் ஆகியோரைக் காட்டுகின்ற நான்கு மனித உருவங்களைக்கொண்ட ஓர் ஓவியமாகும். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் கருணை, இரக்கம், தாய்மை போன்ற பல்வேறு வெளிப்பாடுகளின் சேர்மானமாக இந்த ஓவியத்தைக் குறிப்பிடலாம். பாறைகளின கன்னி மரியாள்’ ஓவியத்தின் கருப்பொருளின் அர்த்தம், கன்னி மரியாள் கருத்தரித்தலும் குழந்தை இயேசுவை வளர்த்தலும் தந்தையின்றி நிகழ்ந்தமையை உவமையாகக் காட்டுவதாகும்.” என்பது கலைவிமர்சகர்களின் கருத்தாகும்.
இந்த ஓவியத்தின் மத்தியில் கன்னி மரியாளும் அவரது வலது புறத்தே குழந்தை இயேசுவும் இடது புறத்தே யுவானுடன் தேவதூதுக் கன்னிகையும் கூம்பக வடிவ மாதிரி யொன்றின் மீது வரையப்பட்டுள்ளனர். இவ்வாறான கூம்பக மற்றும் முக்கோண வடிவ அமைப்பைக் கொண்ட ஓவியங் களை டாவின்சியின் ஆக்கங்களில் பரவலாகக் காணலாம். இம்மாதிரியினுள் கன்னிமரியாளினதும் புனித யுவானினதும் தேவ தூதுக் கன்னிகையினதும் கவனம் குழந்தை இயேசுவின் மீது ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் மறுமலச்சிக் காலத்திற்கு முற்பட்ட காலக் கலைஞர்கள் மடோனா உருவங்களில் பயன்படுத்திய ஒளிவட்டம் இவ்வோவியத்தில் காணப்படுவ தில்லை. எனினும் குழந்தை இயேசுவினது உருவத்தில் மாத்திரம் மிக மெல்லிய கோடுகளாலான மறைவானதோர் ஒளிவட்டம் இடப்பட்டுள்ளது.
குன்றின்மீது கன்னி மரியாள் எனும் இந்த ஓவியத்தின் பின்னணியில் தாவரங்களும் வெவ்வேறு வடிவங்களினாலான கறதூண்களும் காட்டப்பட்டுள்ளதோடு, தூரதரிசன இயல்புகளுடன் நீண்ட நிலத்தோற்றக்காட்சி அதன் மூலம் காட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் பின்னணியில் ஒளி பதியப் பட்டுள்ள தன்மை சிறப்பானது. பின்னணி மர்மமயமான (mysterious) அடிவானத்தைக் கொண்ட ஓர் உலகு காட்டப்பட்டுள்ளது. கடினமான தன்தந்தனிமையான விநோதமான (fantacy) தன்மையை வெளிப்படுத்தும் பின்புலமானது மனித உருவங்களின் பாவ வெளிப்பாட்டைப் பெரிதும் உக்கிரப்படுத்தியுள்ளது. இந்த ஓவியத்தில் பிரதானமான இரண்டு ஒளி முதல்களை இனங்காண முடிகின்றது. ஓவியத்தின் பின்புலத்தில் மலை உச்சிகளினூடாக சூரிய ஒளி போன்ற ஒளியைக்காண முடிகின்றது. எனினும், ஓவியத்தின் வலது புறத்தே முன்னாலிருந்து பாயும் பிரகாசமான ஒளிக்கற்றைகளினாலேயே கன்னி மரியாள் உட்பட ஏனைய உருவங்கள் ஒளியூட்டம் பெற்றுள்ளன. இது ஒரு புறத்தே தேவலோக ஒளி தொடர்பான உணர்வையும் ஏற்படுத்துகின்றது. ஒளி பரவியுள்ள தன்மை, பின்புலத்தில் உள்ள அசாதாரணமான வடிவங்களைக் கொண்ட மலை உச்சிகள் என்பன காரணமாக இந்த ஓவியம் ஒருவித வினோதமான, மறைவான தன்மையைப் பெற்றுள்ளது.
இருளில் இருந்து ஒளியை மிக முனைப்பாக வெளிப்படுத்துவதில் டாவின்சி கொண்டிருந்த முதிர்ச்சியை இந்த ஓவியம் எடுத்துக் காட்டுகின்றது. இருண்ட பின்னணியில் மான வலியுறுத்திக் கன்னி மரியாளினதும் குழந்தை இயேசுவினதும் முகங்கள் பெரிதும் ஒளிபொருந்தியதாகக் காட்டப்பட்டுள்ளன. எனவே இது கியரொஸ்கியுரோ (Chiaroscuro) வர்ணந்தீட்டல் முறை நன்கு வெளிக்காட்டப்படும் ஓர் ஓவியமாகும். கபில நிறத்தின் வெவ்வேறு சாயல்களைக் கொண்ட இருண்ட நிறத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு முகத்தின் பகுதிகளை நுணுக்கமாகக் காட்டுவதற்காக டாவின்சியின் பிரபலமான ஓர் உத்தியாகிய சுவுமாரோ (Sfumoto) உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளமையை இனங்காண முடிகின்றது. மனித உருவங்கள் நான்கும் ஒளி பொருந்தியதாகக் காட்டப்பட்டுள்ளதோடு, அது தாய்மை, கருணை போன்ற பாவ வெளிப்பாட்டு நிலைமைகளை முனைப்பாகக் காட்டுவதற்குத் துணையாகியுள்ளது. அதற்கமைய இப்படைப்பில் கன்னி மரியாளின் முகத்தில் கருணை உணர்வும் குழந்தையின் மென்மை இயல்பும் நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன.