லியனாடோ டாவின்சி

 • லியனாடோ டாவின்சி மறுமலர்ச்சிக் காலத்தில் உருவான சிறந்த புகழ்பெற்ற ஓவியராவார்.
 • இவர் கி.பி. 1452ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தின் வின்சி எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.
 • வெராச்சியோ எனும் ஓவியரிடம் ஓவியம் பயின்று தனது திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டார்.
 • ஓவியக்கலை மட்டுமல்லாமல் சங்கீதம், பொறியியல், கட்டட நிர்மாணம், புதிய நிர்மாணங்களை அமைத்தல் என்பவற்றிலும் நாட்டம் கொண்டு அவற்றில் தனது திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
 • இவரது ஓவியங்களுள்,
  ♦ பாறை மேல் கன்னி (Virgin of the rocks)
  ♦ இறுதி இராப்போசனம் (The last supper)
  ♦ மொனாலிசா (Monalisa)

  என்பன முக்கியமானவையாகும்.

பாறை மேல் கன்னி

 • கன்னி மரியாளும் இருபாலகர்களும் காணப்படுகின்றனர்.
 • கன்னி மரியாளுக்கு அருகில் இரு பாலகர்களும் ஒரு தேவதூதனும், மலைக்கு மேல் உள்ள ஒரு காட்சி இதனைப் பிரதிபலிக்கிறது.
 • முக்கோண மாதிரியின்படி அமைக்கப்பட்டுள்ளது.
 • கன்னி மரியாளின் முகத்தில் காருண்யம், பாலகர்களின் மென்மை என்பவற்றை ஓவியர் துல்லியமாக எடுத்திக் காட்டியுள்ளார்.
 • பின்னணியில் தாவரங்கள், பல வடிவங்களில் உள்ள மலைகள் காட்டப்பட்டுள்ளது.
 • தூரத்தில் காணக்கூடிய வகையில் பூமியையும் சித்தரித்துள்ளார். அதாவது தூரதரிசனம் உபயோகித்துள்ளார்.
 • ஒளி நிழல் காட்டி வரைந்துள்ளார். அவர் பிரயோகித்த நுட்பமுறை அவரது முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
 • கன்னி மரியாளினதும் பாலகர்களினதும் முகத்தில் ஒளி காட்டப்பட்டுள்ளது.
 • இவரது வர்ணத் தீட்டல் நுட்பமுறை கியுரெஸ்கியுரோ (Chiaros curo) எனப்படுகிறது.
 • இருளான வர்ணங்கள் உபயோகித்துள்ளார். மண்ணிறத்தைப் பல விததில் பயன்படுத்தி உள்ளார்.
 • தற்சமயம் இவ்வோவியம் லண்டன் நகரிலுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி இராப்போசனம்

 • இது லியனாடோ டாவின்சியின் மற்றுமொரு உன்னத படைப்பாகும்.
 • மிலானைச் சேர்ந்த மரியா டெலா கிரசி டொமினிக்கன் துறவிகளின் இல்லச் சுவரில் டெம்பரா முறையில் (உலர்ந்த சாந்தின் மேல்) இது சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • மிகவும் உணர்வுபூர்வமாக இது வரையப்பட்டுள்ளது. சித்திரத்தின் மத்தியில் இயேசுநாதரும், இரு புறத்தில் பன்னிரு அப்போஸ்தலர்களும் வரையப்பட்டுள்ளனர். இயேசு நாதரை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்பவர் முகத்தில் குற்ற உணர்வு வெளிப்படுகிறது.
 • கியுரெஸ்கியூரோ எனும் ஒளி – இருள் வர்ணக் கோட்பாட்டின்படி மத்தியில் இருக்கும் இயேசுநாதர் ஒளி பொருத்தியாவராகவும் ஏனையோர் இருண்ட வர்ணங்களாலும் வரையப்பட்டுள்ளனர். இது ஓவியரின் திறமையை எடுத்துக் காட்டுகிறது.
 • கபில வர்ணத்தின் வெவ்வேறு சாயல்களைக் கொண்ட இருள் நிறங்கள், முப்பரிமாண இயல்பினையும், தூரதரிசன இயல்பினையும் வெளிப்படுத்துமாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.

மொனாலிசா

 • லியனாடோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றான மொனாலிசா ஓவியம் பிரான்ஸ் நாட்டில் லூவர் நூதனசாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 • மொனாலிசா பொப்லர் எனும் வகைப் பலகையில் எண்ணெய் வர்ணத்தினால் வரையப்பட்டுள்ளது.
 • பிரான்சிஸ்கோ ஜியோ கொண்டா எனும் வணிகனின் மனைவியினது மெய்யுரு (Portrait) என ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்வோவியம் பற்றி வேறு கருத்துக்களும் கூறப்படுகின்றன.
 • இவ்வோவியத்திலும் தூரதரிசனம் செம்மையாகக் காட்டப்பட்டுள்ளது. தூரத்தில் நிலவுருக்காட்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது.
 • முகம், மார்பு கைகள் எனும் பகுதிகளுக்கு ஒளி காட்டப்பட்டுள்ளது.
 • மொனாலிசாவின் மென்மையான புன்னகையும், எங்கிருந்து பார்த்தாலும் பார்வையாளனைப் பார்ப்பது போன்ற பார்வையும் இரசிப்பவர்களை இன்றும் கவருகின்றன.
பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………………
2. கலைஞர் : ……………………………………………….
3. ஒழுங்கமைப்பு : ……………………………………
4. வர்ண நுட்பம் : ………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………….

1. இனங்காண்க : ………………………………………
2. காணப்படும் இடம் : ……………………………
3. கருப்பொருள் : ………………………………………
4. நுட்பமுறை : ………………………………………….
5. உணர்வு வெளிப்பாடு : ……………………….

1. இனங்காண்க : ………………………………………
2. ஊடகம் : ………………………………………………….
3. கருப்பொருள் : ………………………………………
4. சிறப்பம்சம் : …………………………………………..
5. உணர்வு வெளிப்பாடு : ……………………….

error: Content is protected !!