லஸ்கோ குகை (Lascaux )

பிரான்சில் மொன்ரினக்குப் பிரதேசத்துக்கு அண்மையில் அமைந்துள்ள இக்குகை கி.பி. 1310 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குகையில் காணப்படும் ஓவியங்கள் கி.மு. 20,000 – 17.000 காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றது. (மேல் கற்காலம்) இது ஒரு பெரிய குகைது தொகுதியாகும். அதன் பிரவேசவாயில் சிறியதாக இருப்பினும், குகையின் உள்ளே வெவ்வேறு திசைகளில் பரந்து விரிந்த குகைகளைக் கொண்டமைந்துள்ளது. இக்குகையின் உட்புறச் சுவர்கள் மற்றும் உட்கூரை முழுவதிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

லஸ்கோ குகை ஓவியங்களின் விடயப் பொருள்களாக விலங்கு உருவங்கள், மானிட உருவங்கள் இனங்காணப்படாத வெவ்வேறு குறியீடுகள், அடையாளங்கள் ஆகியன அமைந்துள்ளன. இங்கு காணப்படும் விலங்கு உருவங்களுள் மிகப் பிரபல்யமான உருவம் “பைசன் எருது” உருவமாகும். 17 அடி நீளமான பைசன் எருது உருவம் அவற்றுள் சிறப்பானது. எருது உருவம் தவிர, குதிரை, ரைனோசிரஸ், மான் ஆகிய விலங்கு உருவங்களையும் காண முடிகின்றது. தனித்தனி விலங்கு உருவங்களையும் கூட்டான விலங்கு உருவங்களையும் இங்கு பரலாகக் காண முடிக்கின்றது.

17 அடி நீளமான எருது உருவம்
பைசன் எருதுகள்

லஸ்கோ குகையினுள் மனித உருவ ஓவியங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. அவற்றுள் ”இறந்த மனிதன் ஓவியம்” எனும் ஆக்கம் சிறப்பானது. இது ஒரு மனிதன் தாம் கண்ட அனுவத்தை ஒரு நிகழ்வைக் காட்டும் ஓவியம் என்ற வகையில் சிறப்பான வெளிப்பாடாக அமைந்துள்ளது.

Man with a bied’s head
வேட்டை சந்தர்ப்பத்தைக் காட்டும் உருவங்கள்

முன் – கற்கால மனிதன் வரைந்துள்ள ஓவியங்களுள் வெவ்வேறு கேத்திர குறியீடுகளும் தாராளமாகக் காணப்படுகின்றன. எனினும் அவற்றின் திட்டவட்டமான பொருள் விளக்கம் விவாதத்துக்குரியதாகவே உள்ளது.

நுட்பமுறைகள்

இக்குகையில் உள்ள ஓவியங்களைப் படைப்பதற்காக நான்கு நுட்பமுறைகள் கையாளப் பட்டுள்ளனமையை இனங்காண முடிகின்றது.

1. கோட்டு வரைதல் (Line drawing)
2. வர்ண ஓவியம் (Painting)
3. கற்சுவரைக் கீறி ஆக்கிய உருவங்கள் (Engraving)
4. அச்சுப் பதித்த கை, கால் அடையாளங்கள் (Hand and Foot prints)

லஸ்கோ கையினுள் கோட்டு வரைதல்களும் (Line drawing), வர்ண ஓவியங்களுமாக (Painting) ஏறத்தாழ 600 ஆக்கங்களும் கற்சுவரைக் கோடுகளாகக் கீறி (Engraving) அமைந்த ஏறத்தாழ 1500 உருவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Engraved Deer
Engraved Bearded horse

கற்சுவரைக் குடைந்து ஆக்கிய உருவங்கள் (Engraving)

கலைத்துவப் பண்புகள்

லஸ்கோ குகை ஓவியங்களின் மோடி மற்றும் கலைத்துவப் பண்புகளைப் பின்வருமாறு விளக்கலாம். பேதங்கள் அடங்கலாக வர்ணங்களைக் கையாளல், உயிரோட்டமாக கோடுகள் வரைதல், முப்பரிமான இயல்புகளைக் காட்டுதல், சித்தரித்தல், அளவுப்பிரமாண அமைவான தன்மை, இயற்கைத் தன்மை, சரியான விலங்கு உடல்நிலைப் பயணம், உயிரோட்டத்தன்மை ஆகிய இயல்புகளை இந்த ஓவியங்களில் காண முடிகின்றது.

குகைச் சுவர்களில் விலங்கு உருவங்களைச் சித்தரிக்கும் திறமையை அதிகமாகவே அவர்கள் கொண்டிருந்தமையை இந்த ஓவியங்களைக் கற்றாய்வதன் மூலம் அறிய முடிகின்றது. கல் மேற்பரப்பின் தன்மைக்கேற்ப, விலங்கு உருவத்தை இடப்படுத்தும் திறமையும் கல்மேற்பரப்பின் தளவுருவத்துக்கு ஏற்றவாறு அவ்விலங்கின் உடல்நிலையை அதாவது இயல்பான நிலைமையை வெளிப்படுத்திக் காட்டும் திறமையும் அவற்றுள் தெள்ளத்தெளிவானவை. உதாரணமாக கற்சுவரில் வெளித்தள்ளி அமைந்துள்ள இடங்களை, பைசன் எருதின் வயிற்றுப் பகுதியாகப் பொருத்தியமைத்துள்ள சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். அத்தோடு, கரடுமுரடான கல்மேற்பரப்பை விலங்குகளின் என்புத் துண்டுகளைக்கொண்டு ஓவியம் வரைவதற்குப் பொருத்தமானதாக மட்டப்படுத்தியுள்ள சந்தர்ப்பங்களையும் காண முடிகின்றது.

ச்சுப்பதித்த கை அடையாளங்கள் (Hand prints)

இந்த ஓவியங்களுள் கோடுகளைப் பயன்படுத்தி வரைந்த பிராணி உருவங்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. அவ்வாறு பயன்படுத்தியுள்ள கோடுகளின் கருத்து வெளிப்பாட்டுத்தன்மை மிகக் காத்திரமானது. அக்கோடுகளின் மூலம் பிராணி உருவத்துக்குச் சிறப்பாக உயிரூட்டப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றுக்கு முந்திய மானிடனின் திறமையை நன்கு வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக உயிரோட்டமான கோடு வரைதலைக் கருதலாம்.

Aurochs and Deers

லஸ்கோ ஓவியனின் படைப்புக்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கலைத்துவமான நுட்பமுறையாக காணப்படுவது வர்ணந்தீட்டலாகும். இதற்காக வரையறைப்பட்ட வர்ணத் தொகுதியே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் சிவப்பு, கறுப்பு, கபிலம், ஊதா ஆகிய நிறங்களையே தெள்ளத் தெளிவாகக் காண முடிகின்றது. இவ்வர்ணங்கள் விரல்களினால் பூசுதல், பிராணிகளின் உரோமங்களைக் கொண்டு பூசுதல், வாயினுள் அல்லது குடைவான எலும்புத்துண்டுகளுள் சாயத்தை நிரப்பி உருவின் மீது சிவிறி அல்லது தெளித்து வர்ணந்தீட்டுதல் போன்ற வெவ்வேறு முறைகளில் தீட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான ஓவியங்களில் வர்ணங்கள் தொட்டம் தொட்டமாக இடப்பட்டிருத்தலும் வர்ணச் சேர்மானமும், பிராணிகளின் இயற்கையான வர்ணங்களின் வெளிப்பாடும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. சில பைசன் எருதுகளின் இயல்பான வர்ணமாகிய சிவப்பு மற்றும் கறுப்பு வர்ணங்கள் தெளிவாகப் புலப்படுமாறு அவ் வர்ணங்கள் தொட்டம் தொட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, சில எருதுகளின் உருவங்களில் இந்த இரண்டு வர்ணங்களும் ஒன்றுடனொன்று கலந்து முப்பரிமாண இயல்புகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும் காணமுடிகின்றது.

லஸ்கோ ஒவியங்களுள் கற்சுவரைக் கோடுகளாகக் குடைந்து பிராணி உருவங்களை உருவாக்கி, பின்னர் வர்ணந்தீட்டி அமைக்கப்பட்ட ஓவியங்களும் காணப்படுகின்றன. திட்டவட்டமாக வடிவங்களை வெளிப்படுத்தி அதன்மீது வர்ணந்தீட்டும் திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது.

லஸ்கோ குகை ஓவியங்களில் காணப்படும் மற்றுமொரு சிறப்பியல்பு, பிராணிகளின் சரியான உடல்நிலைகளையும் அளவுப் பிரமாணத்தையும் காட்டியிருத்தலாகும். இந்த ஓவியங்களில் உள்ள உருவங்கள் பெரும்பாலும் 5 அடி தொடக்கம் 17 அடி வரையிலான வெவ்வேறு அளவுகளைக் கொண்டவையாகும். அளவு வேறுபட்ட போதிலும் பிராணியின் சரியான இயல்புகளும் அளவுப் பிரமாணத்தன்மையும் பேணப்படும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பிராணியையும் மிக நன்றாக இனங்காணத்தக்கவாறாக அவற்றின் தன்மைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் ஓர் உருவத்தின் பின்னால் மற்றுமொரு உருவத்தைக் காட்டுதல், பிரணிகளின் பின்னங்கால்களைக் காட்டுதல் மூலம் கட்புல அவதானிப்பு (Optical Observation) தொடர்பான காட்சி முன்வைக்கப்பட்டுள்ளது.

சரியான மெயந்நிலைகளும் பின் கால்களைக் காட்டுதலும், ஓவியங்களின் பின்னால் இன்னொரு உருவத்தைக் காட்டுதல்.
Main Hall
error: Content is protected !!