ராஜா ரவிவர்மா (1848 – 1906)
இவர் 19 நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியிலும் படைப்பாக்கத்தில் ஈடுபட்ட முக்கியமான ஓர் இந்திய ஓவியர் ஆவார். ராஜா ரவிவர்மா தென்னிந்திய மேட்டுக் குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஓர் ஓவியக்கலைஞர் ஆவார். ரவிவர்மாவினது பிரதான ஓவிய ஊடகம் தைல வர்ணம் ஆகும். இந்த கலைநுட்ப மரபை முன்னெடுத்த முதலாவது இந்தியக் கலைஞரும் இவரேயாவார். திருவங்கூர் மகா ராஜாவின் மாளிகைக்கு வருகைதந்த ஐரோப்பிய ஓவியக் கலைஞர்கள் மூலமே இவர் தனது கலைத்திறமையை வளர்த்துக் கொண்டார். தைல வர்ணத்துடன் ஐரோப்பிய அக்கடமிக் கோட்பாடுகள் பற்றி, ஒல்லாந்தைச் சேர்ந்த உருவப்படக் கலைஞ ராகிய தியடோ ஜான்சனிடம் அவர் பயின்றார்.
இந்திய தனவந்தர்களின் உருவப் படங்களையும் இந்தியாவின் பண்டையச் சிறப்பை மீண்டும் எடுத்துக் காட்டும் ஓவியங்களையும் அவர் படைத்துள்ளனர். அப்படைப்பாக்கங்களின் கருப்பொருள் உள்ளடக்கத்திற்கு அடிப்படையாக, வீர காவியங்களும், இலக்கியப் படைப்புக்களுமே அமைந்தன. அவர் வரைந்த ஓவியங்கள் பிற்காலத்தில் லித்தோகிராப் (Lithograph) முறையில் அச்சிடப்பட்டமையால் அவ்வாறு அச்சிடப்பட்ட பிரதிகள் பொதுமக்களிடத்தே பெரிதும் பிரபல்யமடைந்தன. அது, பொதுமக்களிடையே ராஜா ரவிவர்மா பிரபல்யம் வாய்ந்த ஒருவராக உருவாகக் காரணமாகியது. அத்தோடு, ஐரோப்பிய அக்கடமிக் விதிகளை, மிகச் சிறப்பாக இந்தியாவிற்குரிய விடய உள்ளடக்கங்களைச் சித்தரிப்பதற்காகப் பயன்படுத்திய, முதன்மையான, பிரபல்யமான கலைஞர் இவரேயாவர். அக்கடமிக் கலையினது கோட்பாடுகளுடன் ஒன்றாகிய, இயற்பண்பில் யாதேனும் பொருளின் தன்மையைப் பெரிதும் பூரணப்படுத்துவமுடையதாகவும் கலைத்துவமுடையதாகவும் கன்வசு மீது கட்டியெழப்பபட்டடிருத்தலானது இவரது பெரும்பாலான ஓவியங்களில் காணப்படும் ஓர் இயல்பாகும்.
ரவிவர்மாவினது ஓவியங்களின் கருப்பொருள்கள் பரந்தளவில் பரம்பியுள்ளன. இந்தியத் தெய்வங்கள், இந்தியப் புரானக் கதைகளில் இடம்பெறும் நிகழ்வுகள், உருவப்பட ஓவியங்கள், இந்திய மக்களின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்கள் போன்றவற்றையும் ரவிவர்மா தமது ஓவியங்களின் கருப்பொருள்களாகக் கொண்டுள்ளார். இவற்றுள், தெய்வங்களையும், புராணக் கதைகளையும் கருப்பொருள்களாகக் கொண்ட ஓவியங்களே பெரிதும் பிரபல்யமடைந்தன. இவரது ஓவியங்களுள் பிரபல்யம் மிக்கவையாக, சரஸ்வதி தெய்வம், லக்ஷ்மி தெய்வம், இந்திரஜித்தின் வெற்றி, சகுந்தலா, நள-தமயந்தி, குறவர் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 1873 இல் வியானா கலைக் கண்காட்சியில் பரிசு பெற்றமையானது ரவிமர்மாவினது புகழ் அதிகரிப்பதற்குக் காரணமாகியது. மேட்டுக்குடிய பாம்பரையைச் சேர்ந்த ஒருவராக இருந்ததோடு, ஓவியக் கலையை பொதுமக்களிடத்தே பிரபல்யப்படுத்துவதற்காக கணிசமான பங்களிப்பைச் செய்த ஓர் ஓவியராகவும் இவரை இனங்கண்டு கொள்ளலாம்.
ரவிவர்மாவினது ஓவியங்களின் பொதுப் பண்புகள்
இவர் ஐரோப்பிய அக்கடமிக் கலைக் கோட்பாடுகளைப் பயன்படுத்தியுள்ளார். அதற்கமைய முப்பரிமாண இயல்புகள், ஒளி-நிழல், தூரதரிசனம், தடிப்பு போன்ற இயல்புகள் வலியுறுத்தப்படும் வகையில் பொருள்கள் பெரிதும் பூரணத்துவமானவாறு கன்வசுமீது மீள உருவாக்கஞ் செய்தலுக்கு முதன்மையிடம் வழங்கியுள்ளார்.
ரவிவர்மானது முதன்மையான வெளிப்பாடுகளில் மனித உருவங்கள் முக்கியம் பெறுகின்றது. அவர் மனித உருவினால் வெளிப்படுத்தப்படும் அடிப்படையான உணர்வுக்குத் துணையாக அமையும் வகையிலேயே நிலத் தோற்றங்களை/பின்னணியைப் பயன்படுத்தியுள்ளனர். இந்திய புராணக் கதைகள், இந்திய சமூகம் மற்றும் மக்கள் வாழ்க்கை தொடர்பான கருப்பொருள்களுக்கே முதன்மையிடம் வழங்கியுள்ளார். நிஜமான மாதிரிகளைப் பயன்படுத்தியே ரவிவர்மா தனது ஓவியங்களைக் கட்டியெழுப்பியுள்ளார். அவரால் வரையப்பட்ட தேவதை உருவங்கள் கூட இந்திய பெண்களின் உயிரோட்டமான நிஜமான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
ஐரோப்பிய அக்கடமிக் விதிகளின்படி இந்திய கருப்பொருள்களைச் சித்திரிக்கும் பாணியை சில விமர்சகர்கள் அங்க்லோ – இந்திய (Anglo – Indian) பாணி என குறிப்பிடுகின்றனர். ரவிவர்மாவினது ஓவியங்களில் கட்டுப்படுத்தப்பட்ட ஒளி நிழல் காணலாம். இயற்கை ஒளிக்குப் பதிலாக உருவங்களின் தேவையான பகுதிகளை வலியுறுத்திக் காட்டுவதற்காகப் பொருத்தமானவாறு ஒளி நிழல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சரஸ்வதி தெய்வம் (Goddess Saraswathi)
இது ரவி வர்மாவினால் வரையப்பட்ட இந்திய தெய்வங்களில் பெரிதும் பிரபல்யமடடைந்த ஓர் ஓவியமாகும். 1896 இல் தைல வர்ணத்தைப் பயன்படுத்தி, இது வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் லித்தோகிராபிக் அச்சுப் பிரதிகள் பொதுமக்களிடையே பெரிதும் விற்பனையாயின. கலைக்கு அதிபதியாகக் கருதப்படும் சரஸ்வதிதேவி, வீணையொன்றினை மீட்டிக் கொண்டிருக்கும் விதம் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. இத்தேவதை நான்கு கைகளைக் கொண்டுள்ளதோடு, முன்னே உள்ள கைகளால் வீணையை மீட்டுவது சித்திரிக்கப்பட்டுள்ளது. மற்றைய கைகளில் மாலையொன்றும் நூலொன்றும் தாங்கப்பட்டுள்ளன. சரஸ்வதி தேவியின் கண்கள் பார்ப்போரைப் நோக்கியவாறு அமைந்துள்ளன. உயிரோட்டமான மாதிரியை துணையாகக் கொண்டே, சரஸ்வதியின் உருவத்தை ஓவியர் கட்டியெழுப்பியுள்ளார். சரஸ்வதி தேவியின் இலட்சிய அழகை வெளிப்படுத்தும் வகையில் சித்திரிக்க ஓவியர் முயற்சித்துள்ளார். சரஸ்வதி தேவதையின் உதடுகளில் மெல்லிய புன்னகை காணப்படுகின்றது. இந்தியப் பெண்களைப் போன்று தடித்த புருவங்கள் உள்ளதோடு, நெற்றியில் பொட்டும் உள்ளது. தலையில் அழகிய கிரீடம் உள்ளது. பொன்னிறக் கரையைக் கொண்ட ஆடம்பரமற்ற வெண்ணிறமான ஓர் இந்தியச் சேலையே சரஸ்வதி தேவி அணிந்துள்ளார்.
இந்த ஓவியத்தின் பின்னணியை நோக்குகையில் அங்கு சூரியோதயத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒளி நிழல் காணப்படுகின்றது. ஓவியத்தின் வலதுபுற வெளியில், சூரியன் உதிக்கும் போது தோன்றும் வர்ணக் கலவையைக் கொண்ட பின்னணி காணப்படுகின்றது. சூரியோதயத்துடன் பின்பறத்தே உள்ள ஆற்றில் செந்நிறத் தாமரைப் பூக்கள் மலர்ந்தது சரஸ்வதி தேவதையைக் கவனமெடுக்கும் வகையில் அழகிய மலர்ச்சியான பின்னணியாக உருவெடுத்துள்ளது. தெய்வத்தின் உடலுறுப்புக்களை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒளி பின்புறத்தேயிருந்தன்றி முன்புறத்திலிருந்தே கிடைக்கின்றது. தெய்வத்தின் முழு உடலும் துலங்குமாறு வரையப்பட்டுள்ள. இந்த ஓவியம் பாரம்பரியமான புராணக் கதைகளில் வரும் வியடங்கள் மூலமும் போசிக்கப்பட்டு, ரவிவர்மாவினால் புதியதொருவிதத்தில் படைக்கப்பட்ட ஓர் படைப்பாக இதனைக் குறிப்பிடலாம்.
இந்திரசித்துவினது வெற்றி (Victory of Meghanada)
புராணக் கதையொன்றினைத் தழுவி ரவிவர்மாவினால் வரையப்பட்ட ஓவியத்துக்கான ஓர் உதாரணமாக இதனைக் குறிப்பிடலாம். இந்திரசித்து இராவணனின் புதல்வன் ஆவான். இவன் மேகநாதன் எனவும் அழைக்கப்படுகின்றான். இராமாணயத்தின்படி அவர் இலங்கையில் இருந்த திறமைமிக்க ஒரு போர்வீரன் ஆவார்.. இராவணனது புதல்வனுக்கு சிவ யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக சகல தேவலோக ஆயுதங்களையும் பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. இராமன் இராவணன் யுத்தத்தில் சிந்தித்து பெரும்பங்காற்றியதோடு, அவன் இரண்டு தடவைகள் இராமனையும் இலட்சுமணனையும் தோற்கடிக்க முடிந்தது.
ரவிவர்மா இந்த ஓவியத்தை 1905 இல் தைல வர்ணத்தினால் வரைந்துள்ளார். இந்த ஓவியம் அக்கடமிக் விதிகளுக்கமைய வரையப்பட்டுள்ளது. ஒளியையும் இருளையும் காட்டுதல், தூர தரிசன் கோட்பாடுகளின் பயன்பாடு, நிழல்களைக் காட்டுதல், முப்பரிமாண இயல்புகளைக் காட்டுதல் போன்ற இயல்புகளை இந்த ஒவியத்தில் இனங்காண முடிகின்றது. ஓவியத்தின் நடுவே குடையின் கீழ் இருப்பது இராவணன் ஆவான். அவன் எடுப்பான உடல்நிலையுடன் கதாயுதம் மீது கையை வைத்தவாறு எதிரே வந்துள்ள தூதுவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஓவியத்தின் முன்னணியில் கையில் வில்லுடன் இருப்பவன் இந்திரசித்து ஆவான். இந்திரசித்துவின் எதிரே. பெண்ணொருத்தியை அரச மண்டபத்துக்குக் கொண்டுவந்த கறுப்புநிற மனிதன் ஒருவன் உள்ளான். இராவணனதும் இந்திரசித்துவினதும் கவனம் அவர்கள் இருவர் மீதே குவிந்துள்ளது. இந்திரசித்து தனது வலது கையின் சுட்டு விரலை நிலத்தை நோக்கித் திருப்பிவைத்து கட்டளை பிறப்பிக்கும் பாங்கில் காட்டப்பட்டுள்ளன. இராவணன், இந்திரசித்து ஆகிய இருவரும் அழகிய ஆடையணிகள் தரிசித்து, கிரீடமும் அணிந்துள்ளனர். கலைஞர் இப்பெண்ணின் அடை மடிப்புக்கள், ஆபரணங்கள் போன்றவற்றை இயற்கையான வகையில் சித்திரித்துள்ளார். இந்தப் பிரதான உருவங்களுக்கு மேலதிகமாக, சாமரம், கொடி போன்றவற்றை தாங்கியிருக்கும் சேவகர்கள் சேவகிகளும் பின்னால் காட்டப்பட்டுள்ளனர். இந்திரசித்துவினது வலது பாதத்துக்கு அருகே அழகிய பெட்டகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அரச மாளிகையிலிருந்து வெளியே செல்லும் வாசலுக்கு அண்மையிலேயே இடம்பெறுவதாகக் காட்டப்பட்டுள்ளதோடு, அப்படிவரிசையின் மேற்பகுதியில் வெண்ணிற ஆடையணிந்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் உருவம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. படிவரிசை, கட்டட வாசல் போன்ற பகுதிகளை ஐரோப்பிய கோட்டு தூரதரிசனம் மூலம் ரவிவர்மா கட்டியெழுப்பியுள்ளார். ஓவியத்தின் வலது புறத்தே சிவப்பு நிறக் கொடி ஒன்றினை உயர்த்திப் பிடித்து இருக்கும் சேவகன் ஒருவன் காட்டப்பட்டுள்ளான். இந்த ஒட்டுமொத்த நிகழ்வும் இந்திரசித்துவினதும் இராவணனினதும் வலிமையை வலியுறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது என கருதலாம்