மோடிப்படுத்தப்பட்ட மேடை நாடகமென்றின் ஓவியப் பண்புகள்
மோடிப்படுத்தப்பட் நாடகங்களின் விளக்கம்
- நாடக தர்மம், உலக தர்மம் என்று நாடகங்கள் இருவகைப்படும். இவற்றுள் மோடிப்படுத்தப்பட்ட நாடகங்கள் நாடக தர்ம வகைக்குரியன.
- நாடகத்தின் அனைத்து உரையாடல்களும், பாடல்கள் வடிவில் அமைந்தவையாகவும் இராகத்துடனான உரையாடல்களாகவும் இருக்கும். அத்துடன் நாடகத்தின் சகல அசைவுகளும் நடைகளும் இசைக்கேற்றவாறு சந்தத்துடன் நடைபெறும்.
- மனமே, சிங்கபாகு, பெரஹண்ட போன்ற நாடகங்களை உதாரணங்களாகக் கூறலாம்.
பின்னணியை வடிவமைத்தல்
- மோடிப்படுத்தப்பட்ட நாடக மேடையின் பின்னணி எளிமை யாகவும், அலங்காரமின்றியும் இருக்கும். சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான பின்னணியும் பாடல்களும் பார்வையாளரின் மனதைக் கதையின் பால் ஈர்த்துச் செல்லும்.
ஒப்பனை
- மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களின் ஒப்பனை (வேடம் பூணுதல்) செய்யப்படும் அக்கதாபாத்திரங்களுக்குரிய தன்மை, குண இயல்புகளை வெளிப்படுத்த முகத்துக்குச் சாயம் பூசுதல், வேறு அடையாளங்களை வரைதல், மீசை, தாடி, கேசம் ஆகியவை ஒட்டுதல் என்பன பெரும்பாலும் நடைபெறும் செயல்களாகும். சிங்கபாகு நாடகத்தின் சிங்கத்தின் கதாபாத்திரத்ததையும் மனமே நாடகத்தின் வேட அரசனின் கதாப்பாத்திரத்தையும் உதாரணங்களாகக் காட்டலாம்.
அரங்கப் பொருட்கள்
- மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களில் வரும் பலவித கதாபாத்திரங்களில் அதற்கான வகிபாகத்தை திறமையாக வெளிப்படுத்த அரங்கப் பொருள்கள் அத்தியாவசியமாகின்றன. அத்துடன் அவை நாடகத்துக்கு அழகையும் தருகின்றன.
- வாள், ஈட்டி, இரும்புகோல் எனும் பொருள்கள் இவற்றுள் அடங்கும்.
அரங்க ஆடையணிகள்
- நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களை மெருகூட்டவும் அவற்றை அழகுபடுத்தவும் ஆடையணிகள் பெரும் பங்காற்றுகின்றன.
- ஆடைகள், கிரீடம், நெற்றிப்பட்டம், அட்டியல், மாலை, தலைப்பாகை, வளையல்கள், தோடு, மோதிரம், சலங்கை, கொலுசு, சப்பாத்து என்பன இவற்றுள் அடங்கும்.
பயிற்சி வினாக்கள்
1. மோடிப்படுத்தப்பட்ட நாடகத்தின் இயல்பு யாது?
2. மோடிப்படுத்தப்பட்ட நாடகத்தில் ஒப்பணை செய்யும் விதத்தினை விளக்குக.
3. மோடிப்படுத்தப்பட்ட நாடகத்தில் அரங்கம், ஆடைகள் அலங்காரம் செய்யும் விதத்தினை விளக்குக.
4. மோடிப்படுத்தப்பட்ட நாடகத்திற்கு உதாரணம் தருக.