மேரி கசாற் (Mary Cassatt) 1844-1926

ஓவிய மற்றும் அச்சுக் கலைஞரான மேரி கசாற் 1877 – 1926 வரையிலான தசாப்தங்களில் மனப்பதிவுவாதக் கலைப் போக்கில் செயலூக்கத்துடன் செயற்பட்ட ஒருவர் ஆவர். அமெரிக்காவில் பிறந்த அவர், தமது கலைத்துவ ஆளுமையை பிரான்ஸ் நாட்டில் கட்டியெழுப்பிக் கொண்டார். மனப்பதிவுவாதக் கலைஞராகிய எட்கா டெகா இனது கலைத்துவ உத்திகளால் ஈர்க்கப்பட்ட அவர், டெகா இனது நெருங்கிய நண்பியாகவும் இருந்தார்.

மேரி கசாற் அமெரிக்கா சிவில் யுத்தக் காலத்தில் (1861-1865) பென்சில்வேனியாவில் லலித கலைக் கல்லூரியில் ஒவியக்கலை பயின்றார். அக்காலத்தில் அவரிடத்தே பெண்ணியல்வாத எண்ணக்கருக்களும் போகிமிய அதாவது நற்பழக்கங்களல்லாத நடத்தைப் பண்புகளும் விருத்தியடைய லாயின. இப்பண்புகள் காரணமாக கலைக்கல்லூரிக் கலை தொடர்பான ஆர்வம் அவரிடமிருந்து நீங்கத் தொடங்கியது. இறுதியில் கலைக்கல்லூரிக் கல்வியை இடைநிறுத்திய அவர், பிரான்சு நாட்டை அடைந்து மனப்பதிவு வாதப் போக்குடன் இணைந்துகொண்டார்.

மனப்பதிவுவாதக் கலைப்போக்கைச் சேர்ந்த கலைஞர்கள், பிரான்சில் பரிஸ் நகர களியாட்ட விடுதிகள் மற்றும் திறந்த வெளிக்காட்சிகளையும் சித்திரமாக வரைந்த வேளையில் மேரி கசாற் குடும்ப வாழ்க்கையுடன் இணைந்த சந்தர்ப்பங்களை ஓவியங்களாக வரைந்தார். அவரது பெரும்பாலான ஓவியங்கள் வீட்டைத் தழுவிய காட்சிகளாக அமைந்தன. அதாவது மனப்பதிவுவாத ஓவியக் கலைஞர்கள், பிரான்சின் நடுத்தர வர்க்கத்தினரின் களிப்புறும் திறந்தவெளி வாழ்க்கையை ஓவியமாக வரைந்த நிலையில், மேரி கசாற், பெண்ணைச் சூழ்ந்து காணப்படுகின்ற வீட்டு வாழ்க்கையை ஓவியமாக வரைந்தார். இச்செயன்முறை, ஐரோப்பிய ஓவியக்கலை வரலாற்றுக்கு முன்மாதிரியாக அமைந்தது. மேரி கசாற் மிகத் தெளிவாக, ஐரோப்பிய ஓவியக் கலையுடன் இணைந்து, தொல்சீர் மற்றும் கலைக் கல்லூரிக் கலைத் தனித்துவங்களைப் புறந்தள்ளினார். மனப்பதிவுவாத ஓவியம் வரைதல் முறையாகிய, நிறந்தீட்டும் போது திட்டுத் திட்டாக வர்ணமிடும் முறையைப் பயன்படுத்தினார். அதாவது மிகத் தெளிவாக. புறக்கோடுகளோ எல்லைக் கோடுகளோ இன்றிய நிறப் பயன்பாட்டை அவர் கையாண்டுள்ளார். ஓவியத்தின் முன்னணிக்கும் பின்னணிக்கும் இடையே அதுவரையில் காணப்பட்ட தெளிவான மாற்றத்தை மனப்பதிவுவாத முறையினால் புறந்தள்ளப்பட்டுள்ளது. அதாவது இயற்கையாகக் காட்டும் அக்கடமிக் முறையியலில் இருந்து விலகிச் சென்றது. அவ்வாறு விலகி, ஓவியம் என்பது கட்புல ஒன்றிணைப்பைக் கொண்ட ஒரு வர்ணப் புலமாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது எட்கா டெகா, ஓகஸ்தெ ரெனுலா போன்ற ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களில் காணக்கிடைக்கின்ற தான் தோன்றித் தனமாக வர்ணங்களையும் வடிவங்களையும் பொருத்தியமைக்கும் இயல்பை மேரி கசாற் இனது ஓவியங்களில் அவதானிக்க முடிகிறது.

Fil-kiss-lor-buby 11-17)–T897,

Breakfast in Bed – Mary Cassat

முதன்மையான ஒளி, மிக நுணுக்கமான பஸ்ரல் வர்ணங்கள். பெரிய வர்ணத் திட்டுக்கள். கறுப்பு நிறம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மேரி காசற் இனது ஓவிய அணுகுமுறையின் பிரதான அம்சங்க ளாகும். Little Girlin BlucArimchair-1878, The Childs Bath – 1893. Is Rosider – 1877 போன்றவை மேரி கசாற் வரைந்த ஓவியங்களுள் சிலவாகும்.

நீல நிற நாற்கலியலி சின்ன

ஞ்சிறுமி (1.ittle Girl in : Blue Armchair) -1878

இந்த ஓவியத்துக்கு வழங்கப்பட்டுள்ள தலைப்பின்படி, இதன் பிரதான உருவம் சிறிய பெண்பிள்ளை யொன்று கைகால்களை நீட்டி விரித்து. நீலநிறக் கைத்தாங்கிகள் உள்ள சௌகரியமாக ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ள காட்சியாகும். எனினும் உண்மையில் இந்த ஓவியத்தினால் காட்டப் பட்டிருப்பது அத்திட்டத்தில் உள்ள இறுக்கமான தன்மையும் அமைதியான தன்மையும் சிறிய பெண் பிள்ளையின் உருவத்தினாலும் செல்லப் பிராணியாகிய சிறிய நாய் உருவத்தினாலும் மறுதலிக்கப்பட்டுள்ளது. ஓவியத்தில் தெளிவான பிரதான உருவமாக பிள்ளையின் உருவம் தோற்றமளிக்காத போதிலும், அவ்வுருவத்தின் மூலம் பார்ப்போர் கவனம் செலுத்தப்படுகின்றது,

மேலும் ஓவியத்தின் நான்கு மூலைகளாலும் இருக்கை மகளில் முழுமைத் தோற்றம் மூலம் அறுத்து விடப்பட்டுள்ளது. அதன் மூலம் தொல்சீர் மற்றும் அக்கடமிக் கலையின் பிரதான செல்வாக்கிலிருந்து விடுபட்டுள்ளது. இந்தப் பண்பு காரணமாக 1878 இல் பாரிஸ் நகரில் இடம்பெற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சிகளின் யூரர் சபையினால் இந்த ஓவியம் மறுதலிக்கப்பட்டது.

குளிப்பு (The Bathi) -1891

இந்த ஓவியத்தில் பிரதானமாகக் காட்டப்படுவது தாயினால் குளிப்பாட்டப்படும் ஒரு பிள்ளையாகும். தாய் தனது பிள்ளையை மடியில் வைத்து, ஒரு கையினால் பாதுகாப்பாகப் பிடித்திருப்பதோடு, மற்றைய கையினால் பிள்ளையின் பாதங்களை மிகக் கவனமாக நீராட்டுகிறார். சற்றுக் கொழுத்த அச்சிறு பிள்ளை தமது ஒரு கையினால் தாயினது காலின் மேற்பகுதியை அழுத்திக் கொண்டிருப்பதோடு, மற்றைய கையினால் தனது காலைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. பிள்ளையின் இரக்கத் தன்மையும் தாயின் தாய்மைத்துவம் பற்றிய கருத்தும் இந்து உருவங்களில் தெளிவாகின்றது. இந்த ஓவியம் மேரி கசாற் இனது பிரபல்யமான ஓர் ஓவியத் தொனிப்பொருளாகிய, ‘தாய்மையைச் சித்திரித்துக் காட்டுகின்றது. அவரது பெரும்பாலான ஓவியப் படைப்புகளுக்குத் தேவையான கண்ணோட்டமும் கருப்பொருளுக்குரிய சூழலும் தாய்மையை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தின் படைப்பாக்க அம்சங்களில் பிரதானமாக, எட்கா டேகாவினது படைப்புக்கள் மற்றும் யப்பானிய அச்சுப் படைப்புக்கள் மூலம் பெற்ற செல்வாக்கைக் காண முடிகின்றது. எளிமைப் படுத்திய வர்ண வடிவங்கள், தட்டையான சித்திரிப்பு உத்திகள், நிகழ்வு தொடர்பாக நோக்கும் கோணம், மற்றும் இவை அனைத்தையும் சித்திரிக்கும் விதத்தை நோக்குகையில் இவர் எட்கா டேகா இனது கலைத்துவ அணுகுமுறையைத் தழுவியுள்ளனர் எனக் கூற முடிகின்றது. மேலும் தட்டையாக (llal) சூழலைக் கொண்ட பிரதேசங்களால் காட்டப்படுகின்ற தூரதரிசனம் போன்ற உத்திகள், யப்பானிய அச்சிட்ட ஆக்கங்கள் மூலம் பெற்ற செல்வாக்குகள் தோன்றுகின்றது.

மறுபுறமாக, மேரி கசாற் இந்த ஓவியத் தலைப்பின் மூலம் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் பிரபல்யம் பெற்றிருந்த ஓவியங்களின் இயல்புகளையும் அவதானிக்க முடிகின்றது. ஓவியம் சிறியதாயினும் கூட, அதில் உள்ள மனித உருவங்களைப் பெரியதாக வரைவதே அவ்வியல்பு ஆகும். அதாவது ஒட்டுமொத்த ஓவிய வெளியின் அரைப்பகுதியில் மனித உருவத்தை வரைவதற்குப் பதிலாக ஓவியம் முழுவதிலும் மனித உருவரை வரைவதே அப்பண்பாகும்.

தலைமயிரை ஒழுங்கு செய்யும் சிறுமி (Girl Arranging her Hair) -1886

எட்கா டேகா இனது ஓவியங்கள் மூலம் பெற்ற செல்வாக்குக் கரணமாகவே இவ்வாறான தலைப்புகள் குறித்து மேரி கசாற் விருப்பங்கொண்டுள்ளார். இந்த ஓவியத்துக்கும் பார்ப்போருக்கும் இடையிலான உரையாடலானது அதன் இயல்பான சித்திரிப்புத்தன்மை மூலமே கட்டியெழுப்பப்படுகின்றது. அதாவது இளஞ் சிவப்பு மற்றும் நீலநிறம் காரணமாகக் கட்டியெழுப்பப்படும் எதிர்த்தன்மை மீண்டும் ஓவியத்தில் ஒற்றுமைப்படுத்தப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு நிறப் பின்னணியில் அதற்கு எதிரான வகையில் தாபிக்கப்பட்டுள்ள இளநீல நிற இராவுடையணிந்த பெண்பிள்ளை காட்டப்பட்டுள்ளது. மறுபுறமாக, பெண் பிள்ளையின் முகம் இளஞ்சிவப்பு நிறமாகக் காட்டப்பட்டிருப்பதன் மூலம் அப்பெண் பிள்ளைக்கு உடைக்கும் இடையே எதிர்த்தன்மையை கட்டியெழுப்பி, கவனயீனமாக மற்றும் தனிப்பட்ட உலகமொன்று படைக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் பிள்ளையின் மெய்ந்நிலைக்கும் தளபாடங்களுக்கும் இடையிலான பொருத்தப்பாடு வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் நீண்ட நித்திரை தொடர்பான செய்தி முனைப்புறுத்திக் காட்டப்பட்டுள்ளது.

வரையறைக்குட்பட்ட வர்ணத் திட்டுக்கள் (patchc) நிகழ்வு தொடர்பாக நோக்கும் கோணம், மறுபுறமாக ஒருவரின் கண்களைப் பார்த்து, வரைதலை நினைவூட்டும் தன்மை ஆகியவற்றை இந்த ஓவியத்தை வரைவதற்கான கலைத்துவ உத்திகளாக மேரி கசாற் பயன்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!