மெதவல கற்றூண் விகாரை
- தூண்கள் மீது அமைக்கப்பட்ட விகாரை என்பதால் இதை “கற்றூண் விகாரை” என அழைக்கப்படுகிறது.
- கண்டிக்கு அண்மித்த மெதவல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
- இது 1 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட 34 கற்றூண்கள் மீது அமைந்துள்ளது.
- மத்திய கண்டிய பாரம்பரியத்தைச் சேர்ந்த மிக நுணுக்கமான, மிகச் சிறப்பான ஓவியங்கள் இவ்விகாரையில் காணப்படுகின்றன.
- இவ்விகாரையில் ஜாதகக் கதைகள், சத்சத்திய (ஏழு வாரங்கள்) போன்ற தலைப்புக்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள் சிறுபட்டிகளாக வரையப்பட்டுள்ளன.
ஓவியப்படைப்பாக்கத்தின் பிரதானமாக சிறப்பியல்புகள்
- பக்கப் பார்வை உருவங்கள்.
- சிறுபட்டிகளிற்குள் ஓவியம் காணப்படுதலும் கதையின் தொடர்ச்சியான தன்மை.
- இருபரிமாண இயல்புகளுடன் தட்டையான வர்ணப் பயன்பாடு.
- மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களின் பயன்பாடு.
- டெம்பரா பிரெஸ்கோ நுட்பமுறை.
- உருவங்களைச் சூழ நிறைவைக் காட்டுவதற்குரிய சிறப்பான நுணுக்கமான கோடுகள் இடப்பட்டுள்ளன.
- பின்னணியாக பழுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளமை.
- பின்னணி வெளிகளை நிரப்புவதற்காக வெவ்வேறு அலங்கார வடிவமைப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை.
- ஒட்டுமொத்த ஓவியத்திலும் அளவுத்திட்டம், தூரதரிசன விதிமுறைகள் கவனத்திற் கொள்ளப்படாமை.
பயிற்சி வினாக்கள்
1. கற்றூண்விகாரை என மெதவல விகாரை அழைக்கப்படக் காரணம் யாது?
2. 1 அடி 8 அங்குல உயரமுடைய எத்தனை தூண்கள் காணப்படுகின்றது?
3. இங்குள்ள மிக நுணுக்கமான ஓவியங்கள் எந்த பாரம்பரியத் தழுவல்?
4. இங்குள்ள ஓவியங்கள் எந்த நிறங்களை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது.
5. மேற்குறிப்பிட்ட வர்ணப்பயன்பாடு தவிர்ந்த இங்குள்ள ஓவியங்களில் உள்ள ஏனைய சிறப்பியல்புகள் மூன்று தருக.
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இது கண்டியிலுள்ள ……………………………………. விகாரை ஆகும்.
2. தூண்கள் மீது அமைக்கப்பட்ட விகாரை என்பதால் இது ……………………………… என அழைக்கப்படுகிறது.
3. இங்கு …………………………………. கால பாரம்பரியத்தைச் சேர்ந்த சிறப்பான ஓவியங்கள் காணப்படுகின்றன.
4. இவ் ஓவியங்கள் இரு பட்டிகளுக்கிடையில் தொடர்ச்சியாகக் காணப்படுவதால் ……………………….. சித்திரங்கள் என அழைக்கப்படும்.
5. இவ் ஓவியங்கள் ……………………………. நுட்பமுறையில் வரையப்பட்டுள்ளன.