மருள்நார் (நியந்த நார்), பன்புல் கைத்தொழில்

 • பன்புல், மருள் நார்க் கலை ஆக்கங்கள் இலங்கையில் தொன்றுதொட்டு நிலவிவரும் ஒரு கிராமியக் கலையாகும்.
 • இக்கைத்தொழில் பிரதானமாக பாய்கள், விரிப்புக்கள் ஆக்குவதிலேயே கவனங் செலுத்துகின்றது.
  அதற்கமைய அக்கலையாக்கங்களை
 1. மருள் நார்ப்பாய் (தரைவிரிப்பு, கலால் )
 2. பன்பாய்
                  என வகைப்படுத்தலாம்.
தும்பறைப் பாய்க் கைத்தொழில்
 • ஆதிகாலந்தொட்டு கண்டி தும்பறைப் பிரதேசத்தில் நியந்தஃ மருள் நார்ப் பாய்க் கைத்தொழில் பிரசித்தி பெற்றுக் காணப்படுகின்றது.
 • நாரை மூலப்பொருளாகக் கொண்டு தரைவிரிப்புக்கள் உற்பத்தி செய்யப்படும்.
 • தற்காலத்தில் மருள் தாவரம் கிடைப்பது அரிதாக இருப்பதனால் கணமர இலை நார்களும் பயன்படுகின்றது.
 • மருள் நார்ப்பாய் / நார்த்தரை விரிப்பு பிரதானமாக மூன்று வகைப்படும்.
 1. பன்னம் பாய் தரைவிரிப்பு (பொதுவான பாய் / பன்னம் கலாள)
 2. கலப்பு அலங்கரிப்பு தலைவிரிப்பு (வட பாய்)
 3. பறவையுருத் தரைவிரிப்பு (குறுளு வேலைப்பாய்)
 • “மருள்” (நியந்த மரம்) எனும் மரத்தின் இலைகளிலிருந்து பெறும் நாரைப் பயன்படுத்தி எளிமையான ஒரு பொறியினால் இத்தரைவிரிப்பு ஆக்கப்படும் மற்றும் கணமர இலைநாரும் பாய் பின்னலுக்கு பயன்படுத்தப்படும்.
சணல் இலைகளால் நார் பெறுதல்
சணல் நார்களால் நில விரிப்புகளை இழைத்தல்

மருள் நார்ப் பாய் அலங்காரங்கள்

பண்பாய்க் கைத்தொழில்
 • பண்பாய்க் கைத்தொழில் இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் பரவலாகக் காணப்பட்டதாகக் கருதப்படுகின்றது.
 • பாய் பின்னல் கைத்தொழிலில் ஈடுபடுவோரை ‘கின்னர்” என்பர்.
 • பல்வேறு நார் வகைகளைப் பயன்படுத்தி கையால் பின்னி, பாய்கள் ஆக்கப்பட்டுகின்றன.
 • தற்காலத்தில் காலி, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சிறு சிறு அளவுகளில் இக் கைத்தொழில் காணப்படுகின்றது.

பன்புல், நியத்த நார் ஆக்கங்களுக்கான சாய வகைகள் பெற்ற விதம்:

 • சிவப்பு – பத்தங்கி மரத்துண்டுடன் கொறக்காப்புளி இலைகளை அவித்துப் பெறல்.
 • கறுப்பு – கடுக்காய், தான்றிக்காய்களை இடித்து அவித்துப் பெறல்.
 • மஞ்சள் – மரமஞ்சள் அல்லது மஞ்சள் கிழங்குகளை அவித்துப் பெறல்.
 • ஊதா – தம்பை மரப்பட்டையை அவித்துப் பெறல்.

பின்னல் வேலையின் போது பயன்படும் அலங்கார அமைப்புக்கள்:

 •  ஒற்றை முறுக்கு நூல், இரட்டை முறுக்கு நூல்
 • கதுறு மரப் பூ, அவுன் ஹரே
 • வங்ககிரிய , பன்னிரு மாதம்
 • ரத்வத்தை அலங்கரிப்பு , நட்சத்திரம்
 • விலங்குரு அலங்காரங்கள் (யானை, பறவை, மான், சிலந்தி, நாக சண்டை)

தென்பகுதிப் பாய்கள்

கதுறு மல
முவ (முயல்)
மக்குலு (சிலந்தி)
ய் பொரே (பாம்பு)
பன்னிரு மாதங்கள் (மாச தொலஹ)
வங்ககிரிய
மட்டக்களப்புப் பன்பாய்க் கைத்தொழில்
 • மட்டக்களப்பில் தமிழ் கிராமங்களான வாழைச்சேனை, நாவற்குடா, தாழங்குடா, குருக்கள் மடம், செட்டிப்பாளையம், களுதாவளை, ஒந்தாச்சிமடம், கல்லாறு போன்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் பிரதேசங்களான காத்தான்குடி, ஒல்லிக்குளம், காங்கேயனோடை, பாலமுனை, பூனொச்சிமுனை, ஏறாவூர், மீராவோடை, செம்மண் ஓடை, காவத்த முனை போன்ற இடங்களிலும் பன்பாய் கைத்தொழில் காணப்படுகிறது.
 • பன்கைத்தொழில் புரிவோர் ‘கின்னரை” என்று அழைக்கப்பகின்றனர்.
 • முன்னர் இயற்கை வர்ணங்களால் பன்புற்கள் சாயமூட்டப்பட்டன. ஆனால் இப்போது கோழிச்சாயம் பயன்படுத்தப்படுகின்றது.
 • பாரம்பரிய பாய் ஆக்கங்களுக்கு சாயம் பெறப்படும் மூலங்கள்
  • சிவப்பு – பத்தங்கி மரத்துண்டு
  • மஞ்சள் – மரமஞ்சள் பட்டை
  • ஊதா – தம்பை மரப்பட்டை
  • பச்சை – அலரி இலை, மலை வேம்பு இலை
  • கறுப்பு – தான்றிக்காயும் கடுக்காயும்
 • சாயமேற்றப்பட்ட பன்கள் இழைக்கப்படும் பிரதானமான இரண்டு கோலங்கள் உள்ளன.
 1. ஒண்டிப்பாய்
 2. புனிப்பாய்
            என்றழைக்கப்படும்.
 • ஒண்டிப்பாய்கள் சதுரம், நீள்சதுரம், முக்கோணம் போன்ற கேத்திரகணித அலங்காரங்களைக் கொண்டவை.
 • புனிப்பாய்களில் அலங்காரங்கள் சமாந்தரம், சமச்சீர், சீர் அடுக்கு, இலயம் என்பன முக்கியத்துவம் பெறும்.
 • இன்று இவ்விரு வகைகளுக்குள்ளும் அடங்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பாய் வடிவமைப்பு வகைகள் இழைக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு பன்பாய்க் கோலங்கள்

பயிற்சி வினாக்கள்

1. மருள் நார்க் கைத்தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற இடம் எது?
2. மருள் நார்ப் பாய்களுக்கு பிரதான ஊடகம் எது?
3. மருள் நார்த் தரை விரிப்புகளின் பிரதானமான மூன்று வகைகளும் எவை?
4. பாய்ப்பின்னல் தொழிலில் ஈடுபடுவோரை எவ்வாறு அழைப்பர்?
5. பாரம்பரிய பாய் ஆக்கங்களுக்கு சாயம் பெறப்படும் விதங்களைக் குறிப்பிடுக?
6. பாய்ப்பின்னல் வேலைக்குப் பயன்படும் அலங்கார அமைப்புக்கள் எவை?
7. பன்பாய் அலங்கரிக்கப் பயன்படும் கோலங்களைக் குறிப்பிடுக?

error: Content is protected !!