மதுரா கலைப் பாரம்பரியம்

கி.பி 1 ஆம் நூற்றாண்டிலே இந்தியாவின் யமுனை நதிக்கு அருகில் மதுரா நகரத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்ற கலையாக மதுரா கலை காணப்படுகின்றது. இது காந்தாரக் கலையோடு சமகாலத்தில் வளர்ச்சி பெற்ற ஒரு கலையாகும். இது சுதேச பண்புகளைப் பிரதிபலிக்கக்கூடிய கலைப் பாரம்பரியமாகும். மதுரா பிரதானமாக விவசாய கிராமிய நாகரிகத்தின் மீது கட்டியெழுப்பப் பட்டது. மத்திய தரைப் பிரதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ளுர்ச்சந்தையாக வளர்ச்சி பெற்ற ஒரு நகரமாகும். இப்பிரதேசம் ஆரம்ப காலத்தில் கனிஷ்ட அரசனுடைய தலைநகரமாகவும் கலாசார நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

குப்தர் காலத்திலேயே மதுரா கலை மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தது. குப்தர் காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம், பௌத்த சமயம், ஜைன சமயம் ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் கிரேக்க குஷாணர் கலாசாரத்தின் செல்வாக்கு ஆகியவற்றின் சேர்மானம் காரணமாக கலைகள் பெரிதும் முழுமை பெற்றுள்ளன. (புராதன இந்திய நாகரிகம் பேராசிரியர் எச். ரீ. பஸ்நாயக்க 2004 : 301).

மதுரா கலைஞர்கள் தமது ஆக்கங்களின்போது காந்தாரக் கலைஞர்களை விடச் சுதேச எண்ணக் கருக்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். இந்தியாவில் தோன்றிய சிறந்த கலாசார நாடகங்களில் காணக்கூடிய இயற்கையின் விதிகளாகிய சந்தத்தையும் லலிதத்தையும் மதுரா கலை ஆக்கங்களில் காணலாம். நாடக நூல்களில் இடம் பெற்றுள்ள பெண்களின் அழகினை மாத்திரமல்ல உருவங்களில் கண்கள், கைகள் போன்றவற்றின் மூலமும் தமது கலைப் படைப்புக்களில் சிறப்பான வகையில் இணைத்துள்ளன.

மதுரா கலை ஆக்கங்களிடையே ஆரம்ப காலத்தில் ஆக்கப்பட்ட பெண் உருவங்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன. இவை பாரூத் மற்றும் சாஞ்சி பெண் உருவங்களை ஒத்துள்ள போதிலும் பெண்களின் அழகினை காட்டுவதில் அதைவிட முன்னேறி உள்ளனர். திரிபங்க நிலை, மாலைகள், வளையல்கள், கால்சலங்கை, சங்கிலி வளை போன்ற நுணுக்கமான இலட்சணங்கள் இச்சிலைகள் மூலம் காட்டப்பட்டுள்ளன.

மதுரா புத்தர் சிலைகளின் இலட்சணங்கள்

உருண்ட திரண்ட ஆண் பெண் உருவங்களைச் செதுக்குவதில் கொண்டிருந்த பரிச்சயமே மதுரா புத்தர் சிலை நிர்மாணத்தின்போது செல்வாக்குச் செலுத்தியுள்ளது. அத்தோடு கூறுவதாயின் தியான நிலைத் தீர்த்தங்களும் ஜைன சிலைகளின் செல்வாக்கையும் காண முடிகின்றது. உள்நாட்டுக் கலைஞர்களான புத்தரின் முப்பத்திரண்டு மகா புருஷ்ட இலட்சணங்களை பௌத்த ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் காண்பித்துள்ள திறமையும் கொண்டுள்ளன. புத்தர் சிலைகளை ஆக்கும்போது அவர்கள் அந்த இலட்சணங்களை மாத்திரமன்றி புத்தரின் மகா கருணை போன்ற ஆன்மீக குணப்பண்புகளையும் சிலைகளின் மூலம் வெளிக்காட்டியுள்ளதைக் காண முடிகின்றது. குப்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மதுரா சிலைகளில் அழகும் வெளித் தோற்றமும் உள்ளார்ந்த வலிமையும் எடுத்துக் காட்டப்படுகின்றன.

முகத்தில் ஆன்மீகக் குணப்பண்பு வெளிப்படுத்தப்படுகின்றது. உருவங்களை வடிவமைக்கும்போது எளிமையான தன்மையும் சமநிலைத் தன்மையும் பேணப்பட்டுள்ளன. முகத்தில் புன்சிரிப்பு, உடலோடு ஒட்டி ஊடுருவித் தெரியக்கூடிய காவியுடை, சுருண்ட கேசம் போன்ற விசேடமான இலட்சணங்க ளாகும். புத்தர் சிலைகளை அலங்கரிப்பதற்காக பூக்கொடிகளுடன் கூடிய ஒளிவட்டம் காணப்படுவது மதுரா புத்தர் சிலைகளின் இன்னுமொரு சிறப்பம்சமாகும். மதுரா புத்தர் சிலைகளின் ஆசன முறையும் முத்திரையும் தெளிவாக இனங்காணக்கூடியதாகக் காட்டப்பட்டுள்ளமையும் ஒரு விசேட அம்சமாகும்.

மதுரா கலை ஆக்கங்கள் சித்ரி என்ற பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புள்ளிகளுடனான சிவப்பு மணல் கற்களினாலானவை. இவ்வூடகத்தினால் சிலை செதுக்கும்போது தோன்றும் கரடுமுரடான தன்மையினைக் குறைப்பதற்காகச் சாந்தினால் மெழுகி அதன் மீது தங்கம் பூசப்பட்டுள்ளது.

கத்ரா புத்தர் சிலை

கத்ரா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சமாதி புத்தர் சிலை மதுரா தொல்பொருள் காட்சி யகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலைப் புத்தர் உருவமான இது கல்லில் முழுப்புடைக்காகச் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாசன முறையில் அமர்ந்திருக்கும் இச்சிலையின் வலது கரம் அபய முத்திரையைக் காட்டுகின்றது. இடது காலில் மேல் இடது கை நேராக வைக்கப்பட்டுள்ளது. ஒளிவட்டத்தின் பின்னே அரச மரமானது மூன்று அரச மரக்கிளைகளாகக் காட்டப்பட்டுள்ளது. புத்த பெருமானின் மேலே இன்னும் இரண்டு தேவர் உருவங்கள் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றிடையில் தேவர்கள், பிராமணர்கள் சூழ வஜ்ராசன நிலையில் அமர்ந்த புத்த உருவம் காணப்படுகின்றது. சிலையின் முகம் வட்டவடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. ‘உஸ்னிச” உள்ள தலையில் கேசத்தில் அலைவடிவங்கள் காட்டப்படவில்லை. முகத்தினால் கருணைச் சுபாவமும் புன்னகையும் காட்டப்படு கின்றது. ஒரு பக்கம் போர்க்கப்பட்டதான காவியுடை உடலோடு ஒட்டியவாறு ஆக்கப்பட்டுள்ளது. காவியுடை இரேகைகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. கத்ரா புத்தர் சிலையின் வஜ்ராசனத்தில் மூன்று சிங்க உருவங்கள் உள்ளன. அதன் மூலம் சாக்கிய சிங்கங்கள் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது.

காந்தார புத்தர் உருவங்களை விட மதுரா புத்தர் உருவங்கள் சிறந்த அளவுப் பிரமாண அம்சங்களைக் கொண்டுள்ளது. கத்ரா புத்தர் சிலையை செதுக்கிய கலைஞர் கலை ஆக்கத்தில் இருக்க வேண்டிய சமநிலைத் தன்மை தொடர்பான அறிவினை பெற்றிருந்தமையை அறிய முடிகின்றது. வஜ்ராசனத்தில் செதுக்கப்பட்டுள்ள மூன்று சிங்க உருவங்களுள் ஒரு சிங்கம் முன்னேயும் மற்றைய இரண்டு சிங்கங்களும் இரண்டு பக்கங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. தேவ உருவங்களும் அரச மரங்களும் சமநிலைத் தன்மை பேணப்படுமாறு ஆக்கப்பட்டுள்ளமை கலைஞரின் திறமையை வெளிக்காட்டுகின்றது.

மதுரா புத்தர் சிலைகளுக்கு மேலதிகமாக, மதுராவுக்கு அருகில் “மாட்” கிராமத்திலிருந்து குஷான அரசனின் சிலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மிக முக்கிய சிலையாக தலை அற்ற கனிஷ்க அரசனின் சிலை கருதப்படுகிறது. அரசன் மத்திய ஆசியா ஆடை போன்று நீண்ட அங்கியை அணிந்தவராகவும் சேர்த்துத் தைக்கப்பட்ட அகன்ற பாதணிகளுடனும் ஒரு கையில் உடை வாளினைப் பிடித்தவாறும் மற்றைய கையினால் வாள் உறையைப் பிடித்தவாறும் காட்டப்பட்டுள்ளது. இந்தியக் கலைஞர்களுக்குப் பரிச்சயமற்ற ஒன்றான அரச சிலை ஆக்கத்தின்போது இடர்ப்பாடுகள் தோன்றியுள்ள போதிலும், இந்த அரசர் சிலையின் மூலம் எகிப்திய உயரிய அரச சிலைகளில் காணப்படும் எடுப்பான தன்மையை இச்சிலையில் காண முடிகின்றது.

கனிஷ்க மன்னன் உருவம்

வலது தூணின் முற்புறத்தே உள்ள ”மகா கபி ஜாதகய” எனும் செதுக்கலே சிறந்ததாகக் கணிக்கப்படுகிறது. குரங்கினத்தில் பிறந்த போதி சத்துவர் தமது சகாக்களை ஆபத்தில் இருந்து மீட்க எடுக்கும் முயற்சியை இது விளக்குகிறது. ஆற்றின் குறுக்கே இரு மரங்களுக்கிடையில் வரிசையாகக் குரங்குகள் ஆற்றைக் கடக்கும் விதம் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கதாநாயகனான குரங்கைப் பெரிய அளவில் செதுக்கியிருப்பது போதிசத்துவரைக் குறித்து நிற்கிறது. வரனாசி எனும் பட்டணத்தின் பிரம்மதத்த அரசன் மாங்காய் சாப்பிடுவதில் பேராவல் கொண்டு, குரங்குகளைக் கொல்லும்படி ஆணையிட்டபோது அக்குரங்குக் கூட்டத்தைக் காப்பாற்ற செயற்பட்ட ஓர் உத்தியை மகா கபி ஜாதகம் விளக்குகிறது.

error: Content is protected !!