மட்பாண்டக் கைத்தொழில்

 • உலகில் மிகப் பழமையான நாகரிகங்களில் மட்பாண்டக் கைத்தொழில் இருந்துள்ளதற்கான சான்றுகள் தொல்பொருள் ஆய்வுகளின்போது கிடைத்துள்ளன.
 • இலங்கையிலும் “மெகலிதிக” கால மாயானங்களை அண்மித்த பகுதிகளில் கி.மு 600 இற்கு முற்பட்ட காலத்துக்குரியதென நிர்மாணிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பல கிடைக்கப்பட்டுள்ளன.
 • யாழ்ப்பாணம் கந்தரோடை, அநுராதபுரம், பொலநறுவை, கண்டி போன்ற பிரதேசங்களில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது பாரம்பரிய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
 • மட்பாண்ட நிர்மாணிப்புக்காக இலங்கையின் எல்லாப் பிரதேசங்களிலும் கெயோலின் களி, சிவப்புக்களி, மஞ்சள் நிறக் களிமண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • இவற்றிடையே கெயோலின் களி தரம் மிக்கது.
 •  மட்பாண்டங்களை நிர்மாணிக்கும் முன் களிமண்ணில் உள்ள கல், மணல், தூசி என்பன அகற்றப்பட்டு களிமண் பதப்படுத்தப்படும்.
 • களிமண்ணை பாதங்களால் மிதித்து பதப்படுத்துவதே பாரம்பரிய முறையாகும். தற்போது இயந்திரங்கள் மூலம் அரைத்த களிமண் பதப்படுத்தப்படுகின்றது.

நிர்மாணிக்கப்படும் பாண்டங்களின் வகைகள்.

வீட்டுப்பாண்டங்கள்

 • சட்டி, பானை, குடம், அரிக்கன் சட்டி, பெரிய சட்டி, மூடியுடன் கூடிய சாடி

சமயத் தேவைகளுக்கும் விழாக்களுக்கும் உரிய பாண்டங்கள்

 • கெண்டி, விளக்கு, சிலம்பு, பாத்திரம், கறுப்புச்சட்டி, சிட்டி

கட்டிட நிர்மாணிப்புகளுக்கு

 • ஓடு , தட்டை ஓடு, பீலி, குழாய்.

பாரம்பரிய மட்பாண்ட வகைகள்

 • சட்டி, கோபுரக்கலசம், பூச்சாடி

கைத்தொழில் சார்ந்த மட்பாண்டங்கள்

 • உலைதீச்சட்டி, புடக்குகை , கனலடுப்பு

மட்பாண்டங்களைத் தயாரிக்கும் முறை

இதன் பொருட்டு மூன்று முறைகள் பயன்படுத்தப்படும்.

 1. கை வனை சில்லு
 2. கால் வனை சில்லு
 3. களிவளையல்கள், களிதகடுகளைப் பயன்படுத்தி பாண்டங்களைத் தயாரித்தல், அப்புதலும், செதுக்குதலும்.

கை வனை சில்லு

 • இலங்கையில் கி.மு. 1500 ஆம் ஆண்டுகளில் இருந்து கை வனைசில்லுகளைப் பயன்படுத்தி மட்பாண்டங்கள் நிர்மாணிக்கப் பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன.
 • மரபு ரீதியான மட்பாண்டக் கைத்தொழிலின் பொருட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருவதும் இம்முறையாகும்.
 • இதன் பொருட்டு 2’ அல்லது 2 ½’ அடி விட்டத்தைக் கொண்ட மரம் அல்லது கருங்கல்லைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட வட்ட வடிவுடைய தகடு (சில்லு) பயன்படுத்தப்படும்.
 • இது நிலத்தில் இருந்து 6 அங்குலம் உயரமுடைய சிறு கற்றூணில் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் மத்தியில் களிமண்ணை வைத்து, கைகள் மூலம் சில்லைச் சுழற்றியவாறு பாண்டங்கள் தயாரித்துக் கொள்ளப்படும்.
 • வனை சில்லின் இரு புறத்தில் இருவர் அமர்ந்திருப்பர். ஒருவர் சில்லைச் சுழல வைப்பார். மற்றையவர் பொருளை நிர்மாணிப்பார். இவ்வாறு நிர்மாணிக்கப்படும் மட்பாண்டம் நூலின் துணையுடன் வெட்டப்படும்.
 • சற்று உலர்ந்ததும் ஒப்பமாக்கிய வட்டவடிவ கருங்கல் தகடு ஒன்றினாலும் பலகை ஒன்றினாலும் அமைக்கப்பட்ட “துடுப்பு” (பத்த) எனும் கருவியின் உதவியுடன் பாண்டங்களின் அடிப்பகுதி நிர்மாணிக்கப்படும்.
 • கை வனைச் சில்லினால் பாரிய அளவிலான பாண்டங்கள் இலகுவில் நிர்மாணிக்கப்படும்.

கால் வனை சில்லு

 • தற்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நின்ற நிலையில் பாண்டத்தைத் தயாரிப்பதற்கு ஏற்றவாறு, பாதத்தைப் பயன்படுத்திச் சில்லைச் சுழற்ற முடிதலும், தேவையானால் மின்சாரத்தின் மூலம் இயக்க முடிதலும் கால் வனை சில்லில் காணப்படும் விசேட தன்மைகளாகும்.
 • இம்முறையில் அமைந்த வனை சில்லுகள், நிலத்தில் இருந்து 3 ½’ அளவு உயரத்தில் உலோகம் அல்லது பலகை கொண்டு அமைக்கப்படுகின்றன.
 • இம்முறை மூலம் பூச்சாடிகள், சிறிய விளக்குகள், கூசாக்கள், சிறியளவிலான அலங்காரப் பாண்டங்கள் நிர்மாணிக்கப் படுகின்றன.

களிவளையம், களித்தகடுகளைப் பயன்படுத்தி பாண்டங்களைத் தயாரித்தல், அப்புதல், செதுக்குதல்

 • களிச்சுவர்த்தகடு, செதுக்கல் தகடு , கோபுர கலசம், சிறு களிமண் சிலை, கெண்டி போன்ற பாண்டங்கள் தயாரிக்கும்போது இம்முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
பாண்டங்களைச் சுடும் தொழில்நுட்பம்
 • ஆரம்பத்தில் மட்பாண்டங்கள் மீது வைக்கோல் பரப்பி அதன்மீது களிமண் தகடு இடப்பட்டு சுடப்படும். பின்னர் சுடப்பட்ட மட்பாண்டங்கள் மீது உமி பரப்பி அதன் மீது களிமண் தகடு இடப்பட்டு மீண்டும் சுடுவதால் மட்பாண்டங்கள் மேலும் வலுவடையும்.
 • இதன்பொருட்டு செங்கல், களிமண் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மிக எளிமையான விறகுப் போறணை உபயோகிக்கப்படும்.
 • போறணையின் உள்ளே பாண்டங்களை அடுக்கி தேங்காய் உரி மட்டைகளைப் பயன்படுத்தி ஒருநாள் முழுதும் சுட்ட பின்னர் விறகு சேர்த்து 600 சதம பாகை வரை வெப்பநிலையில் 12 மணித்தியாலம் பாண்டங்கள் சுடப்படும்.

பாண்டங்களை அலங்கரிக்கும் தொழினுட்பம்

 • ஈர மட்பாண்டத்தில் சாயத்தைப் பயன்படுத்தி அலங்காரத்தை வரைதல்.
 • அச்சின் மூலம் அலங்கரித்தல்.
 • சுட்ட மட்பாண்டத்தில் சாயத்தைப் பயன்படுத்தி வரைதல்.
 • வெயிலில் உலரவிடப்பட்ட பாத்திரத்தில் கூரான இரும்பு உபகரணத்தைக் கொண்டு அலங்காரத்தை வரைதல்.
 • பளபளப்பை ஏற்படுத்துவதன் பொருட்டு பொருத்தமான ஒரு திரவத்தைப் பூசுதல்.
 • அலங்காரங்களை இடுவதற்குச் சுழி, இரட்டைச்சுழி, நீர் அலை, சீப்புரு , சவடி, பூவிதழ், கொடிவலை, பேரண்டபக்~p, அரசமர இலை, கத்தரி மலர், அன்னம், சிங்கம் போன்ற அலங்காரங்கள் பயன்படுத்தப்படும்.

மட்பாண்டக் கைத்தொழிலுக்குப் பிரபல்யம் பெற்ற பிரதேசங்கள்

 • களனி, மாத்தளை, ஹங்வெல்லை, கடுவெலை, இரத்தினபுரி, கொஸ்லந்த, வெயாங்கொடை, ஹொரணை, கண்டி, தும்பறை, களுத்துறை, கண்டாவளை. ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு, முருங்கன்.

தற்காலத்தில் மட்பாண்டக் கைத்தொழில் காணப்படும் பிரதேசங்கள்

 • களனி – நவகமுவை
 • கேகாலை – மொளகொடை
 • அநுராதபுரம் – றம்பாவை
 • கண்டி – வழளை
 • குருநாகல் – பண்டுவஸ்நுவர, பிதுறுவல்லை , கலுகமுவை
 • மாத்தறை – கபுகமை, பெலியத்தை , யட்டியனை, கிரிந்தை
 • களுத்துறை – தெதியவெலை
 • கிளிநொச்சி – தர்மபுரம், விசுவமடு
 • முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு , முள்ளியவளை
 • மன்னார் – நாச்சிக்குடா, மடுக்கரை
 • யாழ்ப்பாணம் – கல்வியங்காடு , கொடிகாமம், சங்கானை
 • வவுனியா – நொச்சியாகாமம்
 • மட்டக்களப்பு – ஏறாவூர், களவாஞ்சிக்குடி, பெரிய போரதீவு

பயிற்சி வினாக்கள்

1. மட்பாண்டக் கைத்தொழிலின் வரலாற்றுப் பின்னணியை குறிப்பிடுக.
2. மட்பாண்டக் கைத்தொழில் காணப்படும் பிரதேசங்கள் எவை?
3. மட்பாண்டங்களை உற்பத்தி செய்யும் முறைகள் எவை?
4. மட்பாண்டங்களுக்காக ஊடகத்தை தயாரிக்கும் முறை யாது?
5. மண்ணை உபயோகித்து உற்பத்தி செய்யும் வீட்டுப் பாவனைப் பொருட்கள், சமயவிழா பொருட்கள், கட்டட நிர்மாணிப்புக்கு உதவும் பொருட்கள் என்பவற்றை குறிப்பிடுக.
6. மட்பாண்டங்களை அலங்கரிக்க உபயோகிக்கும் தொழில்நுட்ப முறைகளும் அலங்கார வேலைப்பாடுகளும் எவை?

error: Content is protected !!