பௌத்த தூபியின் / தாதுகோபத்தின் பகுதிகளும் வடிவங்களும்

 • பௌத்த சமயத்தவரின் வழிபாட்டிடமாக தாதுகோபங்கள் காணப்படுகின்றன.
 • இவை புத்தரின் பெருமானின் புனிதப் பொருட்களை வைத்துக் கட்டப்பட்டன.
 • இலங்கையிலுள்ள தாதுகோபங்களின் சதுரக் கோட்டம் எனும் அமைப்பு இந்தியாவின் சாஞ்சி தூபியின் “ஹர்மிக” எனும் அமைப்பை ஒத்துள்ளது.
 • இலங்கையில் முதலாவதாகக் கட்டப்பட்ட தாதுகோபம் தூபராம தாதுகோபம் ஆகும்.
 • தாதுகோபத்தின் அண்டத்தின் தன்மைக்கு ஏற்ப அவை ஆறு வகைப்படும்.
 1. மணிவடிவம் (காண்டாகார) உதாரணம் : தூபாராம தாதுகோபம்
 2. தானியக் குவியல் வடிவம் (தானியாகார) உதாரணம் : களனி தாதுகோபம்
 3. நீர்க்குழி வடிவம் (பப்புளாகார ) உதாரணம் : ருவென்வெலிசாய தாதுகோபம்
 4. பானை வடிவம் (கடாகார) இலங்கையில் இல்லை
 5. தாமரை வடிவம் (பத்மாகார) இலங்கையில் இல்லை
 6. நெல்லிக்கனி வடிவம் (அம்ளாகார ) இலங்கையில் இல்லை
தாதுகோபத்தின் பிரதான வகைகள்
மணிவடிவம் (காண்டாகார)
தானியக் குவியல் வடிவம் (தானியாகார)
நீர்க்குழி வடிவம் (பப்புளாகார )
பானை வடிவம் (கடாகார)
தாமரை வடிவம் (பத்மாகார)
நெல்லிக்கனி வடிவம் (அம்ளாகார )
பயிற்சி வினாக்கள்

1. இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது தாது கோபுரம் எது? 2. சாஞ்சி தூபியில் காணப்படும் ஹர்மிகா என்ற பகுதி இலங்கையில் எவ்வாறு அழைக்கப்படும்? 3. தாதுபோபுரத்தின் ஆறு வகைகளையும் எழுதுக? 4. இலங்கையில் காணப்படும் தாதுகோபத்தின் வகைகள் மூன்றினை எழுது? 5. தாதுகோபுரம் ஒன்றின் அமைப்பை வரைந்து அதன் பகுதிகளை குறிப்பிட்டு எழுதுக? 6. தாதுகோபத்தின் ஆறு வடிவங்களையும் வரைந்து அதன் பெயர்களை எழுதுக?

error: Content is protected !!