போல் செசான் ( Paul Cezanne, 1839-1906)
போல் செசான் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு ஓவியக் கலைஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நவீன கலையைக் கட்டியெழுப்புவதில் செல்வாக்குச் செலுத்திய பிரதான ஓவியராக இவர் திகழ்கின்றார். அதாவது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், பிரான்சை முதன்மையாகக் கொண்டு கியூபிசம் அதாவது கனவடிவவாதத்தைத் தோற்றுவிப்பதில் செசான் இனது கலைத்துவப் பிரயோகமே பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது,
போல் செசான். பிரான்சு நாட்டில் எக்ஸ் அன் (Aix-En) பிரதேசத்தில் பிறந்தார். தொப்பி உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பிரதேச வங்கி உரிமையாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்த செசான் முதலில் சட்டத்துறையிலேயே கல்வி கற்றார். எனினும் அவர் தனது சட்டத்துறைப்படிப்பை இடைநடுவே நிறுத்திக் கொண்டார். பின்னர், தந்தையின் விருப்புக்கு மாறாக ஒரு சித்திரக் கலைஞராகப் பயிற்சி பெறுவதற்காக பரிஸ் நகரத்துக்குச் சென்று, சுவிஸ் கலைக்கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு அவர், மனப் பதிவுவாத ஓவியக்கலைஞராகிய கமில் பிசாரோவைச் சந்தித்தார். எனினும் அக்கலைக்கல்லூரியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சில மாதங்களின் பின்னர் மீண்டும் எக்ஸ் அன் பிரதேசத்தை வந்தடைந்தார். அங்கு அவர் மீண்டும் ஓவியக்கலை பயில்வதைத் தொடர்ந்தார். அதற்கிடையே அவர் 163 மறுதலிக்கப்பட்டோரின் கண்காட்சியில் பங்கு கொண்டார். எவ்வாறாயினும் இக்காலப்பகுதியில் செசான் வரைந்த ஓவியங்கள், அவரது பிரபல்யம் மிக்க ஓவியப் பாணியிலிருந்து வேறுபட்டுக் காணப்பட்டன. இக்கால கட்டத்தில் உருவப்படங்கள், கற்பனையான உருவ வெளிப்பாடுகள் போன்றவையே அவரது ஓவியங்களின் விடயப்பொருளாக அமைந்திருந்தன.
இக்காலத்தில் அவர், பிரான்சில் வடமேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொட்டுஆஸ் (Poutoisc) எனும் பகுதியில் குடியமர்ந்தார். அங்கிருக்கும்போது மீண்டும் அவர் கமில் பிசாரோவைச் சந்தித்தார். அச்சந்திப்பு அவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிசாரோ இனது செல்வாக்குக் காரணமாகவே செசான் தனது பிரபல்யமான ஓவியத் தலைப்பின் கீழ் அதாவது நிலத்தோற்றக்காட்சிகளை ஓவியங்களாக வரையத் தொடங்கினார். இந்தச் செல்வாக்கானது செசான் இனது ஆரம்ப கால ஓவியத்தலைப்புக்களிலிருந்து விலகிச் செல்வதற்கான உந்துதலையளித்தது. அதற்கமைய செசான் தம்மைச் சூழக் காணப்படும் உலகத்தைக் கற்றாயவும் ஓவியமாக வடிக்கவும் முற்பட்டார். இம்மாற்றம் காரணமாக அவரது ஆரம்ப கால ஓவியங்களில் காணப்பட்ட வர்ணந்தீட்டுதலை இருண்ட, நடுத்தர வர்ணச் சாயல்களுடன் பயன்படுத்த முனைந்தார். இந்த இயல்பை, பின் மனப்பதிவுவாத ஓவியக்கலைப்பாணி எனக் குறிப்பிடலாம். இதற்காக அவர், ஓவியத்தின் மேற்பரப்புத் தன்மையைக் கட்டிெயெழுப்புவதற்குப் பதிலாக ஓவியத்தை அமைப்பு ரீதியில் பகுப்பாய்வு செய்தார். இந்த அமைப்பு சார்ந்த பகுப்பாய்வு காரணமாக மரபுரீதியான ஓவியக்கலைப் பண்புகளான. முன்னணி. இடையணி, பின்னணி ஆகியன தர்க்கத்துக்கு ஒத்தவையாயின. மேற்கூறிய முன்னணி, இடையணி, பின்னணி ஆகியவற்றுடன் இணைந்த தொல்சீர் மற்றும் கலைக்கல்லூரி நம்பிக்கையானது, சொசன் இனது செயல் காரணமாக மாற்றமுற்றமையால் ஓவியக்கலை வரலாற்றுக்கு ஒரு புதிய மாதிரி கிடைத்தது.
அம்மாதிரியினது தன்மையானது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பிய ஓவியக்கலை வரலாற்றில் புரட்சிகரமான ஒரு கலைப்போக்காகிய கனவடிவவாதம் கட்டியெழுப்பப்படுவதற்குக் காரணமாகியது.)