பொலனறுவைக்கால ஓவியக்கலை
அனுராதபுரக் கால ஓவியக்கலையின் பின்னர் இலங்கையின் மரபுரீதியான சுவரோவியக் கலை தொடர்பான தகவல்களைப் பொலனறுவை இராசதானியிலேயே காணமுடிகின்றது.
பொலனறுவைக் காலச் சுவரோவியக் கலையானது ஒரு வகையில் அனுராதபுரக் காலச் சுவரோவியக் கலையின் தொடர்ச்சியாகும். பொலனறுவைக் கால ஓவியக் கலை விருத்தி யடைந்த நிலையில் காணப்பட்டது என்பது இக்காலத்தைச் சேர்ந்த சகல கட்டட நிர்மாணிப்பு களிலும் / நினைவுச் சின்னங்களிலும் வர்ணந் தீட்டப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதன் மூலம் உறுதியாகின்றது. இந்த அறிகுறிகள் இன்றும் கூட எச்சமாகக் காணப்படுகின்றன. சமயக் கட்டடங்கள் மாத்திரமன்றி மாளிகைச் சுவர்களும் ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தன. இது எழுத்து மூல ஆதாரங்கள் மூலம் உறுதியாகின்றது. இந்தப் பொதுவான கட்டடங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களுள் எந்த ஒன்றினதும் எச்சங்கள் தற்போது தெளிவாகக் காணக்கூடிய நிலையில் கிடையாது. எனினும் சமயக் கட்டடங்கள் சிலவற்றினது சுவரோவியங்களின் எச்சங்களைக் காணமுடிகிறது.