பொலன்னறுவ வட்டதாகே

  • பொலன்னறுவை தலதா மண்டபத்துக்கு நுழைந்ததும் இடப்புறத்தில் வட்டதாகே எனும் வட்டவடிவ தாது மண்டபத்தைக் காணலாம்.
  • தலதா மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க, பொலநறுவை வட்டதாகே நிசங்கமல்ல அரசனுடைய நிர்மாணிப்பாகக் கொள்ளப்படுவதோடு, பராக்கிரமபாகு மன்னனது நிர்மாணிப்பாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.
  • வெயில் மழை என்பவற்றில் இருந்து பாதுகாப்புப் பெற தூபியை சுற்றி அமைக்கப்பட்ட வட்டதாகே , சைத்தியகர தூபகர , வட்டதாதுகெய எனவும் குறிக்கப்படுகிறது.
  • இது சிறிய அளவிலான தூபிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  • வட்டதாகேக்கு நுழைகையில் 1வது முற்றப் பகுதியை அடுத்துள்ள 2ம் முற்றப் பகுதியின் மத்தியில் தாதுகோபம் ஒன்றுள்ளது. 1ம் முற்றப் பகுதிக்கு நுழைய ஒரு வாயில் மட்டுமே உள்ளது. 2ம் முற்றப் பகுதிக்கு நுழைய 4 வாயில்கள் உள்ளன. இவை காவற்கல், சந்திரவட்டக்கல், கைபிடிச்சுவர் மற்றும் அலங்கார படிவரிசைகள் கொண்டதாக துவார மண்டபம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
  • பொலநறுவை காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலைப் படைப்பான சந்திரவட்டக் கல்லையும், நாகராஜ உருவமுடைய காவற்கல்லையும் பிரதான முற்றப் பகுதிக்கு நுழையும் வட்டதாகேயின் வடக்கு வாயிலில் காணலாம். படிவரிசைகளின் செங்குத்தான பரப்புகளில் அலங்காரமான குள்ள உருவங்கள் (வாமன) செதுக்கப்பட்டுள்ளன.
  • மேல் மாடியில் நன்கு இதழ்கள் கொண்ட அலங்கார பினரமலர் வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வேலி ஒன்று காணப்படுகிறது.
  • தாதுகோபத்தின் நாற்றிசையில், நாற்றிசையை நோக்கிய வண்ணமுள்ள தியான நிலையில் உள்ள நான்கு புத்தர் சிலைகளைக் காணலாம்.
  • பொலநறுவைக் காலத்து புத்தர் சிலைகளிடையே சிறந்த நிருமாணங்களான இவைகளில் காவியுடை சுருக்கமின்றியும் தலைமுடி சுருள்வடிவமின்றியும் காட்டப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இக் கட்டட நிர்மாணம் ……………………………………………. என அழைக்கப்படுகின்றது.
2. இது …………………………………………………….. காலப்பகுதிக்கு உரியதாகும்.
3. இக்கட்டடம் ஆனது ……………………………………………… அரசனுடைய காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.|
4. வெயில் மழை என்பவற்றிலிருந்து சிறிய தூபிகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு …………………………………………. என அழைக்கப்படுகின்றது.
5. இதனை ………………………………………. என்ற வேறு பெயர்களிலும் அழைப்பர்.
6. இங்கு பொலன்னறுவைக் கால சிறந்த சந்திரவட்டக்கல் மற்றும் ……………………………………… செதுக்களையும் காணலாம்.
7. இக்கட்டடத்தின் மாடி பகுதியில் நான்கு இதழ்கள் கொண்ட அலங்கார பினரமலர் வேலைப்பாடுகளுடன் கூடிய …………………………………….. காணப்படுகின்றது.
8. இங்கு காணப்படும் சிறிய சைத்தியத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் ……………………………………….. நிலையில் உள்ள புத்தர் சிலைகள் நான்கை காணலாம்

error: Content is protected !!