பொலநறுவை காலத்து புத்த சிலைகள்
பொலனறுவைக்காலப் புத்தர் சிற்பங்களின் அடிப்படைப் பண்புகள்
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் அதாவது பொலனறுவைக்காலத்தில் உருவாக்கப்பட்ட புதத்தர்சிலைகள், அதற்கு முற்பட்ட காலங்களில் செய்யப்பட்ட சிலைகளைவிட எண்ணக்கரு ரீதியிலும் பண்புகளிலும் வேறுபட்டவையாகும். அனுராதபுரக் காலச் சிற்பக்கலைஞர்கள், புத்தர்சிலைகளின் மூலம் வெளிப்படுத்தி பெரும் பிரக்ஞை. பெருங்கருணை. தியான நிலை போன்ற பண்புகள், பொலனறுவைக்காலப் புத்தர் சிலைகளில் காணப்படவில்லை என விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இக்காலப்பகுதியில் வெவ்வேறு எண்ணக்கருக்களின் கீழ் வெவ்வேறு சிலைப்பண்புகள் வெளிப்படுமாறு புத்ததர் சிலைகள் ஆக்கப்பட்டுள்ளன. தென் இந்திய சோழர் செல்வாக்கும் மகாயான பௌத்த சமயத்தின் செல்வாக்கும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
இக்காலத்தில் புத்தர் சிற்பங்கள் மற்றும் கட்டட நிர்மாணிங்களில் தென்னிந்திய சோழரின் செல்வாக்குப் பெரிதும் உபடுத்தப்பட்டுள்ளது. பொலனறுவைக் காலத்தில் சோழரின் கட்டுப்பட்டுக்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில் இந்துச் சிற்பங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டதாகவும் அச்சிற்பக் கலையின் செல்வாக்குப் பௌத்த சிலை வடித்தற்கலையில் செல்வாக்குச் செலுத்தியதாகவும் கருதப்படுகின்றது. இக்காலப்பகுதியில் முதலாம் விஜயபாகு மன்னன் (கி.பி.1055-11 10) தென்னிந்தியாவில் இருந்து சோழ மரபைச் சேர்ந்த சில புத்தர் சிலைகளைத் தருவித்துள்ளான். அவ்வாறு தருவிக்கப்பட்ட சிலைகளுள் ஒரு சிலை, தற்போது அனுராதபுர தொல்பொருளியல் காட்சிச்சாலையில் வைக்கப் பட்டுள்ளது. அச்சோழச் சிலைகள் இலங்கையின் புத்தர் சிலைகள் மீதும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இவ்வாறான தென்னிந்திய சிற்பக்கலையின் சிலை பண்புகளையும் அனுராதபுர சிற்பக்கலையின் பண்புகளையும் பொலனறுவைக்கால புத்தர் சிலைகளில் காணலாம். மூவளைவு (திரிபங்க) உடல்நிலையானது இந்திய தெய்வச் சிலைகளின் பிரபல்யமான ஒரு உடல்நிலையாகும். இக்காலப்பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான புத்தர்சிலைகள் இம்முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. மேலும் மகர தோரணமானது தென்னிந்திய தெய்வச் சிலைகளைச் சூழ இடப்பட்டதொன்றாகும். அது இக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகளிலும் இடப்பட்டுள்ளது. அவ்வாறான 8 சிற்பங்கள் தெதிகமை, கொட்டவெஹெரையில் இருந்து கண்டுபிடிக்க்பபட்டுள்ளன. மேலும், இக்காலப்பகுதியில் ஆக்கப்பட்ட புத்தர்சிலைகள் மீது மகாயான பௌத்த எண்ணக்கருக்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன என விக்ரமகே குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மகாயான புத்தர் சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தரின் பண்புகளை இக்காலப்பகுதியைச் சேர்ந்த சிலைகளில் காணமுடிகின்றது என்பது அவரது கருத்தாகும். பொலனறுவைக் கல் விகாரைப் புத்தர்சிலைகள் இதற்கான முக்கியமான ஓர் உதாரணமாகும்.
பொலனறுவைக் காலத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் மெல்லிய காவியுடைக்குப் பதிலாக தடித்த, கனதியான காவியுடை, அகன்ற முகம், நிரம்பிய தடித்த உதடுகள், ஒடுக்கமான நெற்றி, மிகக் குறுகிய முடிச்சுருள்கள் போன்ற பண்புகள் தெள்ளத்தெளிவாகத் தெரிவதாக சிரி குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இக்காலப்பகுதியைச் சேர்ந்த நின்றநிலைச் சிற்பங்களில் பொது இயல்புகள் சிலவற்றைக் காணலாம். ஒவ்வொரு சிலையும் சிலை மனையினுள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. தூபாராமை, லங்காதிலக்கை, திவங்க சிலை மனை ஆகிய இடங்களில் உள்ள சிலைகளை இதற்கான உதாரணங் களாகக் குறிப்பிடலாம். கல்விகாரைப் புத்தர் சிலைகளுக்கும் சில மனைகள் அமைக்கப்பட்டிருந்தமைக் குச் சான்றுகளை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் அச்சிலைமனைகளுக்குப் பொருத்தமானவாறு மிகப்பெரிய புத்தர்சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு அவை யாவும் திரிபங்க நிலை உடல்நிலை கொண்டவையாகும். தூபாராமய, லங்காதிலக்கை, திவங்க சிலை மனை ஆகியவற்றில் சிலைகளில் தலையும் கைகளும் சிதைவடைந்துள்ளமையால் அவற்றினால் காட்டப்பட்ட முத்திரைகள் எவை எனத் தெளிவாக அறியமுடியாதுள்ளது. எல்லாச் சிலைகளும் செங்கல்லால் ஆக்கப்பட்டு, சுண்ணாம்புச் சாந்து மெழுகி, வர்ணந்தீட்டப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. மேலும் இந்த எல்லாப் புத்தர் சிலைகளும் வட்டவடிவமான பீடத்தின் மீது (பத்மாசனம்) தாபிக்கப்பட்டுள்ளன.
இக்காலத்தைச் சேர்ந்த அமர்ந்தநிலைப் புத்தர் சிற்பங்களில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளையும் ஒத்த பண்புகளையும் காண முடிகின்றது. கல் விகாரைச் சிற்பங்கள், வட்டதாகேச் சிற்பங்கள், கொட்டவெஹெரைச் சிற்பங்கள் ஆகியன வீராசனம், தியானநிலை முத்திரை ஆகியவற்றினால் மாத்திரமே ஒன்றுக்கொன்று ஒத்தவையாகக் காணப்படுகின்றன.
கல் விகாரைப் புத்தர் சிலைகள்
கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பொலனறுவைக்காலத்துக்குரிய கல்விகாரை, முதலாம் பராக்கிரமபாகு (1155-1186) மன்னனால் கட்டுவிக்கப்பட்ட உத்தராராமய (வட ஆலயம்) ஆகும் என நம்பப்படுகின்றது. உள் நகரத்துக்கு வடக்குத் திசையில் அமைந்துள்ளமையால் அது அப்பெயரைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இவ்விகாரையை அமைப்பதற்காக இயற்கையான ஒரு கற்பாறையே தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் திட்டத்துக்கு அமைய நான்கு புத்தர் சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றது.
பொலனறுவை இராசதானியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடர்ந்த காட்டில் கல்விகாரை 1820 இல் லெப்ரினன் பேகன் இனால் மீளக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அதனைக் கண்டுபிடித்த வேளையில் உத்தராராமய எனும் பெயரை அறிந்திருக்கவில்லையாதலால் கல்லால் செய்யப்பட்ட விகாரை எனும் பொருளைத் தரும் வகையில் கல் விகாரை எனப் பெயரிட்டார்.
கல்விகாரைப் புத்தர் சிற்பங்களில் காணப்படும் பொதுப்பண்புகள்
- ‘மகாயான’ கலைமரபின் பண்புகளாகிய பத்துப் பெரும் பண்புகளையும் வீரமும் காட்டப்பட்டிருத்தல். சிற்பத்தின் பின்புறத்திலும் ஆசனத்திலும் (பீடத்திலும்) மகாயான பௌத்த எண்ணக்கருக்களைச் சேர்ந்தவையாகக் கருதப்படும் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. தோரணம், ஐந்து தியான புத்தர் உருவங்கள், சிங்க வஜ்ர உருவங்கள், குடைகள் ஆகியன இதில் அடங்கும்.
- மேற்பகுதி உடலில் ஒரு பக்கத்தை மறைத்தவாறு உடலுடன் ஒட்டிய காவியுடையில் மடிப்புக்கள் சமாந்தரமாக இரட்டைக்கோடுகளைக் கொண்டமைந்திருத்தல்.
- நேரான காதுச்சோணைகளும் வலஞ்சுழியான சுருள் கேசமும் காட்டப்பட்டிருப்பதோடு, ஊஷ்னிக்கை மெல்லியதாகக் காட்டப்பட்டிருத்தல்.
- உடலுறுப்புக்கள் பொலிவுடையதாகக் காட்டப்பட்டுள்ளதோடு, முகம் பொலிவாகவும் வட்டவடிவமாகவும் காட்டப்பட்டிருத்தல்,
- இயற்கையாக கற்பாறையில் உயர் புடைப்பு நுட்பமுறையில் செதுக்கப்பட்டிருத்தல்.
பொலனறுவைக் கல்விகாரையின் அமர்ந்தநிலைப் புத்தர் சிற்பங்கள் (தோரணத்துடன்)
இப்புத்தர் சிலை இலங்கையில் ஆக்கப்பட்டுள்ள புத்தர்சிலைகளுள் சிறப்புப் பெறுவதற்கான காரணம் அது ஒரு தோரணத்தைப் பின்னணியாகக்கொண்டு செதுக்கப்பட்டுள்ளமையாகும். 15 அடி உயரமான இச்சிலை வீராசன முறையில் அமர்ந்துள்ளதோடு, கைகள் தியான முத்திரையைக் காட்டி நிற்கின்றன. வலது தோள் திறந்திருக்குமாறும் இடது தோள் மூடியிருக்குமாறும் காவியுடை போர்த்தப்பட்டுள்ளது. காவியுடையில் அழகாக இரட்டை மடிப்புக்கள் இடப்பட்டுள்ளன. அது உடலுடன் ஒட்டிய தன்மையையும் காட்டி நிற்கின்றது. இச்சிலையினது பீடத்தின் (ஆசேனத்தின் இரு புறங்களிலும் வஜ்ராசனத்துக்குரிய வைர (வஜ்ர) குறியீடுகளும் சிம்ம ஆசனத்துக்குரிய சிங்க உருவங்களும் சிறு புடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளன. அவ்வாசனத்தின் மீத விரிந்த தாமரை மலரொன்றும் செதுக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரு கலப்பு ஆசனம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சிலையின் பின்னால் ஒரு தோரணம் காணப்படுகின்றது. அத்தோரணத்தின் கிடைக்கோல்களின் அந்தங்களில் சிறுபுடைப்பு முறயில் மகர வாய்கள் செதுக்கப்பட்டுள்ளன. அம்மகர வாய்களிலிருந்து சிங்கங்கள் வெளியேறுவது காட்டப்பட்டுள்ளது. அக்கிடைக்கோல்களுக்கு மேலாக இத்தோரணம் வில்வளைவு வடிவத்தைக் கொண்டமைந்துள்ளது, தோரணத்தின் இருபுறத்திலும் உள்ள நிலைக்குத்தான இரண்டு தூண்களின்மீது இவ்வில்வளைவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அரைவட்ட வடிவ வில்வளைவு மலர்ந்த தாமரை மலர்களினால் அழகுபடுத்தப்பட்டுள்ளதோடு, அவ்வாறான 10 தாமரை மலர்கள் அதில் உள்ளன. மேலும் இந்த வில்வளைவு வடிவ முனைப் பகுதியின் இரு புறங்களிலும் இரண்டு விமானங்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்த நிலைப் புத்தர் சிலைகள் இரண்டு வீதம் செதுக்கப்பட்டுள்ளன. வில் வளைவினால் உருவாகும் நீள்வட்டவடிவ ஒளிவட்டமானது சிலையில் சிரசைச்சூழ ஒளிவட்டத்தைப் பரப்பும் விதத்தில் காட்டப்பட்டுள்ளது.
புத்தர் நிலையை அடைத்த பின்னர் ‘ரத்னாகார’ இனுள் புத்தர் பெருமான் நான்காவது வாரத்தைக் கழித்தவிதம் இச்சிலையினால் காட்டப்படுவதாகக் கூறப்படுகின்றது. மேலும் இச்சிலை மகாயான புத்த சமய எண்ணக்கருக்களிற்கு அமைவாகச் செதுக்கப்பட்டுள்ளதாக சந்திரா விக்ரமகே கருத்துத் தெரிவித்துள்ளனர். சிறிய சட்டகத்தில் உள்ள புத்தர்சிலை மற்றும் பிரதான புத்தர்சிலையுடன் இங்கு காட்டப்பட்டுள்ள ஐந்து சிலைகள் மூலம் மகாயான பௌத்த சமயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து தியான நிலைப் புத்தர்கள் குறிக்கப்படுவதாக அவர் கருதுகின்றார். எவ்வாறாயினும் இந்த தியான நிலை புத்தர் உருவங்களினாலும் சிம்ம ஆசனத்தில் உள்ள வைர (வஜ்ர) குறியீடுகளாலும் மகாயானப் பண்புகளே எடுத்துக்காட்டப்படுகின்றன என வாதிடலாம்.
இச்சிலையின் முகம் சற்று வட்டவடிவமானது. நெற்றி ஒடுக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. பாதி மூடிய நிலையில் உள்ள கண்களால் புத்தர் பெருமானின் பெருங்கருணை, சாந்தத்தன்மை போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. வலஞ்சுழியான சற்று ஆழமான தலைமுடிச் கருளிகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் தலை உச்சியில் மெல்லிய குடுமி காட்டப்பட்டுள்ளது.
பொலனறுவைக் கல்விகாரையின் வித்யாதர குகையில் உள்ள
அமர்ந்தநிலைப் புத்தர் சிற்பம்
பொலனறுவைக் கல்விகாரையில் உள்ள புத்தர் சிலைகளுள் இச்சிலை சிறப்புப் பெறுவதற்காகக் காரணம் இது அதற்கென அமைக்கப்பட்ட ஓர குகையினுள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையாகும். இவ்வாறான புதுதர் சிற்பங்கள் இலங்கையில் மிக அரிதாகவே காண்பபடுகின்றன. 4 அடி 7 அங்குல உயரமான இப்புத்தர் சிற்பம் வீராசன முறையில் அமர்ந்துள்ளதோடு கைகள் தியான முத்திரையைக் காட்டுமாறு அமைந்துள்ளது.)
நீள் செவ்வக வடிவ அடிப்பகுதி மீதமைத்த தாமரை மலர் வடிவ திண்டு மீது வீராசன உடல் நிலையில் அமர்ந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. அமர்ந்திருக்கும் நீள் செவ்வகவடிவ ஆசனத்தில் இரண்டு சிங்க உருவங்களும் இரண்டு வைர (வஜ்ர) உருவங்களும் சிறுபுடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளன. சிலையின் பின்புறம் சிறிய தோரணம் அமைந்துள்ளது. அதன் கிடைக் கோல்களில் அந்தங்களில் மகரவாய் அமைந்துள்ளது. இச்சிற்பத்தின் இருபுறங்களிலும் குடை பிடிக்கும் இருவர்
சிற்பத்துக்கு மேலாக தோரணத்தின் மீது உள்ள தெய்வ உருவங்கள் பிரம்மாவும் விஷ்ணுவும் ஆவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மா தமது பின்னங்கைகளினால் குடையையும் ஏட்டையும் தாங்கியிருப்பதோடு, விஷ்ணு சங்கையும் தாமரையையும் (பதுமம்) தாங்கியுள்ளது. இரண்ட உருவங்களிலும் முன்கைகளால் அஞ்சலி முத்திரை காட்டப்பட்டுள்ளது. மேலும் இப்புத்தர் சிற்பத்திற்கு மேலே இயல்பான கல்லில் செதுக்கப்பட்ட பெரிய குடை உள்ளது.
இச்சிற்பத்தின் முகம் சற்று வட்டவடிவமானது; நெற்றி ஒடுக்கமானது: பாதி மூடிய கண்களைக்கொண்ட இம்முகத்தினால் புத்தர் பெருமானின் பெருங்கருணை. சாந்தம் போன்ற இயல்புகள் காட்டப்படுகின்றன. வலஞ்சுழியாக ஆழமான மயிர்ச் சுருட்டைகள் காட்டப்பட்டுள்ளன. தலை உச்சியில் மெல்லிய குடுமி உள்ளது; காவியுடையில் அழகாக இரட்டை மடிப்புக்கள் இடப்பட்டுள்ளதோடு, அவ்வுடை உடலுடன் ஒட்டிக் காணப்படுகின்றது. இப்புத்தர் சிலை அமைந்துள்ள அறை, சிறிய சிலைமனையொன்றின் தன்மையைக் கொண்டுள்ளது. அதன் சுவரில் பொலனறுவைக்காலத்தைச் சேர்ந்த சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ‘புத்தர்’ எனும் நிலையை அடைந்த சந்தர்ப்பமும் அச்சந்தர்ப்பத்தில் வருகை தந்திருந்த பிரம்மனும் தெய்வங்களும் இங்கு வரையப்பட்டிருந்ததாகவும்
தற்போது எஞ்சியுள்ள ஓவியப்பகுதிகள் மூலம் அறிய முடிவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பேராசிரியர் சந்திரா விக்கிரமகம் அவர்கள் கூறுவதற்கிணங்க, இது மகாவம்சம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நிசின்ன பட்டிமா’ எனும் குகையாகும். ‘அமர்ந்த நிலைச் சிலைமனை’ என்பதே அதன் பொருளாகும். வயோதிப சக்கிரனம் (Sakra) தமது ஆயுளை நீடித்துக் கொள்வதற்காக புத்தர் அமர்ந்திருந்த இந்தசால குகைக்கு வருகை தந்தமையை இது குறிக்கின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
கல் விகாரையின் நின்ற நிலைச் சிற்பங்கள்
கல் விகாரைப் புத்தர்சிலைகள் முதலாம் பராக்கிரமபாகு மன்னன் (கி.பி. 1153-1156) காலத்தைச் சேர்ந்தவை என சூலவம்சம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய பொலனறுவைக் கல் விகாரையின் நின்ற நிலைச் சிலையும் இக்காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இது 22 அடி 9 அங்குல உயரமான இயல்பாக அமைந்திருந்த கல்லில் அதிபுடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இது மூவளைவு (திரிவங்க) உடல் நிலையைக் கொண்டது. இச்சிலை பத்மாசனத்தின் மீது நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
கல் விகாரையில் சயனநிலைப் புத்தர் சிலைக்கு அருகில் அமைந்துள்ளமையால், இது ஆனந்த தேரர் சிலையாகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புத்தர் பெருமானின் ஆயுட்கால உதவியாளராகிய ஆனந்த தேரர் புத்தரது பரிநிர்வாணத்தின்போது புலம்பும் விதம் காட்டப்பட்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். அதற்கமைய இச்சிலையில் காட்டப்பட்டுள்ள முத்திரை ‘பரதுக்க துக்கித்த” முத்திரையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹோரகாட், பெல், பரணவித்தான ஆகியோர் இது புத்தர் பெருமானின் சிலையாகும் எனக் கூறியுள்ளனர். பத்மாசனமொன்றின் மீது அமைந்துள்ளமையாலும், இதன் மூலம் காட்டப்படும் மகா புருஷப்பண்புக்ள காரணமாகவும் இது புத்தர் பெருமானயே குறிக்கின்றது என பரணவித்தான கருதுகின்றார். இது எந்த வகையிலும் புலம்பும் ஆனந்ததேரருடைய சிலை அல்ல எனவும், பரதுக்க முத்திரை மூலம் காட்டப்படுவது, ஏனையோரின் துக்கத்தின்போது மனமுருகும் புத்தர் பெருமானின் கைகளால் காட்டும் முத்திரையாகும் எனவும் அவர் கூறுகின்றார். அவ்வாறே இது புத்தரின் தியான நிலையாகும் எனக் கூறும் நன்னதன சுட்டிவொங்கஸ் உம் ஏனையோரும், அதற்குச் சான்றாக புத்தர் பெருமானின் இரண்டாவது வாரத்தைக் காட்டுவதற்காகக் கண்டிக் காலத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை எடுத்துக்காட்டுகின்றனர். அவ்வோவியங்களில் உள்ள மார்பு மீது . கட்டப்பட்ட கைகளுடன் கூடிய புத்தர் பெருமான், அரச மரத்தை நோக்கியவாறு தியான நிலையில் உள்ளார். கல்விகாரைப் புத்தர் சிலையானது, புத்தர் பெருமான் அவ்வாறாக கண்ணிமைக்காது ஒருவார காலம் அரசமரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை அன்மிச லோச்சன பூஜாவ காட்டுகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.
இலகுவான உடல்நிலையுடன் பத்மாசனத்தின்மீது நின்றிருக்கும் சிற்பத்தின் இடது கால் முழங்காலில் சற்று மடிந்திருப்பதன் மூலமும் தலை உயர்த்தி வைக்கப்பட்டிருப்பதன் மூலமும் மூளைவு விளைவுத்தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் முகம் சற்றுவட்ட வடிவமானது. நெற்றி ஒடுக்கமாகக் காட்டப்பட்டுள்ளது. பாதி மூடிய கண்களைக்கொண்ட முகத்தினால் புத்தரின் பெருங்கருணை, சாந்தம் போன்ற இயல்புகளும் புன்சிரிப்பும் வெளிப்படுத்தப்படுகின்றது. வலஞ்சுழியாக சற்று ஆழமான சுருள்கேசம் காட்டப்பட்டுள்ளன. ஊடுருவிக்காட்டும் வகையில் காவியுடை மடிப்புக்க்ள மெல்லியதாகக் காட்டப்பட்டுள்ளது. கூடவே பொலனறுவைக்காலக் கலைஞர்கள் பெரிதும் விரும்பிய முறையை அனுசரித்து இரட்டைக் காவியுடை மடிப்பு இடப்பட்டுள்ளது. இச்சிலை 22 அடி 9 அங்குலம் உயரமானது.
பொலனறுவைக் கல் விகாரையின் சயனநிலைப் புத்தர் சிற்பம்
பொலனறுவைக்காலத்தில் சயனநிலைப் புத்தர் சிலைகள் குறைவாகவே ஆக்கப்பட்டடுள்ளன எனினும் பொலனறுவைக் கல்விகாரை, தந்திரிமலை, பக்கமூனை ஆகிய பிரதேசங்களில் பாரிய மூன்று சயனநிலைப் புத்தர்சிலைகள் காணப்படுகின்றன. இவற்றுள் பொலனறுவைக் கல்விகாரை சயனநிலை புத்தர்சிலையே பெரிதும் கவனத்திற்குள்ளாகிய சிலையாகக் கருதப்படுகின்றது.
சயன உடல்நிலையைக் காட்டும் இப்புத்தர்சிலை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன. இச்சிலையினால் புத்தரின் சயனநிலை காட்டப்படுகின்றது என்பது ஒரு கருத்தாகும். புத்தர் பெருமானின் பரிநிர்வாணம் காட்டப்படுகின்றது எனும் கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விகாரையில் உள்ள ஏனைய சிலைகளில் காணப்படும் எல்லாப் பண்புகளும் இச்சிலையிலும் காணப்படுகின்றது. முகம் சற்று வட்டவடிவமானது; உதடுகள், பாதி மூடிய கண்கள், பொலிவான கன்னங்கள், உள்ளங்கை, தோள்கள், புயங்கள் போன்றவை தெள்ளத்தெளிவானவை. வலஞ்சுழியாக தலைமுடிச் சுருள்கள், சற்று ஆழமானவை. இச்சிலையின் உஷ்நிஷா சிறியது. சயனித்திருக்கும் உடல்நிலையின்படி உடல் தசைகளின் அமைவு, தலையை வைத்துள்ள தலையணை தலையின் பாரத்தினால் உட்பதிந்துள்ள விதம், மேற்காது முகத்தின் வடிவத்திற்கேற்ப வளைந்துள்ள விதம் ஆகியன மிகத் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
பொலனறுவை வட்டதாகை புத்தர் சிலைகள்
பொலனறுவை வட்டதாகேயின் உட்பறத்தே மத்தியில் அமைந்துள்ள தாதுகோபத்தைச் சூழ நான்கு அமர்ந்தநிலைச் சிலைகள் காணப்படுகின்றன. வீராசன முறையில் தியான முத்திரையுடன் இச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புத்தர்சிலையில் உஷ்நிஷாலோ சிரசணியோ கிடையாது. மேலும் வலஞ்சுழியான தலைமுடிைச் சுருள்களும் கிடையாது. தலையில் முடி முற்றுமுழுதாக நீக்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் காட்டப்பட்டுள்ளது. இது ஆரம்ப குப்த காலத்துக்குரிய ”மன்கூவர்” சிலைகளை நினைவூட்டுகின்றது. ஒரு தோளை மாத்திரம் முடியுள்ள காவியுடை, அனுராதபுரக் கால புத்தர்சிலைகளிற்போன்றே மடிப்புக்கள் அற்றதாகவும் உடலுடன் ஒட்டியவாறும் காட்டப்பட்டுள்ளது. எனினும் காவியுடையின் அந்தம் பிற்காலப் புத்தர்சிலைகளில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று நாடாவொன்று காட்டப்பட்டுள்ளது.
பொலனறுவைக்கால ஏனைய சிலைகளைவிடவும் உயர்வான ஆன்மீகப் பண்பு முகத்தில் காட்டப்பட்டுள்ளமை, மடிப்புகள் கொண்ட காவியுடை, தலைமயிர் இன்மை போன்ற சிலைவடிப்புப் பண்புகள் காரணமாக இச்சிலைகள் நான்கும் பொலனறுவைக்காலத்துக்கு முற்பட்டவை என பரணவித்தான, வண. கம்புறுப்பிட்டியே வனரதன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இச்சிலைகள் அனுராதபுரக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டன என்பதும், நிஸ்ஸங்க மல்ல மன்னனால் வட்டதாகே கட்டுவிக்கப்பட்டு இச்சிலைகள் வேறு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்பதும் பரணவித்தான், விஜேசேக்கர ஆகியோரின் கருத்தாகும். மேலும் இச்சிலைகள் மதுரா மரபுக்குரிய பண்புகளைக் காட்டுவதாகவும் பரணவித்தான தெரிவித்துள்ளார்.