பொலநறுவை காலத்து கட்டட நிர்மாணம்
நிசங்க லதா மண்டபம்
இலங்கைக் கட்டட நிர்மாணத் துறையின் உன்னத படைப்பெனக் கொள்ளப்படும் இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (கி.பி. 1187-1196) காலப் பகுதிக்குரியது. பொலநறுவையை ஆட்சி செய்த நிசங்கமல்ல எனும் அரசனால் கட்டுவிக்கப்பட்டது. • இம்மண்டபம் செவ்வக வடிவமுடையது.
அனுராதபுர ஜேதவனாராமயக்கு அருகில் உள்ள நிர்மாணங்களுக்கு ஒத்ததாக சுற்றிவர கற்கிராதி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மத்தியில் நீர்குமிழி வடிவ சிறிய தாதுகோபம் ஒன்றும் அதற்கு நுழைவதற்காக ஒரு வாயிலும் காணப்படுகிறது. தாதுகோபத்தின் அடியில், அமர்ந்து வணங்கும் மனித உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அலங்காரத் தூண்களே இக்கட்டடத்தின் சிறப்பான நிர்மாணங்களாகின்றன. ஒரு கற்றூண் 7 அடி உயரமுடையது. இத்தூண்கள் அதுவரையில் காணப்பட்டவாறாக செங்குத்தாக அல்லாமல் இயற்கை யிலுள்ள வடிவங்களைக் கொண்டு லயத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தாமரைத் தாவரத்தின் பண்புகளைச் சந்தத்திற்காக பயன்படுத்தி இத்தூண்கள் நிர்மாணிக் கப்படுகின்றது. தூண்களின் உச்சி பாதி மலர்ந்த தாமரை மலரின் சுபாவத்தைக் காட்டுகிறது. இலங்கை கட்டட நிர்மாணத் துறையின் உன்னத படைப்பாகக் கொள்ளப்படும் இது நிசங்கமல்ல அரசன் தர்ம போதனையை செவிமடுக்கவும், புனித தந்தத்தை வழிபடவும், பிரித் செவிமடுக்கவும் என சமயத் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகக் கல்வெட்டு
களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பொலநறுவ வட்டதாகே
Bocess
–
ad-o
VATARAN
–
பொலநறுவை தலதா மண்டபத்துக்கு நுழைந்ததும் இடப்புறத்தில் வட்டதாகே எனும் வட்டவடிவ தாது மண்டபத்தைக் காணலாம். தலதா மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டதற்கிணங்க, பொலநறுவை வட்டதாகே நிசங்கமல்ல அரசனுடைய நிர்மாணிப்பாகக் கொள்ளப்படுவதோடு, பராக்கிரமபாகு மன்னனது நிர்மாணிப்பாக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது. . வெயில் மழை என்பவற்றில் இருந்து பாதுகாப்புப் பெற தூபியை சுற்றி அமைக்கப்பட்ட
வட்டதாகே , சைத்தியகர தூபகர , வட்டதாதுகெய எனவும் குறிக்கப்படுகிறது. • இது சிறிய அளவிலான தூபிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
வட்டதாகேக்கு நுழைகையில் 1வது முற்றப் பகுதியை அடுத்துள்ள 2ம் முற்றப் பகுதியின் மத்தியில் தாதுகோபம் ஒன்றுள்ளது. 1ம் முற்றப் பகுதிக்கு நுழைய ஒரு வாயில் மட்டுமே உள்ளது. 2ம் முற்றப் பகுதிக்கு நுழைய 4 வாயில்கள் உள்ளன. இவை காவற்கல், சந்திரவட்டக்கல், கைபிடிச்சுவர் மற்றும் அலங்கார படிவரிசைகள் கொண்டதாக துவார மண்டபம் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
பொலநறுவை காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலைப் படைப்பான சந்திரவட்டக் கல்லையும், நாகராஜ உருவமுடைய காவற்கல்லையும் பிரதான முற்றப் பகுதிக்கு நுழையும் வட்டதாகேயின் வடக்கு வாயிலில் காணலாம். படிவரிசைகளின் செங்குத்தான பரப்புகளில் அலங்காரமான குள்ள உருவங்கள் (வாமன) செதுக்கப்பட்டுள்ளன.
மேல் மாடியில் நன்கு இதழ்கள் கொண்ட அலங்கார பினரமலர் வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வேலி ஒன்று காணப்படுகிறது. தாதுகோபத்தின் நாற்றிசையில், நாற்றிசையை நோக்கிய வண்ணமுள்ள தியான நிலையில் உள்ள நான்கு புத்தர் சிலைகளைக் காணலாம். பொலநறுவைக் காலத்து புத்தர் சிலைகளிடையே சிறந்த நிருமாணங்களான இவைகளில் காவியுடை சுருக்கமின்றியும் தலைமுடி சுருள்வடிவமின்றியும் காட்டப்பட்டுள்ளன.
1 ஆம் சிவ ஆலயம்
13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஓர் இந்து ஆலயமாகக் கருதப்பட்ட இவ்வாலயம் தென்னிந்திய கட்டட நிர்மாண பாணியைக் கொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் கருத்தாகும். இந்துக் கட்டடக்கலை இயல்புகளான மண்டபம், கர்ப்பக்கிரகம், உள் மண்டபம் போன்ற வற்றை இது கொண்டுள்ளது. கற்களை சீராக வெட்டி, ஒன்றுடனொன்று பொருந்துமாறு இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பியல்பாகும். கற்களை இணைப்பதற்காக சாந்து பயன்படுத்தப்படவில்லை. சுவர் வெளித்தள்ளிய விதத்தில் கருங்கல்லை செதுக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் வெளித்தள்ளிய பகுதிகளையும், வெளித்தள்ளிய அமைப்பில் தூண்களையும் விமானங்களையும் காணலாம். தூண் தலைகளில் தாமரை மலர் அமைப்பையும் கொண்டிருக்கும். சிகரம் செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தது என்பதை இன்று மீதியாக உள்ள காரணங்கள் மூலம் அறிய முடிகின்றது. சிவன் வழிபாட்டின் பொருட்டு நிருமாணிக்கப்பட்ட வெங்கலச் சிலைகள் பல இந்த
சிவாலயத்திலிருந்து கிடைத்துள்ளன.
2 ஆம் சிவ ஆலயம்
பொலநறுவையில் காணக்கூடிய 2ம் சிவாலயம் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டது எனக் கருதப்படுகின்றது.
பொலநறுவைக் காலத்தைச் சேர்ந்த மிகப் பழைய ஆலயம் இதுவாகும்.
இவ்வாலயம் வானவன் மாதேவி ஈசுரமுடையார்’ என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜ ராஜ சோழனின் பட்டத்து ராணியை நினைவு கூருவதற்காகக் கட்டப்பட்டது. வடிவமைக்கப்பட்ட அடித்தளத்தைக் கொண்ட அதிஸ்டானம் மீது கட்டப்பட்ட இவ்வாலயத்தின் வெளிச்சுவர்கள் ஒன்றிணைந்த தூண்களால் ஆனவை.
அதன் முகடு 3 அடுக்குகளைக் கொண்டது. கூரை எண்கோண வடிவமுடையது. அத்தூண்களுக்கு மேலாக பிரமிட்டு போன்ற கூரை உள்ளது. தென் இந்தியச் சோழர்களின் கட்டட நிர்மாணப் பாணியில் அமைந்துள்ளது. இந்துக் கட்டடக்கலை இயல்புகளான மண்டபம், கர்ப்பக்கிரகம், உள்மண்டபம் போன்றவற்றை இது கொண்டுள்ளது. இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகத்துள் கல்லாலான சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாலயத்திலிருந்து நடராஜர் சிலை, பார்வதி சிலை என்பனவும் மேலும் பல இந்து சிலைகளும் கண்டெக்கப்பட்டுள்ளன.
கற்களால் சீராக வெட்டி, ஒன்றுடனொன்று பொருந்துமாறு இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பியல்பாகும். கற்களை இணைப்பதற்காக சாந்து பயன்படுத்தப்படவில்லை.