பொலநறுவைக் காலத்து சிலைகள்

பொலநறுவைக் காலத்து சிலைகள் பொலநறுவை கல்விகாரைப் புத்தர் சிலைகள் • கி.பி. 12ம் நூற்றாண்டில் பொலநறுவைக் காலத்தில் மகா பாராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இந்த விகாரை அதாவது உத்தராராமை நிர்மாணிக்கப்பட்டது. கருங்கல்லில் நான்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளதால் கல்விகாரை எனப்பட்டது. கல்விகாரை புத்தர் சிலைகள் தேரவாத பெளத்த எண்ணக்கருவை விட மகாயான பெளத்த எண்ணக்கருவை எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். • கல்விகாரை புத்தர் சிலைகளில் காணப்படும் பொதுப் பண்புகள் – மகாயான கலைப் பாரம்பரிய இயல்புகளை கொண்டதுடன் கருணைத் தோற்றத்தை விட வீரக் குணங்களையும், வீரத்தன்மைகளையும் கொண்டதாகக் காட்டுகிறது. ஒரு பக்கத்தை மறைக்கும் உடலோடு ஒட்டிய காவியுடை சமாந்தரமாக இடப்பட்ட இரட்டைக் கோடுகளால் அமைக்கப்பட்டிருத்தல். – அரைவாசி மூடிய கண்கள், நீண்ட காதுகள் – சுருள் தலைமுடி கொண்ட உச்சிக் குடுமியும் காட்டப்படல்.

அமர்ந்த நிலையிலிருக்கும் பாரிய சமாதி புத்தர் சிலை

  • கல்விகாரை புனித பூமிக்குள் வீராசணத்தில் அமர்ந்த நிலையில் காணப்படும் பெரிய புத்தர் சிலை இதுவாகும்.

புடைப்புச் சிற்பமாகிய இது தியான நிலையை குறித்து நிற்கிறது. இதன் ஆசனத்தில் வஜிர குறியீட்டு அலங்காரங்களும், சிம்ம உருவங்களும் பொளியப்பட் டுள்ளன. இவ்வாசனம் வஜிராசனம் என அழைக்கப்படுகிறது. புத்தர் சிலையின் தலைக்குப் பின்னால் தாமரைப் பூ அலங்காரங்களைக் கொண்ட ஒளிச் சுடருடன் அலங்கார தோரண வேலைப்பாடும் இருக்கிறது. இங்கே செங்குத்தாகவும் கிடையாகவும் அமைந்த தூண்களும், சிறிய புத்தர் சிலைகளைக் கொண்ட விமான அலங்காரங்களும் உள்ளன. கிடையாக அமைந்த தூண்களின்

அந்தங்களில் மகர வாயும் சிம்ம உருவமும் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இயல்பாக கல்லின் மீது ஒப்பமாகப் பொளியப்பட்டுள்ள இச்சிலையின் ஒரு புறத்தை மூடிய காவியுடை இரட்டைக் கோடுகளுடன் உடலுடன் ஒட்டியவாறு ஆக்கப்பட்டுள்ளது. நீண்ட காது, சுருள் முடியுடன் உச்சிக்குடுமி உள்ளது. படைப்பாளரின் பண்புகள் மகாயான பௌத்தத்தின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று விமர்சகர்களின் கருத்தாகும்.

வித்தியாதர குகை புத்தர் சிலை

முதன் முதலாக இயல்பான கல்லைக் குடைந்து நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெரிய குகையான வித்தியாதர குகை இலங்கையர்களின் செதுக்கற் கலையின் சிறந்த ஒரு படைப்பாகும். • வஜிரக் குறியீடுகளையும், சிம்ம உருவ செதுக்கல்களையும் கொண்ட வஜிராசனத்தின் மீது புத்த பெருமான் வீராசன முறையில், தியான நிலையில் அமர்ந்து இருப்பதை குகை மத்தியில் காணலாம். • அதிக புடைப்பாகப் பொளியப்பட்டுள்ள ஒரு சிலையாகும். • புத்தர் சிலையுடன் பல்வேறுபட்ட உருவங்கள் கற்சுவரில் புடைப்பு முறையில் ஒழுங் கிணைக்கப்பட்டுள்ளன. சிலைக்கு பின்னால் தோரணம் ஒன்று இருக்கிறது. தலைக்கு மேல் குடை வடிவம் ஒன்று உள்ளது. மேற்பக்கமாக இரு புறங்களிலும் இரு தேவர்களின் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. கீழ்பக்கமாக இருபுறத்திலும் சாமரமேந்திய இருவர் காணப்படு கின்றனர். ஆசனத்தின் பிற்புறத்தில் இரண்டு பக்கங்களிலும் இரு சிங்க உருவங்கள் உள்ளன. மேற்புறமாக உள்ள தேவர்கள் பிரம்மாவும், விஸ்ணுவும் ஆவார்கள். சாமரமேந்திய வடிவங்கள் வித்தியாதரர்கள்’ என்பது விமர்சகர்களின் கருத்தாகும். கூரை அமைப்பிலும், சுவர்களிலும் தேவர்களின் உருவங்கள் அதிகம் இருந்ததாக சான்றுகள் உள்ளன. இந்திரஜால் குகையில் சாக்கிய கடவுளை புத்தர் சந்திக்கும் நிகழ்வு கூரையிலும் சுவர்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இரட்டைக் கோடுகளாக காவியுடை செதுக்கப்பட்டுள்ள கால்கள் வீராசன முறையிலும்

கைகள் தியான முறையிலும் உள்ளன. • உயர் புடைப்பு நுட்ப முறையுடன் நிர்மாணிக்கப்பட்ட சிலை 4 அடி 7 அங்குலம் உயரமுடையது. நுணுக்கமாகப் பொளியப்பட்டுள்ள சிலையின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைக்கும் காவியுடை , இரட்டைக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. • நீண்ட காதுக்கள், சுருள் முடி மீது உச்சிக்குடுமி காட்டப்பட்டுள்ளது. சிலையினால் காட்டப்படும் படைப்பாக்க அம்சங்கள் மூலம் மகாயான எண்ணக்கருக்களை

வெளிக்கொணர முயற்சி செய்யப்பட்டுள்ளது என்பது விமர்சகரின் கருத்தாகும்

நின்ற நிலை சிலை

தாமரை பீடத்தின் மீது மூவளைவுகளுடன் (திரிவங்க) நின்ற நிலையாக நிர்மாணிக்கப் பட்ட இச்சிலை அதிபுடைப்புச் சிலையாகப் பொளியப்பட்டுள்ளது.

ஒப்பமாக வடிக்கப்பட்டுள்ள சிலையின் காவியுடையின் மடிப்புகள் சமாந்தரமான இரட்டைக்கோடுகளால் அமைக்கப்பட்டது. சிலையின் கைகள் நெஞ்சின் மீது குறுக்காக கட்டப்பட்ட நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் செனரத் பரணவித்தான அவர்கள், இச்சிலை ‘பிறரின் துக்கத்திற்கு துக்கித்தல் தன்மை’ வெளிப்படும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது என்கிறார்.

புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை (இறப்பை) இட்டு வேதனைப்படும் இது ஆனந்த தேரரின் சிலை எனக் கருதப்படுகிறது.

இச்சிலையில் காணப்படும் முத்திரை பற்றி வேறு கருத்தும் நிலவுகின்றது.

நீளமான காதுகள், குடுமி, சற்று சுருண்ட முடி, தாமரை மீது வீற்றிருத்தல் ஆகியவற்றைக் கருதி இச்சிலை புத்தர் சிலை எனக் கருதப்படுகிறது. ஏனெனில் தெய்வீக வடிவங்கள் மாத்திரமே தாமரை மலர் மீது காட்டப்படும்.

துயில்நிலைப் புத்தர் சிலை

கல்விகாரையின் வலது புற ஓரத்தில் காணப்படும் இது துயில் நிலையில் இருக்கும் புத்தர் சிலை ஆகும். இச்சிலை புத்த பெருமானின் பரிநிர்வாண நிலையைக் காட்டுவதாக சிலரால் நம்பப் படுகிறது. இருந்தபோதும் இது புத்த பெருமானின் துயில் நிலை என்பது தற்போதைய விமர்சகர்களின் கருத்தாகும்.

உயர்வான கலைப்பண்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுருட்டை முடியைக் கொண்டது. சமாந்தரக் கோடுகளைக் கொண்ட அலை வடிவ மடிப்புகளுடன் காவியுடை நிர்மாணிக் கப்பட்டுள்ளது. தலை வைத்துள்ள தலையணைப்பகுதி பதிந்து இருப்பது போல் நுணுக்கமான முறையில் காட்டியுள்ள விதம் அற்புதமானது.

இக்கற்சிலை அதிபுடைப்புச் சிலையாகப் பொளியப்பட்டுள்ளது.

பொத்குல் விகாரைச் சிலை

  • பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்துக்கு அருகில் உள்ள பொத்குல் விகாரைக்கு முன்னால் இக் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பொலநறுவைக் காலத்தில் கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகக் கருதப் படுகிறது. நன்றாக வளர்ந்த உடல் கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், ஒரு காலை ஊன்றி மற்றைய காலை இலேசாக வைத்து மூவளைவு சுபாவத்தில் புடைக்கப்பட்டுள்ளதால் உடலின் சந்தத்தன்மை வெளிக்காட்டப்படுகிறது. எடுப்பான மனிதன் சிந்தனை வயப்பட்டிருப்பதோடு கண்களை தமது கைகளில் ஏந்தியுள்ள பொருளின் மீது செலுத்தியுள்ளார். மார்பின் இரு புறங்கள் வரை நீண்டு வளர்ந்துள்ள தாடியும், இரு அந்தங்களிலும் கீழ்நோக்கி வளைந்துள்ள மீசையும் இச்சிலைக்கு சாந்தத் தன்மையை வழங்குவதோடு பெருமிதத் தன்மையைக் காட்டுகிறது. வேட்டி போன்ற ஓர் உடையினால் உடலின் கீழ்ப்பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. இடுப்புப்பட்டி இடுப்பில் இறுக்கமாக அமைந்துள்ளமையால் வயிறு முன்தள்ளப்பட்டுக் காணப்படுகிறது. இச்சிலை பொலநறுவைக் காலச் சிற்பக் கலையின் உன்னத கலைப் பண்புகளைக் காட்டி நிற்கிறது.

பொத்குல் விகாரை சிலை தொடர்பான கல்விமான்களின் கருத்துகள்: • பராக்கிரமபாகு மன்னனின் சிலை என்பது • பொலநறுவையில் வாழ்ந்த குருளுகோமி எனும் ஞானியுடையது என்பது • கபிலர் எனும் ரிஷியுடையது என்பது கையில் தாங்கியுள்ள பொருள் அரசைக் குறிக்கிறது என்பது செனரத் பரணவித்தான அவர்களின் கருத்தாகும். புலஸ்தி ரிஷியைக் குறிக்கிறது என்பது

error: Content is protected !!