பெரியதம்பி சுப்பிரமணியம் (மணியம் )

 • பிறப்பு – 21.09.1923 – இறப்பு 15.03.2006 நல்லூர், யாழ்ப்பாணம்.
 • தமிழ் மக்களிடையே ஓவியம் பற்றிய வெகுசன எதிர்பார்ப்பின் ஓர் வடிவமாக இவரது ஓவியங்கள் காணப்படுகின்றன.
 • யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மிகப் பிரசித்தி பெற்ற ஓவியராவார்.
 • சுயமாக ஓவியக்கலையைக் கற்றுக் கொண்டார்.
 • ரவிவர்மாவின் புராண இதிகாச ஓவியங்களின் தொடர்ச்சியான இந்திய வெகுசன காட்சிப் பண்பாட்டின் வெளிப்பாடுகளான சினிமாப் படங்கள், கலண்டர் படங்கள், சுவரொட்டிகள் என்பவற்றினூடு பரவலான தெய்வப் படங்களின் செல்வாக்குகள் காணப்படுகின்றன.
 • இப்படங்களில் மாயவாத (illusionistic) வெளிப்பாட்டு முறையில் தெய்வ விக்கிரகப் படங்களும், புராண இதிகாச சம்பவங்களும் உள்ளடக்கமாகக் கையாளப்பட்டுள்ளன.
 • கோயில் சுவர்களிலும், திரைச்சீலைகளிலும் வரைந்துள்ளார். அதேவேளை பதாதைகளையும் வெட்டுருக்களையும் (Cut out) மிகப் பிரமாண்டமான அளவில் வரைந்துள்ளார்.

இவரது கோவில் ஓவியங்கள், திரைச்சேலைகள் காணப்படும் இடங்களில்

♦ நல்லூர் – கைலாச பிள்ளையார் கோவில்
♦ இணுவில் – பரராசசேகர பிள்ளையார் கோவில்
♦ சுதுமலை – அம்மன் கோவில்
♦ வல்வெட்டித்துறை – சிவன், அம்மன் கோவில்
♦ நல்லூர் – வீரமாகாளி அம்மன் கோவில்
♦ வேலணை – அம்மன் கோவில்
என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

அகத்தியரும் விநாயகரும்

 • இவரது சிறந்த ஓவியங்களில் ஒன்றான அகத்தியரும் விநாயகரும் ஓவியமானது இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோவிலிற்குரியது.
 • அகத்தியரின் கமண்டலத்தினைக் காகமாக வந்த விநாயகர் தட்டியதால் காவிரி ஆறு தோன்றும் கதை மூன்று தொடர் காட்சிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
 • இது ரவிவர்மாவின் சாயலுடைய மாயவாத உத்தி முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 • சுண்ணாம்பு சுவரின் மீது தளத் தயாரிப்புக்கள் எதுவுமற்று எனாமல் வர்ணத்தால் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
 • தூரதரிசனம் காட்டப்பட்டுள்ளது. முப்பரிமாணம் நிறத்தின் தொனி (வர்ணபேதம்) வேறுபாடுகளுடாக கட்டியெழுப்பப்படுகின்றது.
 • அளவுப் பரிமாணம் இயற்கையை ஒத்துள்ளது.
 • கவர்ச்சிகரமான நிறப்பாவனை. உருவம் வர்ணத்தொனி நிலைகளினூடு கட்டியெழுப்பப் படுவதனால் நேரடியாகக் கோடுகள் காணப்படவில்லை.
 • முன்னணியில் உள்ள உருவங்களின் செயற்பாடுகளுக்கு பொருந்துவதாகவும் அதற்கு வலுச் சேர்ப்பதாகவும் பின்னணியில் நிலவுருக் காட்சிகள் (தரைத்தோற்ற) (Landscape) வரையப்பட்டுள்ளன.
 • மூன்று பிரிவுகளாக உள்ள ஓவியத்தில் ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட மனநிலைகளை வெளிப்படுத்துகின்றன.
 • முதலாவது பகுதியில் காகத்தினை துரத்தும் அகத்தியரும், 2ஆம் பகுதியில் சிறுவனாக மாறிய விநாயகரை அகத்தியர் துரத்திச் செல்கிறார் அதில் சிறுவன் கேலி செய்யும் பாங்கிலும் அகத்தியர் கோபத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • மூன்றாவது காட்சியில் வந்தது விநாயகர் என உணர்ந்ததால் அகத்தியர் விநாயகரை பணிந்து வழிபடும் நிலை காட்டப்பட்டுள்ளது.
 • இக்காட்சி ஒழுங்கினூடு அகத்தியரின் பணிவும் பக்திப் பரவச நிலையும் கொண்டு வரப்பட்டுள்ளது.

வள்ளியை யானை துரத்துதல்

 • இவ் ஓவியமானது இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் கோவிலிற்குரியது.
 • யானையாக வந்த விநாயகரால் துரத்தப்படும் வள்ளி சந்நியாசியாக வந்த முருகனிடம் அடைக்கலம் பெறுதல் காட்டப்பட்டுள்ளது.
 • தொனி நிலை (வர்ணபேதம்) வேறுபாடுகள் ஊடாக முப்பரிமாணமும், தூரதரிசனமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
 • சுவர் மீது தளத் தயாரிப்புக்கள் ஏதுமற்று எனாமல் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
 • யானையாக வந்தது விநாயகர் என்பது குறியீட்டு ரீதியாகக் காட்டப்பட்டுள்ளது. நிறம் குறியீட்டு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • மிகவும் பிரகாசமான நிறப் பாவனை காணப்படுகிறது.
 • கோடுகளற்று ஒளி நிழற்படுத்துகை ஊடாக உருவங்கள் வரையப்பட்டுள்ளன.
 • விநாயகரும் யானையும் ஒரு பகுதியிலும், வள்ளியும் சந்நியாசியும் மறுபுறத்திலும் இருப்பினும் இவ்விரு பகுதியையும் ஒன்றிணைப்பதாக நிலவுரு காணப்படுகின்றது.
 • வள்ளிக்கு அச்சத்தினை ஊட்டும் வகையில் யானை சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • படத்தில் திகிலும் அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்

1. இந்திய ரவிவர்மாவின் ஓவிய பணியை அடிப்படையாகக்கொண்டு யாழ்ப்பாணத்தில் ஓவியங்களை வரைந்த ஓவியர் யார்?
2. இவரது ஓவிய வெளிப்பாட்டு முறை யாது?
3. இவரால் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள், திரைச்சீலை ஓவியங்கள் காணப்படும் ஆலயங்கள் எவை?
4. அகத்தியாரும் விநாயகரும் ஓவியம் காணப்படும் ஆலயம் எது?
5. இவ் ஓவியத்தில் காணப்படும் கதை எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது?
6. இவ் ஓவியத்தில் காணப்படும் உணர்வு வெளிப்பாடு யாது?
7. வன்னியை யானை துரத்துதல் ஓவியத்தில் குறியீடாக காட்டப்பட்ட உருவம் யாது?
8. இவ் ஓவியத்தில் காணப்படும் உணர்வு வெளிப்பாடு யாது?

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. கருப்பொருள் : ………………………………………………..
2. காணப்படும் இடம் : ……………………………………..
3. வர்ணப்பிரயோகம் : ……………………………………..
4. ஒழுங்கமைப்பு : ……………………………………………..
5. உணர்வுவெளிப்பாடு : ………………………………….

1. கருப்பொருள் : ………………………………………………..
2. காணப்படும் இடம் : ……………………………………..
3. வர்ணப்பிரயோகம் : ……………………………………..
4. ஒழுங்கமைப்பு : ……………………………………………..
5. உணர்வுவெளிப்பாடு : ………………………………….

error: Content is protected !!