பெண் உருவங்கள் அடங்கிய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய அலங்கார வடிவங்கள்

அறிமுகம்
 • பெண் உருவங்கள் அடங்கிய சிறப்பு வாய்ந்த பாரம்பரிய அலங்கார வடிவங்கள் பற்றிய தகவல்கள் மீது அவதானம் செலுத்தப்படுகின்றன.
 • மிருகமொன்றின் இயல்பான தன்மை, பொருளொன்றின் இயல்பான வடிவம் என்பன பெண் உருவங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
 • இவை பாரம்பரிய சுவரோவியம், செதுக்கல்களில் காணப்படுகின்றன.
சதுர்நாரிப் பல்லாக்கு
 • நான்கு பெண் உருவங்களை பல்லக்கின் வடிவமாக ஒருங்கிணைத்து செய்யப்பட்ட நிர்மாணிப்பு சதுர்நாரி பல்லக்காகும்.
 • தலதா மாளிகையின் மேல் மாடி உட்கூரையின் வலப்பக்கத்து செவ்வக வடிவ நிரலொன்றில் சதுர்நாரி பல்லக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 • இரு பெண் உருவங்கள் கால்களை பிணைத்து கைகளை நீட்டியிருக்கும் விதத்தில் வரையப்பட்டுள்ளது.
 • பல்லக்கின் உள்ளே அதில் பயணிக்கும் தாமரை மலரை ஏந்திய தெய்வமொன்று அல்லது போதி சத்துவரைக் காணக்கூடியதாக உள்ளது.
பஞ்சநாரி கலசம்
 • ஐந்து பெண் உருவங்கள் குடத்தின் வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டள்ளன.
 • பாரம்பரியக் கலைக் கைத்தொழில்களில் இவ்வடிவத்தை அதிகம் காணலாம்.
 • அத்துடன் யானைத்தந்த செதுக்கல்களிலும் இவ்வலங்கார வேலைப்பாட்டைக் காணலாம்.
 • பஞ்சநாரி கலசம் செழிப்பை அடையாளப்படுத்துவதாக இருந்திருக்கலாமென பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர கருத்துத் தெரிவித்தள்ளார்.
 • ரிதி விகாரையின் கதவில் பொருத்தப்பட்டிருந்த யானைத்தந்தத்தில் செதுக்கப்பட்டிருந்த பஞ்சநாரி கலசம், உயர்வான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 • பழைமைவாய்ந்த மற்றும் சில விகாரைகளிலும் பஞ்சநாரி கலசம் ஓவியமாகவும் செதுக்கல் வடிவிலும் உள்ளது.
சப்தநாரி பல்லக்கு
 • ஏழு பெண் உருவங்கள் பல்லக்கு வடிவில் ஒருங்கிணைந்து இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 • தலதா மாளிகையின் வெளி மாடத்தில் இவ்வோவியத்தைக் காணலாம்.
சப்தநாரி இரதம்
 • ஏழு பெண் உருவங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இரதம் சப்தநாரி இரதம் எனப்படுகிறது.
 • தலதா மாளிகையின் வெளிப்புற மாடத்தில் இவ்வோவியம் ஒன்றைக் காணலாம்.
 • பெண்கள் இருவர் பின்புறமாக வளைந்து இரு பாதங்களையும் தொடும் விதத்தில் சில்லுகள் போன்று தோற்றமளிக்கின்றன. இரத்தத்தின் உச்சியில் கிரீடத்துடன் பெண் ஒருவர் சீன மலர் இரண்டினை நீட்டப்பட்ட கைகளில் ஏந்தியிருக்கும் விதம் வரையப்பட்டுள்ளது. இரதத்தின் மத்தியில் பத்தினி தெய்வம் காணப்படுகிறார்.
 • கண்டி தலதா மாளிகையின் ஓவியங்களுள் சப்தநாரி இரதம் காணப்படுகிறது.
நவநாரி குஞ்சரம்
 • நவநாரி குஞ்சரம் கண்டிக் காலத்து ஓவியங்களிலும் செதுக்கல்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
 • ஒன்பது பெண் உருவங்களைக் கொண்டு தந்தமுள்ள யானையின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்ற அமைப்பு நவநாரி குஞ்சரம் எனப்படும்.
 • கண்டி தலதா மாளிகையின் வெளிப்புற மாட உட்கூரையில் குஞ்சரத்தின் ஓவியத்தைக் காணலாம்.
நாரிலதா மலர்
 • பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகளில் நாரிலதா மலரை கொடிவலையாகக் காணலாம்.
 • அழகிய நாரிலதாவின் தேகத்தின் இடுப்புக்கு மேற்பட்ட பகுதி மலர்ந்த மலரொன்றாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 • வனவாசம் புரியும் முனிவர்களின் தியானம் கூட கலையக்கூடிய காந்த சக்தி உடையதாக இம்மலர் காணப்படுகின்றது.
 • நாரிலதா மலரின் பெண் உருவம் விசித்திரமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
 • பழைமையான விகாரை ஆலயங்களில் நாரிலதா மலருடனான பல ஒவியங்களைக் காணலாம்.
 • எம்பக்க தேவாலயத்தின் மரச் செதுக்கல்களில் நாரிலதா மலரின் செதுக்கலைக் காணலாம்.
 • தலதா மாளிகையில் வரையப்பட்டுள்ள நாரிலதா மலர்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளமை சிறப்பானது.

பயிற்சி வினாக்கள்

பின்வரும் அட்டவணையைப் பூரணப்படுத்துக.

error: Content is protected !!