புத்தர் சிலைகளின் ஆசனம், ஆசனமுறை (அமர்ந்திருக்கும் முறை), முத்திரைகள்

ஆசனங்கள்
 • சகல புத்தர் சிலைகளும் பீடமொன்றின் மீது அமைக்கப் பட்டுள்ளதுடன் இதன் பொருட்டு பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
 • வஜ்ராசனம் எனின் வஜ்ரக் குறியீடு செதுக்கப்பட்டிருக்கும்.
 • பத்மாசனம் எனின் பத்ம (தாமரை) இதழ் வடிவம் பீடத்தில் காணப்படும்.
வஜ்ராசனம்
பத்மாசனம்

ஆசன முறை

 • அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் இருபாதங்கள் அமைந்து இருக்கும் மெய்நிலை அதாவது அமர்ந்து இருக்கும் தன்மை ஆசனமுறை எனக் குறிப்படப்படும். இவற்றில் முக்கிய மூன்று ஆசன முறைகள் உள்ளன.
 1. வீராசனம்
 2. பத்மாசனம்
 3. பத்ராசனம்
 • இலங்கையில் உள்ள எல்லா அமர்ந்த நிலைப் புத்தர் சிலைகளிலும் வீராசன முறையில் இரு பாதங்களும் அமைந்துள்ளன.
 • இந்தியாவில் பெரும்பாலும் பரவலாக பத்மாசன முறையும் சிறியளவில் பத்ராசன முறையும் காணப்படுகின்றன.

வீராசனம்

வீராசன முறையானது இடப்பாதத்தின் மீது வலது பாதம் இருக்கும் தன்மையில் அமர்ந்து இருப்பதாகும்.

பத்மாசனம்

பத்மாசன முறையானது அடிப்பாதங்கள் இரண்டும் மேல் பக்கம் சமமாக இருக்கும் தன்மையில் வைத்து அமர்ந்து இருத்தலாகும்.

பத்ராசனம்

பத்ராசனம் எனப்படுவது சிறிய ஆசனம் மீது அமர்ந்து இருக்கும் விதமாகும். முழங்கால்கள் இரண்டும் மடித்து உள்ளங்கால்கள் பூமியை ஸ்பரிசம் செய்யும் முறையில் அமர்ந்திருக்கும் முறை இதுவாகும்.

முத்திரைகள்

 • புத்தர் சிலையின் குணப்பண்புகளையும் சந்தர்ப்பங்களையும் வெளிப்படுத்துவதற்குப் பொருத்தமாக குறியீட்டுத் தன்மையில் கைகளைப் பயன்படுத்தி இருக்கும் தன்மையே முத்திரை எனக் குறிப்பிடப்படும்.
 • உலகில் உள்ள புத்தர் சிலைகளைக் கருதும்போது அவற்றில் காணப்படும் முத்திரை வகைகள் சிலவற்றை இனங்காணலாம்.
 1. தியான முத்திரை
 2. பரதுக்க துக்கித்த முத்திரை (பிறரின் துக்கத்திற்குத் துக்கித்தல்)
 3. தமசக்கர முத்திரை
 4. அபய முத்திரை
 5. பூமிஸ்பரிச முத்திரை
 6. வரத முத்திரை
 7. விதர்க்க முத்திரை
 8. கடக ஹஸ்த முத்திரை
 • அவற்றிடையே தியான, தம்மசக்கர, வரத, பூமிஸ்பரிச, விதர்க்க ஆகிய முத்திரைகள் அமர்ந்த நிலை புத்தர் சிலைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • அபய முத்திரை, பரதுக்க துக்கித முத்திரை, வரத முத்திரை ஆகியன நின்ற நிலை சிலைகளில் இடப்பட்டுள்ளன.

முத்திரைகள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்தைக் கீழே தரப்பட்டுள்ளவாறு விளக்கலாம்.

தியான முத்திரை
தியான நிலையில் உள்ள தன்மையைக் காட்டுவதாகும்.

பரதுக்க துக்கித்த முத்திரை
“பிறருடைய தூக்கத்தில் துக்கித்தல்” என்று பரண விதான அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இது “அநிமிச லோச்சன பூஜாவ” என்றும் அழைக்கப்படுகின்றது.

தர்ம சக்க முத்திரை
தர்ம உபதேசம் செய்யும் சந்தர்ப்பத்தைச் சித்தரிக்கும்.

அபய முத்திரை
அபயம் அளித்தலைக் குறியீடாகச் சித்தரிக்கும். இது ஆசீர்வாதம் அளிக்கும் நிலையைக் குறிப்பதால் ஆசீர்வாத முத்திரை எனவும் அறியப்படும்.

பூமிஸ்பரிச முத்திரை
மகாபூமி சாட்சி பகிர்வதைச் சித்திரிக்கும். புத்தராக மாறிய சந்தர்ப்பத்தைக் காட்ட பெரிதும் இம்முத்திரை இடப்படும்.

வரத முத்திரை
வரம் அளிப்பதைக் குறியீடாகக் குறிக்கும்.

விதர்க்க முத்திரை
பிரச்சினை தீர்க்கும் சந்தர்ப்பத்தை குறியீடாகக் குறிக்கும்.

கடஹ ஹஸ்த முத்திரை
யாதேனுமொன்றைப் பிடித்திருக்கும் விதத்தைக் குறிக்கும்.

பயிற்சி வினாக்கள்

1. புத்தர் சிலைகளில் காணப்படும் ஆசனங்களை குறிப்பிடுக.
2. புத்தர் சிலைகளில் காணப்படும் ஆசன முறைகளை குறிப்பிடுக.
3. புத்தர் சிலைகளில் காணப்படும் முத்திரைகளைக் குறிப்பிடுக.
4. புத்தர் சிலைகளில் காணப்படும் முத்திரைகள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தும் கருத்துக்களை தருக.
5. புத்தர் சிலைகளில் காணப்படும் ஆசன மற்றும் ஆசன முறைகளை விபரிக்குக.

error: Content is protected !!