பாரூத் செதுக்கல்கள்

இந்திய பௌத்த கலையின் பெறுமதிமிக்க பல கலைப் படைப்புக்கள் பாரூத் எனும் பகுதியில் தொல்பொருளியலாளரான அலெக்சாண்டர் கனிங்கம் என்பவரால் கி.பி. 1873 இல் கண்டுபிடிக்கப்பட்டன. சிதைவடைந்த தாதுகோபத்தின் பகுதிகளும், அவற்றைச் சுற்றிக் காணப்பட்ட கல்வேலியின் பகுதியும் இவற்றுள் அடங்கும். இவற்றை ஆராய்ந்த கனிங்கம் இந்தப் பாரூத் தாதுகோபத்தின் விட்டம் 67 அடி 08 அங்குலம் எனக் கூறுகின்றார். அவ்வாறு கனிங்கம் இனது காலக் கணிப்புக்கு ஏற்ப கி.மு. 240 இற்கும் 210 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இவை நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இருந்தபோதும் பாரூத் தூபி பற்றிய வேறு எந்தத் தகவல்களையும் பெறமுடியாமற் போயுள்ளமைக்குக் காரணம் அவை முற்றாக அழிந்துள்ளமை யாகும்.

தூபி அழிந்தபோதும் அதைச் சுற்றியமைத்திருந்த கல்வேலியில் காணப்பட்ட சிறப்பு வாய்ந்த செதுக்கல்கள் மூலம் பாரூத் கலை நிர்மாணிப்புப் பற்றிய ஒரு விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தாதுகோபம் மெளரியர் காலத்துக்கும் கல்வேலி சுங்கர் காலத்துக்கும் உரியதென விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அமைப்பும் நுட்பமுறையும்

இத்தாதுகோபத்தைச் சுற்றியுள்ள 7 அடி | அங்குலம் உயரமான சுவரில் 80 தூண்களைக் காணலாம். இவற்றை இணைக்கக் கிடையாக இடப்பட்ட கற்பாளங்கள் சுஷி” என அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் இரண்டும் கல்வெட்டுகளில் இருந்தே பெறப்பட்டன. தாபிக்கவும் விருத்தி செய்யவும் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் பங்களிப்பு வழங்கியுள்ளனர். அத்துடன் கல்வேலியானது பௌத்த கற்சுவர்” எனப்பட்டது. கல்வேலியின் மேற்பகுதி மதில் தலைக்கல்’ ஆகும். அத்துடன் 9 அடி 71/2 அங்குலம் உயரமுடைய எண்கோண வடிவ 44 கற்றூண்களை ஒன்றிணைத்து அதன் மீது அமைக்கப்பட்ட மேடை போன்ற அமைப்பில் சிம்ம உருவங்களும் எருது உருவங்களும் செதுக்கப் பட்டுள்ளன.

கருப்பொருள்

‘மதில் தலைக்கல்’ (பிராசார சிர்ஷ சிலாவ), பாரூத் செதுக்கல் பற்றிக் கற்கையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பூங்கொடி, கொடியுரு, பழங்கள் போன்ற அலங்கார வேலைப்பாடுகளோடு ஜாதகக் கதைகள், புத்தரின் சரிதையில் பல்வேறு நிகழ்வுகளையும் இச்செதுக்கல்களில் காணலாம். 24 ஜாதகக் கதைககள் இனங்காணப்பட்டுள்ளன. அவற்றில் 10களுக்கான கதைகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. றூறும் ஜாதகக்கதை, ஜத்தந்த ஜாதகக்கதை, மகாகபி ஜாதகக்கதை, தேரபக்த ஜாதகக்கதை, குக்குட்ட ஜாதகக்கதை என்பன இவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றன. இவற்றிலும் புத்தபெருமான் குறியீட்டு வடிவில் காட்டப்பட்டுள்ளார் அரச மரம், தர்ம சக்கரம், புனித பாதம் என்பன அவற்றுள் அடங்கும். கல்வேலியில் உள்ள செதுக்கல் வரிசைகளில் பௌத்த செதுக்கல்களைப் போலவே யக்ஷ, யக்ஷினி உருவங்களும் காணப்படுகின்றன.

நுட்ப முறைகளும் கலைப் பண்புகளும்

ஒரு தளத்தில் பல நிகழ்வுகளைச் சித்தரித்துக் காட்டக் கலைஞன் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. குருங்கமிக ஜாதகக் கதையின் கதாநாயகனான போதிசத்துவர் மான் வடிவம் எடுத்துள்ளார். இக்கதை பரணாஸ் மன்னனையும் போதிசத்துவ மானையும் மையமாகக் கொண்டுள்ளது. தங்கமான் ஒன்று காட்டில் உலாவுவதாகக் கேள்விப்பட்ட பரணாஸ் மன்னன் மானைப் பிடிக்க முயற்சி எடுக்கும் விதமும், ஆற்றில் விழுந்த ஒருவரைக் காப்பாற்ற மான் முயற்சி செய்யும் விதமும் செதுக்கலில் குறிக்கப்பட்டுள்ளது. மான், போதிசத்துவர் ஆதலால் அதன் உருவம் பெரிதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இறுதியில் போதிசத்துவரான மான் அங்குள்ளவர்களுக்கு தர்ம போதனை செய்யும் விதம் காண்பிக்கப்பட்டுள்ளது. பின்னணியில் உள்ள மரங்கள் மோடிப்படுத்தப்பட்ட வடிவில் செதுக்கப்பட்டுள்ளன.

மகா கபி ஜாதகம்

குருங்கமிக ஜாதகம்

மகாகபி ஜாதகக் கதையின் செதுக்கலும் தளம் முழுவதையும் உபயோகித்து ஆக்கப்பட்ட தொன்றாகும். இதுவும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு உரியதென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் கல்கத்தா நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவும் போதிசத்துவரின் சரிதை யொன்றைக் குறிக்கிறது. வானரமொன்று இரு மரங்களுக்கிடையில் இருந்தவாறு தனது சகாக்களுக்கு ஆற்றைக் கடக்க உதவும் விதம் காட்டப்பட்டுள்ளது. ஆறு சிறியதாகக் காட்டப்பட்டுள்ளது. சில மீன்கள் கீழ்நோக்கி நீந்தி வருவது காட்டப்பட்டுள்ளது. வானர உருவங்கள் இயக்கத்தன்மையுடன் காணப்படுகின்றன. கீழ்ப்பகுதியில் (அடித்தளப் பகுதி) மனித உருவங்கள் காணப்படுகின்றன. போதிசத்துவக் குரங்கு மனிதருடன் பேசும் விதம் காட்டப்பட்டுள்ளது.

ஜேதவன காணிக்கையும் பல நிகழ்வுகளும் ஒரே தளத்தில் செதுக்கப்பட்ட ஒரு ஆக்கமாகும். அனேபிண்டு தனவந்தர் புத்தபெருமானுக்கு ஜேதவனத்தை காணிக்கையாக வழங்கும் நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. வண்டில் மூலம் கொண்டு வரப்பட்ட தங்கக் காசுகள் இரு மனிதர்களால் பரப்பி விடப்படும் விதத்தையும் ஜேதவனயனைக் காணிக்கையாக அளிக்கும் விதத்தையும் ஒரே தளத்தில் செதுக்க சிற்பி முனைந்துள்ளார். புத்தபெருமானை அடையாளப்படுத்தி அரச மரமொன்றும் செதுக்கப்பட்டுள்ளது. அனேபிண்டு எனப்படும் செல்வந்தர் அரச மரத்தின் அருகே சென்று நீர்க்கெண்டியொன்றினால் நீரூற்றுதலானது ஜேதவனயனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்பதை அடையாளப்படுத்துகிறது.

ஜேத்தவன வழிபாடு

வட்ட வடிவ தளம் ஒன்றின் மீது செதுக்கப்பட்டுள்ள மகாமாயாதேவியின் கனவு எனப்படும் செதுக்கல் இயக்கத்தன்மை சற்றுக் குறைந்ததாகக் கருதப்படுகிறது, செதுக்கலின் மேற்பகுதியில் யானைக் குட்டியொன்றின் உருவம் காணப்படுகிறது. அந்த யானைக் குட்டியின் தலைக்கு மேற்பகுதியில் அலங்கார வேலைப்பாடு ஒன்று காணப்படுகின்றது. யானைக் குட்டி தேவியின் வயிற்றுக்குள் நுழைவதை இது அடையாளப்படுத்துகிறது. யானையின் முன்னங்கால்களும் பின்னங் கால்களும் இயக்கத்தன்மையுடன் காணப்படுகின்றன. செதுக்கலின் மத்தியில் ஒரு மஞ்சத்தின் மீது சயனித்திருக்கும் மகாமாயாதேவி காணப்படுகிறார். கட்டிலின் இரு புறத்திலும் காணப்படும் ஏனைய உருவங்கள் விமர்சகர்களின் கருத்தாகும்.

மகாமாயா தேவியின் கனவு

பாரூத் கல்வேலியில் உள்ள தூண்களை அலங்கரிக்கப் பயன்படுத்திய யக்ஷ உருவங்களும் சிறந்த ஆக்கங்களாகும். வடக்கு வாயிலில் உள்ள யக்ஷ உருவங்கள் இரண்டும் குவேர யக்ஷவினதும் சந்திரா யக்ஷினியுடையதும் ஆகும் என அங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. தென்வாயிலில் உள்ள யானை உருவங்கள் இரண்டும் சூலகாக்க தேவதையினதும் சக்கவக்க எனப்படும் காலராஜனதும் ஆகும். அத்துடன் சிரிமா தேவதையென அடையாளம் காணப்பட்ட உருவமும் ‘சல்’ (Sal) மரத்தை கால்களினால் பிடித்திருக்கும் பெண் உருவமும் சிறப்பான நிர்மாணிப்புகளாகும் எனக் கூறலாம்.

error: Content is protected !!