பஹன் மடுவ சாந்திக் கிரியை

வரலாறு
 • இது சப்பிரகமுவை நடன பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஒரு சாந்திக் கிரியையாகும்.
 • சேரமான் அரசனின் தலையில் ஏற்பட்ட நோயை அடிப்படையாகக் கொண்டு இக்கிரியை உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.
 • முதலாவது ‘பஹன்மடுவ கிரியை” ருவன்வெல்லவுக்கு அண்மித்த ஒரு பிரதேசத்தில் பத்தினித்தெய்வம், தெவொல் தெய்வம் ஆகிய தெய்வங்களை முதலாகக்கொண்டு நடத்தப்பட்டதாக வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • முக்கியமான அலங்கரிப்பு முறைகள்.
 • கொட்டகை அலங்கரிப்பதே முக்கியமாமன வேலைப்பாடு ஆகும்.
 • கொட்டகைக்குள் “யஹன” தோரணம் அமைக்கப்படும்.
 • இதில் பத்தினி தோரணமும், தெவொல் தோரணமும் முக்கியமானவை.
 • விஷ்ணு, சமன் தெய்வங்களை முன்னிட்டு மலரால் “யஹன்” அமைக்கப்படுகின்றது.
 • இங்கே எளிமையான பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகள் உபயோகிக்கப்படும்.
உபயோகிக்கும் மூலப்பொருட்கள் / ஊடகம்
 • குருத்தோலை, சேம்பு இலை என்பன அதிகளவில் பயன்படும்.
 • கொட்டகையை அலங்கரிக்க செவ்விளநீர் குலை, தென்னங் குலைகள் உபயோகிக்கப்படும்.
 • அலங்கரிப்புகளுக்காக இயற்கைப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

பயிற்சி வினாக்கள்

1. சப்பிரகமுவ நடன பாரம்பரியத்துடன் தொடர்புடைய சாந்திக்கிரிகை எது?
2. “பஹன் மடுவ” சாந்திக்கிரிகை சடங்கு ஆரம்பமான ஐதீகக் கதையினை எழுதுக.
3. பஹன் மடுவ சாந்தி கிரிகை எந்தத் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படுகின்றது?
4. பஹன் மடுவ சாந்திகிக் கிரிகையின் முக்கிய அலங்கரிப்பு அலகுகளினை எழுதுக.
5. இச் சாந்தி கிரிகையில் பயன்படுத்தப்படும் தோரணங்கள் எவை?
6. இக் கிரிகையை அலங்கரிப்பதற்குப் பயன்படும் பொருட்கள் எவை?
7. மலரால் அலங்கரித்து அமைக்கப்படும் யஹன் அமைப்பு எத் தெய்வங்களைக் குறித்து அமைக்கப்படுகிறது?

error: Content is protected !!