பத்திரிகையில் வெளிவரும் சித்திரக்கதைக் கலைஞர்களின் நிர்மாணிப்புக்கள்
- பத்திரிகைத் துறையினூடாகவே சித்திரக்கதை மரபு தோற்றம் பெற்றது.
- 19 ஆம் நூற்றாண்டில் சித்திரக் கதைகள் அமெரிக்க பத்திரிகைகளில் முதல் முறையாகத் தோன்றின.
- சித்திரக் கதைகள் ஆரம்ப காலத்திலே நகைச்சுவைமிக்கதாகக் காணப்பட்டன. பின்னர் அவை இயல்பான தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக அமையத் தொடங்கின.
- 1951 ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஞாயிறு “லங்காதீப்” எனும் பத்திரிகையில் இலங்கையின் முதல் சித்திரக்கதை வெளியானது.
- அது “நீலா” எனப்பட்டது. இக்கதைக்குரிய கலைஞன் ஜீ.எஸ். பர்ணாந்து ஆவார்.
- சித்திரக் கதைக்கென்றே தனியான ஒரு பத்திரிகை “சித்திர” எனும் பெயரில் வெளியானது. இப்பத்திரிகை மூலம் ஆரம்பித்த பத்திரிகைகளில் வெளியாகும் சித்திரக்கதை கலையில் “சதுட்ட”, “சித்திர மித்திர”, “சத்ஸர வி~;ம” எனும் பெயர்களில் மேலும் சில பத்திரிகைகள் இணைந்து கொண்டன.
- இளையோர், முதியோர் என்ற பேதமின்றி யாவரும் சுவைத்து, இரசித்து வாசிக்கக்கூடிய சித்திரக்கதை கலை மரபு தொலைக்காட்சியின் அறிமுகத்துடன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.
- சித்திரக்கதைகள் தொடர்பாக பல கலைஞர்கள் தோன்றிய போதும் திறமைகள் பல வெளிப்படுத்திய முன்னோடிக் கலைஞர்களாக
1. பந்துல ஹரிஸ்சந்திர
2. தயா ராஜபக்ஷ
3. ஜனக ரத்நாயக்க
என்பவர்களை இனங்காணலாம்.
பந்துல ஹரிஸ்சந்திர (1940 – )
- சிறுவயதில் இருந்து ஓவியம் வரைவதில் திறமை காட்டிய இவர் அடிப்படைக் கல்வியின் பின் அரசாங்க நுன்கலை மன்றத்தில் சிற்பக்கலையைப் பயின்றார்.
- பல துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய பந்துல, துணிவகை, மட்பாண்டங்கள் என்பவற்றைஅவர்ணம் தீட்டினார்.
- அத்துடன் தோரணங்களில் ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபட்டார்.
- சுய விருப்பத்தில் சுயாதீனமாகத் தனித்துவமான ஓவியப் பண்பொன்றை உருவாக்கிக் கொண்டார்.
- பத்திரிகைகளில் சித்திரக் கதைகள் பிரபல்யம் அடைந்த காலப்பருவத்தில் 1962 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியாகும் “தினமின” எனும் பத்திரிகைக்கு ஒரு நாளில் வாசித்து முடியக்கூடிய ஜாதகக் கதைகளை சித்திரிக்கும் சித்திரக் கதைகளை வரைய ஆரம்பித்தார்.
- “சுலசா” எனும் ஜாதகக் கதையே அவரது முதற் படைப்பாகும்.
- பல வர்ணங்களால் இலங்கையில் உருவான முதல் சித்திரக் கதையான “நள தமயந்தி” யை நிர்மாணித்த கௌரவம் இவரையே சார்ந்ததாகும்.
- ஜாதகக் கதைகள், பௌத்த மதக் கதைகள், பைபிள் கதைகள், இலங்கை வரலாறு தொடர்பான கதைகள், மகாபாரதத்தின் கதைகள், கிரேக்க வீரக் கதைகள், ‘அராபி நிசொல்லாசய’, யப்பானிய சென் கதைகள் என்பன இவரது சித்திரக் கதைகளின் கருப்பொருள்களாயின.
- உயிரோட்டமாக உருவங்களை வரையும் பரந்தளவிலான திறமை கொண்டவர். பல்வேறுபட்ட சூழல், பல்வேறுபட்ட சூழலில் வாழும் மக்களின் தேக இலட்சணங்கள், ஆடையணிகள் என்பவற்றை மிகவும் தெளிவாக வரையும் திறமையுடையவரென அவரது சித்திரக்கதை தொகுப்புகளை அவதானிக்கும்போது புலப்படுகிறது.
தயா ராஜபக்ஷ (1941 -)
- தயா ராஜபக்ஷ சிறு வயதில் இருந்து சித்திரக் கலையில் நாட்டம் கொண்டு இருந்ததுடன் அவரது ஓவியம் வரையும் திறமையை விருத்தி செய்ய பாடசாலையின் சித்திரக்கலையே துணைபுரிந்தது.
- இவரது முதல் சித்திரக்கதை 1966 ஆம் ஆண்டு “சிலுமின” பத்திரிகையில் “இந்து” எனும் பெயரில் வெளியானது.
- இந்து எனும் சித்திரக்கதை மூலம் பிரபல்யம் அடைந்த இவர் “தினமின” எனும் பத்திரிகைக்கு “ஆதர கொமா” எனும் சித்திரக் கதையை வரைந்து மேலும் பிரபல்யம் அடைந்த ஒரு கலைஞராவார்.
- கினிகத் கிரீடய, ஹ{லவாலி, சாமபுராணய, அனுபமா, ரக்தா, ஜாதி தக்வா, வெத ஹாமுதுருவோ, தவலம எனும் பல பிரபல்யமான சித்திரக் கதைகளை வடிவமைத்துள்ளார்.
- அவரது அதிகமான கதைகள் அவரது சுயமான ஆக்கங்களாகவே இருந்தன. அவை சமூகச் சூழலின் இயல்பான தன்மையை பரிதிபலிப்பதாக இருந்ததன் காரணமாகவே இவரது கதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் உருவாக வழிவகுத்தது.
- உயிரோட்டமாக உருவம் வரையும் பரந்த திறமையும், நகர்ப்புற சூழலைச் சார்ந்த மக்களின் தேக இலட்சணங்கள், சரிதைப் பண்புகள், ஆடையணிகள் என்பன மிகவும் நுணுக்கமாக வரையும் திறமை இருந்ததாக அவரது சித்திரக் கதைத் தொடர்கள் வெளிப்படுத்துகின்றன.
ஜனக ரத்நாயக்க
- கொழும்பு நாலந்தா கல்லூரியில் விஞ்ஞானத் துறையில் கல்வி பயின்ற போதிலும் ஓவியக்கலை தொடர்பாக பிறவித் திறமை கொண்டிருந்தார்.
- பொற்காலமாக அமைந்த 1970 தசாப்தங்களில் ஆக்கபூர்வமாக புதிய கலைப்பாணியில் ஓவியங்களை வரைந்தார்.
- 1971 இல் இருந்து 1979 வரை “தவச” லேக்ஹவுஸ், மல்ரி பெக்ஸ் நிறுவனங்களில் கடமையாற்றிய காலப்பகுதி ஜனகவின் ஓவியக்கலையின் பொன்னான காலமாக இருந்தது.
- சாரங்கா, கபலென் லிபட்ட, சுசீமா, அத்திக்கா மல, பாட்ட பாட்ட ஹீனயக், யளி பிப்புனு மலக், கலு பரவியோ அவரது பிரபல்யமான சில சித்திரக் கதைகளாகின.
- ஏனைய சித்திரக்கதை கலைஞர்களிடம் இருந்து இவர் வேறுபட்டுக் காணப்பட்டார்.
- அவர் தனது கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் செயற்பாடுகளைக் குறிக்க இயல்பான காட்சிகளையே உபயோகித்தார்.
- ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம், பூங்காக்கள், விரிவுரை மண்டபங்கள், மாணவர் விடுதி, சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றை இயற்கைத் தன்மையுடன் ஓவியமாக்கியுள்ளதை உதாரணங்களாகக் கூறலாம்.
- அக்கால நகர்ப்புற இளம் பருவத்தினரின் நவநாகரிகம், வாகனங்கள், மேற்கத்தேய திரைப்படக் காட்சிகளில் வரும் போர் வாகனங்கள், ஆயுதங்கள் என்பன ஆக்கங்களின் கருப்பொருள்களாயின.
- இயற்கை உருவங்களும், விபரிப்புத் தன்மையுடைய இரேகைகளும் கொண்டு நீர் வர்ணத்தினால் அவருக்கே உரித்தான பாணியில் வர்ணம் தீட்டப்பட்ட பிரபல்யமடைந்த சித்திரக் கதைகள் தொலைக்காட்சி நாடகங்களாக உருவாகின.
பயிற்சி வினாக்கள்
1. சித்திரக்கதையின் ஆரம்பம் பற்றி அறிமுகம் செய்க.
2. இலங்கையில் முதல் சித்திரக்கதை வெளியான பத்திரிகை எது?
3. சித்திரக்கதைக்கென்று தனியாக உருவாக்கப்பட்ட பத்திரிகை எது?
4. சித்திரக்கதையை வரைந்த முன்னோடிக் கலைஞர்கள் மூவரைக் குறிப்பிடுக.
5. “சுலசா” எனும் ஜாதகக் கதையை சித்திரக்கதையாக வரைந்த கலைஞர் யார்?
6. பந்துல ஹரிஸ்சந்திரவின் சித்திரக்கதைகளின் தொனிப்பொருள் யாது?
7. பந்துல ஹரிஸ்சந்திரவின் சித்திரக்கதைகளின் சிறப்பியல்புகள் எவை?
8. தயா ராஜபக்ஷவின் முதல் சித்திரக்கதை எப்பத்திரிகையில் வெளியானது? அதன் பெயர் யாது?
9. “ஆதர கொமா” எனும் சழத்திரக்கதையை வரைந்த கலைஞர் யார்?
10. தயா ராஜபக்ஷவின் சித்திரக்கதைகளின் தொனிப்பொருள் யாது?
11. தயா ராஜபக்ஷவின் சித்திரக்கதைகளின் சிறப்பியல்புகள் எவை?
12. ஜனக ரத்நாயக்கவின் சித்திரக்கதைகளின் தொனிப்பொருள் யாது?
13. ஜனக ரத்நாயக்கவின் சித்திரக்கதைகளின் சிறப்பியல்புகள் எவை?