பதானகர (தியான மனை)
காடுகளில் வசித்த பிக்குகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘பதானகர’ அதாவது தியான மனைகள் சிறப்பான கட்டட நிர்மாணிப்புக்களாகும். இவை முதன் முதலில் எச்.சீ.பி. பெல் அவர்களால் இனங்காணப்பட்டன. பிக்குகளுக்கு பிச்சைப் பாத்திரமேந்தி உணவு பெறுவதற்குச் சென்றுவரக்கூடிய அளவு தூரத்தில் இவை காடுகளில் அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட தியான மனைகள் குடியிருப்புகளுக்கு அண்மையில் அமைக்கப்பட்டமை ஒரு சிறப்பியல்பாகும். விக்கிரகமனை அரச மரம், தாது மனை போன்றவை இவற்றில் அடங்கியிருக்கவில்லை. இவை தியானம் புரியும் பிக்குகளுக்குத் தமது ஆன்மீகப் பண்புகளை விருத்தி செய்துகொள்வதற்கும் தியான முறைகளில் பயிற்சி பெறுவதற்குமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தியான மனைகள், நிலத்தில் சற்று உயரமான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டு மண்டபங்களைக் (மேடை) கொண்டவை. முன்புற மண்டபம் மறைப்பற்றது. இங்கு உலவு கூடங்களும் கல்லினால் குளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தைச் சூழவுள்ள கண் மட்டத்துக்கு மேலாக உள்ள விக்கிரகமனையானது, பாதுகாப்பு மதிலினால் சூழப்பட்டடிருந்தது. அதாவது புற உலகிலிருந்து எப்போதும் வேறாக்கியிருப்பது அமைதியான சூழலில் அமைக்கப்பட்டிருந்தமை ஒரு சிறப்பம்சம் ஆகும். தியான மனையைச் சூழ அதற்குப் பாதுகாப்பு வழங்கும்பொருட்டு நீர் அகழியொன்று அமைக்கப்பட்டுள்ளது. சூழலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது இந்நீர் அகழி நிர்மாணிப்பின் மற்றுமொரு நோக்கமாகும். பிக்குகளுக்கென கொண்டு வரப்படும் உணவைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக அமைக்கப்பட்ட தானசாலை, தியான மனையின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். உலவு கூடம் அதாவது தியான உலவு பாதையும் தியான மனையின் மற்றுமொரு கட்டடக் கலை நிர்மாணிப்பாகும். இந்த உலவு கூடம் ஏறத்தாழ 22 யார் நீளமாக இருந்தது. உலவு கூடத்தின் இரண்டு அந்தங்களும் இரண்டு எல்லைக் கற்களால் அடையாளமிடப்பட்டிருந்தன. அரன்கலே, வெஹெர பெந்தி கலை, ரிட்டிகலை போன்ற இடங்களில் இவ்வாறான தியான மனைகள் காணப்படுகின்றன.