படிவரிசை

 • கீழ் தளத்தில் இருந்து மேற்றளத்துக்கு செல்ல இது அமைக்கப்பட்டுள்ளது.
 • சந்திரவட்டக்கல், காவற்கல், கைப்பிடி எனும் அங்கங்களை இணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
 • ஆரம்ப காலத்தில் இதில் செதுக்கல்கள் காணப்படவில்லை. பின்னர் இது விசித்திரமான அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டன.
 • படிவரிசையில் ஏறுவதற்காக சந்திரவட்டக்கல்லை அடையும் ஒருவருக்கு படிக்கட்டின் நேராக அமையும் பரப்புகள் நன்றாகத் தோற்றமளிக்கும். எனவே இப்பரப்புகளை செதுக்கல்களுக்கு உபயோகித்தனர்.
 • குள்ளர்களின் உருவங்கள், வஜிர உருவங்கள், தாமரை இதழ்கள், கொடிவலை என்பவற்றால் படிவரிசை அலங்கரிக்கப்பட்டது.
 • அனுராதபுர இராணி (பிசோ) மாளிகை, மகாசென் அரண்மனை, படிவரிசை வஜ்ஜிர, குள்ள உருவங்களால் அலரிக்கப்பட்டன.
 • பொலனறுவை வட்டதாகேயின் படிவரிசை அண்மித்தும் வரிசையாகவும் உள்ள குள்ள உருவங்கள் பலவற்றால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.
 • கண்டி விஷ்னு ஆலயப் படிவரிசை கொடிவலை பூ அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
 • இலங்கையில் காணப்படும் சிறந்த செதுக்கல்களைக் கொண்ட படிவரிசைகள் கருங்கல்லை ஊடகமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • அநுராதபுரக் காலம்
  இராணிமாளிகையின் படிவரிசை
 • பொலனறுவைக் காலம்
  பொலனறுவை வட்டதாகேயின் படிவரிசை
 • கண்டிக்காலம்
  கண்டி விஷ்ணு ஆலயத்தின் படிவரிசை

பயிற்சி வினாக்கள்

1. படிவரிசையில் காணப்படும் அலங்காரங்கள் எவை?
2. அநுராதபுரக்கால சிறந்த படிவரிசை காணப்படும் இடம் எது?
3. பொலன்னறுவைக்கால சிறந்த படிவரிசை காணப்படும் இடம் எது?
4. கண்டிக்கால சிறந்த படிவரிசை காணப்படும் இடம் எது?
5. படிவரிசையின் ஊடகம் எது?

error: Content is protected !!