மேம்படுத்தலில் உள்ளது!!!
படிக்கட்டுக்கள்
கட்டடமொன்றினுள் அல்லது கட்டடத் தொகுதியொன்றினுள் பிரவேசிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட ஓர் அங்கமாக படிக்கட்டு வரிசையைக் குறிப்பிடலாம். இலங்கைக் கட்டடக்கலையில் படிக்கட்டு வரிசை முக்கியமான ஓர் அங்கமாகும். புனிதக் கட்டடங்களை ஏனைய பொதுவாக உயரமானதாக அமைத்தல் மற்றும் அவற்றினுள் பிரவேசிப்பதற்காக படிக்கட்டு வரிசைகளை அமைத்தல் ஆகியனவே அதற்கான காரணங்களாகும். அதன் மூலம் அக்கட்டடங்களில் மதிப்புக்குரியவை என்பதையும் அவை இலௌகீகத்தை விஞ்சிய தூய்மையானவை என்பதையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது. தேவலோகத்துக்குக் கிட்டியது என்பதையும் உயரிய தன்மையையும் மலை உச்சிகளில் அமைப்பதில் முனைப்புக் காட்டப்பட்டுள்ளது. இலங்கைக் கட்டடடக்கலையில் பல படிக்கட்டு வகைகளைக் காண முடிகின்றது. (i) ஆச்சிரமத் தொகுதிகளினுள் அல்லது மனிதக் கட்டடமொன்றினுள் பிரவேசிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் படிக்கட்டு வரிசை. (ii) கட்டடமொன்றின் பிரவேச வாயிலுடன் இணைந்த படிக்கட்டு வரிசை, (iii) கல் மேற்பரப்பு மீது அமைக்கப்பட்ட கட்டடமொன்றின் அல்லது தலமொன்றில் பிரவேசிப்பதற்காகக் கல்லில் செதுக்கிய படிக்கட்டு வரிசை எனும் மூன்று படிக்கட்டு வரிசை வகைகள் உள்ளன. மிகிந்தலை, தன கிரிகலை, மாளிகாகந்தை, கிரிகண்டுதாதுகோபம் போன்ற குன்றுகள் மீதமைந்த புனித தலங்களை அடைவதற்காக, கல்லினாலான படிக்கட்டு வரிசைகள் காணப்படுகின்றன. மேலும் தம்பதெனிய, யாப்பகுவை, சிகிரியா ஆகிய பாதுகாப்புக் கோட்டைகளாக அமைந்துள்ள இடங்களில் அழகிய படிக்கட்டு வரிசைகளைக் காணமுடிகின்றது.
கல்லினால் அமைக்கப்பட்ட படிக்கட்டு வரிசைகளுள் அழகிய அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட படிக்கட்டுக்களையும் சில கட்டடங்களின் பிரவேச வாயிலில் காண முடிகின்றது. அனுராதபுர மகசென் மாளிகைப் படிக்கட்டு, பிசோ மாளிகைப் படிக்கட்டு ஆகிய மிக அழகிய குள்ளர் உருவங்களாலும் பைர உருவங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன. கண்டி விஷ்ணு ஆலயப் படிக்கட்டு, கொடியலங்காரங்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. கடலாதெனிய படிக்கட்டு வரிசை, பாடும் மற்றும் இசைக்கும் ஆண் – பெண் உருவங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.