நாராயண சுவாமி

யாழ்ப்பாண கோவில் ஓவியக்கலையின் முன்னோடியாகத் தொழிற்பட்ட நாராயண சுவாமி தென்னிந்தியக் கலைஞரொருவர் எனவும் கருதப்படுகிறார். அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கிடைக்காத போதிலும் அவர்களின் ஓவியங்களை வல்வெட்டித் துறை முத்துமாரியம்மன் கோயிலில் காணலாம். அவ்வோவியங்கள் 1966, 1967ம் காலப்பகுதிக்குரியவை. இவ்வோவியங்கள் ரெம்பரா ஓவிய வகைக்குரியவை. இவர் ஓவியக் கலைஞர் மட்டுமன்றி கோயில் இராஜகோபுர நிர்மாணிப்புக்களையும் செய்ததாகக் கருதப்படுகின்றது. அவரால் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயிலில் வரையப்பட்ட ஓவியங்களுள் விநாயகர், முருகன் தொடர்பான புராணக் கதைக் காட்சிகள் காணப்படுகின்றன. அத்துடன் இக்கோயிலுடன் தொடர்புடைய வரலாறும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

சூர சங்காரம்

சூர சங்காரம் எனும் ஓவியத்தில் மேற்கத்தேய கலை மரபைத் தழுவி வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு முப்பரிமாணத் தன்மை, ஆழம் எனும் பண்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழைத்தேய கலை மரபுக்கமைய கதை கூறும் பண்புடன் இவ்வோவியம் தீட்டப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இரேகைகளை விட வர்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முப்பரிமாணத் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் தூரநோக்கு பண்புகளுடன் ஆழத்தைக் காட்டவும் முனைந்துள்ளார.

அசுராசுர சங்காரம்

கோயிலில் உள்ள அசுராசுர சங்காரம் எனும் ஓவியத்தில் விநாயகர், பாம்பு வடிவில் உள்ள அசுரரை இரண்டாகப் பிளந்து வெளிப்படும் காட்சியே இதுவாகும். இங்கு விநாயகரின் செயல். அதன் பின்னணி என்பன மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய ஓவிய கலைஞரான இராஜா ரவிவர்மாவின் சாயலைக் கொண்டுள்ளது. கற்பனை வடிவில் அமைந்த உருவங்களும் காட்சிகளும் முப்பரிமாண, தூர நோக்கு இயல்புகளை காட்டுவனவாக தளம் பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காண முடிகிறது. இங்கு முப்பரிமாண இயல்பும் பின்னணி காட்சியமைப்புக் காட்டப்பட்டுள்ள விதமானது, குடியேற்ற நாடாகிய இஙல்கையின் சுதேசக் கலையில் காணப்பட்ட பொதுவான இயல்புகளை ஒத்ததன்மையைக் காட்டி நிற்கின்றது.

error: Content is protected !!