தொவொல் மடுவ சாந்திக் கிரியை
வரலாறு
- இது தாழ்நாட்டுப் பிரதேசத்துக்குரிய நடன பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஒரு சாந்திக் கிரியையாகும்.
- பத்தினித் தெய்வத்தையும் தெவொல் தெய்வத்தையும் அடிப்படையாகக் கொண்டு ருவன்வெல்ல பிரதேசத்தை அண்மித்து முதன் முதலில் ‘தெவொல் மடுவ’ சாந்திக்கிரியை நடைபெற்றது.
- சேரமான் எனப்படும் அரசனுடைய தலையில் ஏற்பட்ட ஒரு நோயைத் தீர்க்கும் நோக்குடன் இச்சாந்திக்கிரியை தோற்றம் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தொற்று நோயிலிருந்து விடுபடல், சௌபாக்கியம், செழிப்பு, என்பவற்றை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இது நடத்தப்படுகிறது.
- முக்கியமான அலங்கரிப்பு முறைகள் கொட்டகை அலங்கரிப்பதே முக்கியமானது.
- கொட்டகை அலங்கரிப்புக்காக செவ்விளநீர், தென்னை, கமுகு, ஈச்சை ஆகியவற்றின் குலைகள் உபயோகிக்கப்படும். எளிமையான பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகள், செதுக்கல்களில் உபயோகப்படுத்துவர். தெய்வ ஆபரணங்கள் வைக்கப்படும் ‘யஹன’ இனை அலங்கரித்தலும் முக்கியத்துவம் பெறுகிறது.
- பத்தினி தோரணம், தெவொல் தோரணம் என்பன அமைத்தல் சிறப்பு அலங்கரிப்புகளாகும்.
- குருத்தோலையால் அலங்கரிக்கப்பட்ட ‘காலபந்தம் மரம்” எனப்படுவது கொட்டகைக்கு அருகிலேயே அமைக்கப்படும் இன்னுமாரு அங்கமாகும்.
உபயோகிக்கும் மூலப்பொருட்கள் / ஊடகங்கள்
- வாழைத்தண்டு மடல், குருத்தோலை என்பன முக்கியமான மூலப்பொருட்களாகும். அத்தோடு சேம்பு இலைகளும் பல வர்ண இலைகளும் மூலப் பொருட்களாகப் பயன்படும். இயற்கை பொருட்கள் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.
பயிற்சி வினாக்கள்
1. தாழ்நில பிரதேசத்தின் பிரதான சாந்தி கிரிகையை எது?
2. தொவொல் மடுவ சாந்தி கிரிகை முதன்முதலில் எப் பிரதேசத்தை அண்மித்து ஆரம்பிக்கப்பட்டது?
3. தொவொல் மடுவ சாந்தி கிரிகை எந்தத் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படுகின்றது?
4. தொவொல் மடுவ சாந்தி கிரிகை ஆரம்பமான ஐதீகக் கதையினை யாது?
5. இக்கிரிகைக்காக “யஹன” (தெய்வ ஆபரணங்கள் வைக்கப்படும் கொட்டகை ) அலங்கரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் எவை?
7. தொவொல் மடுவ சாந்தி கிரிகையின் அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படும் தோரணங்கள் மற்றும் குருத்தோலை அலங்காரங்கள் எவை?