தொலுவில் புத்தர்சிலை

  • அனுராதபுரம் தொலுவிலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலையே தெலுவிலச் சிலை எனப்படுகிறது.
  • அனுராதபுரக் காலத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் காணப்படும் இச்சிலை, அனுராதபுர சமாதி புத்தர் சிலையை ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது.
  • தியான முத்திரையில், சமாதி நிலையைக் காட்டி நிற்கும் இச்சிலை வீராசன முறையில் அமர்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அழகிய மலர்ச்சியான தன்மையைக் காட்டும் இச்சிலை, உயர்வான பாவ வெளிப்பாட் டைக் கொண்டது.
  • தலைமுடி நத்தைச்சுருள் அமைப்பையும், உச்சியில் குடுமியையும் கொண்டிருக்கும்.
  • பெரிய காது, பாதி மூடிய கண்கள் ஆகியன இச்சிலையின் சிறப்பியல்புகளாகும்.
  • உடலின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைந்திருக்குமாறும் உடலுடன் ஒட்டியிருக்குமாறும் காவியுடை செதுக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இச்சிலை கொழும்பு அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு வகைக் கருங்கல்லில் பூரண புடைப்பு நுட்பமுறையில் ஆக்கப்பட்டுள்ளது.
  • குப்த மரபின் பண்புகள் இச்சிலையில் காணப்படுவதாக விமர்சகர்கள் கருத்து வெளி யிட்டுள்ளனர்.
பயிற்சி வினாக்கள்

1. இனங்காண்க : ………………………………..
2. காலம்/யுகம் : ………………………………….
3. கலை மரபு : ………………………………………
4. ஊடகம் : …………………………………………….
5. நுட்பமுறை : ……………………………………
6. முத்திரை : ………………………………………..
7. ஆசன முறையும் : ………………………..
8. தலையணி : ……………………………………..
9. காவியுடை : ……………………………………..
10. உணர்வு வெளிப்பாடு : ………………

error: Content is protected !!