தொறவக்கை ஓவியங்கள்

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த பெலிகல் கோறளையில் உள்ள தொறவக்கைக் கிராமத்தில் தொறவக்கைக் கற்குகை அமைந்துள்ளது. இது கி.பி. 1919 இல் பிரவுனிங் (Browning) இனாலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 15 அடி உயரமான இயற்கையான ஒரு கற்குகையாகும். சுவரில் பொறிப்பு முறையில் (engraving) மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் வரையப்பட்டுள்ளன. இங்கு வெவ்வேறுபட்ட 57 கேத்திரகணித தளவடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் மனித உருவம் என அனுமானிக்கத்தக்க ஓர் உருவம் அதிக கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. அம்மனித உருவத்தின் வடிவம் ஒருவித மோடிப்பாங்கைக் காட்டி நிற்கிறது. இங்கு காணப்படும் விலங்கு உருவங்களுள் ”யானையும் குட்டியும்” எனும் உருவம் முக்கியமானது. இவை பொறித்தல் (engraving) முறையில் வரையப்பட்டுள்ளன.

யானையும் குட்டியும்
மீனும் மனித உருவமும்
மனிதன்
வெவ்வேறு குறியீடுகள்
error: Content is protected !!