தெல்வத்தை விகாரைச் சுவரோவியங்கள்

காலி மாவட்ட, தெல்வத்த கிராமத்தில் அமைந்த விகாரை தொட்டகமுவே ரஜமகா விகாரை என்றும் தொட்டகமு ரன்பத் விகாரை என்றும் அழைக்கப்படுகிறது. வம்சக் கதைகளுக்கு ஏற்ப பொலனறுவை ஆட்சி செய்த 1 ஆம் விஜயபாகு வின் ஆட்சிக்காலம் (கி.பி. 1070 – 1110 வரை) தெல்வத்த விகாரையின் வரலாறு காணப்படு கிறது.

பிற்காலத்தில் மேற்கத்தேயரின் வருகையினால் தெல்வத்த விகாரை படிப்படியாக சிதைவுக் குள்ளானது. 18 ஆம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனுடைய அனுசரணையின் கீழ் வெலிவிற்ற ஸ்ரீ சரணங்கர தேரர் ஆரம்பித்த சமய மறுமலர்ச்சியின் காரணமாக தெல்வத்த விகாரை மீண்டும் வளர்ச்சியடைந்தது. 1799 இல் அமைக்கப்பட்ட விகாரையின் புதிய விகாரையிலும் பழைய விகாரையிலும் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. பழைய விகாரையின் ஓவியங்கள் கடொல்கல்லே மகா சித்தரா, பொட்ட சித்தரா ஆகிய ஓவியர்களால் வரையப்பட்டவை. புதிய விகாரையின் ஓவியங்கள் அட்டகோரளை சித்திர முதியன்சே எனும் ஓவியனால் வரையப்பட்டது.

தஹம்ஸோத ஜாதக

தெல்வத்தை பிரதான விகாரைக் கருப்பக்கிரக ஓவியங்களுள் சூவிசி விவரணய, அறிவொளிபெற்றோர் (ரஹத்) ஊர்வலம், பதினாறு வணக்கத் தலங்கள், சோரசய சிற்றானோ, பட்டாச்சாரா எனும் கதைகளும் சுள்ள தர்மபால, தம்மசொண்ட, வெஸ்ஸந்தர, சாம, சஸ, தேவதம்ம ஆகிய சாதகக் கதைகளும் தெய்வலோகம், மாரனின் யுத்தம் போன்றவையும் அடங்கியுள்ளன.

சுள்ளதர்மபால ஜாதகக் கதை

விகாரைக்குள் இருக்கும் ஜாதகக் கதை ஓவியங்களுள் கள்ள தர்மபால ஜாதகக் கதை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள ஏனைய சாதகக் கதைகளைப் போலவே இதுவும் நிரை வடிவில் வரையப்பட்டுள்ள ஓவியமாகும். மனிதனின் மெய் நிலைகளில் இயக்கத்தன்மையைக் காட்ட ஓவியர் முயற்சித்துள்ளார். மனித உருவங்களுக்கும் சூழலுக்கும் இடையில் உள்ள தொடர்பை கறுப்பு, சிவப்பு வர்ணங்களைக் கொண்ட பின்னணியை உபயோகித்துக் காண்பித்துள்ளார். சிவப்பு, கறுப்பு, மஞ்சள், வெள்ளை , நீலம், பச்சை ஆகிய வர்ணங்களின் தொகுதிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவ்வர்ணங்கள் தட்டையான முறையில் உபயோகித்திருத்தலானது, கண்டிக்கால மரபை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. மனித உருவங்கள் தட்டையாக வர்ணந் தீட்டப்பட்டபோதிலும் சில வீட்டுத் தளபாடப் பொருள்களை முப்பரிமாணமாக (ஒளி நிழல் காண்பித்து) வர்ணந் தீட்ட ஓவியர் முயற்சித்துள்ளார். மனித உருவங்களுக்கு வர்ணந் தீட்டுவதற்காக நடுத்தர நிறச் சாயலைக் கட்டியெழுப்பும் முறையில் முப்பரிமாணத்தன்மை காட்டப்படாதபோதிலும், புறவரை கோடுகளைக் கையாண்டிருக்கும் முறையின் மூலம் முப்பரிமாணத் தன்மை தொடர்பான கருத்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

சுள்ளதர்மபால ஜாதகக் கதை

தொடர்ச்சியாகக் கதை உருவாகும் விதத்தில் தளத்தை உபயோகித்து கதைக்குப் பொருத்தமாக நாடகப் பாங்கில் அவற்றை காண்பித்துள்ளார். சாதகக் கதைகளுள் நிகழ்வுகளைக் குறிப்பிடும்போது மிகவும் மேன்மையான வெளிப்பாட்டுப் பண்பை முன்வைக்க முயற்சித்துள்ளார். மனித, விலங்கு, இயற்கை உலகின் உருவங்கள் ஒரு தளத்தில் குறிக்கையில் ஒன்றையொன்று மறைக்கும் உருவங்கள் அதேவிதத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. மனித விலங்கு உருவங்களை வரையும்போது தென்பிரதேச பாரம்பரிய தனித்துவப் பண்பு பேணப்பட்டுள்ளது. பட்டாச்சாரா கதை இதற்கு சான்று பகர்கின்றது. இயற்கைச் சூழலில் உள்ள மரங்கள் தத்ரூபமாக அவற்றின் தனித்துவம் வெளிப்படுமாறு பட்டாச்சாரா கதையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தாழ்நாட்டுக் கலைஞனின் சிறப்பான ஓர் இயல்பு, ஓவியத்தில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ளடக்கியிருப்பதாகும். ஆடையணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பின்னணி, இயற்கை பொருட்கள் என்பவற்றை ஓவியங்களாக வரைகையில் விவரிப்புப் பண்புகளுடன் வேலைப்பாடுகள் கொண்டவையாகவும் இவை உள்ளன. இவை வர்ணங்கள், இரேகைகள் உபயோகித்து காண்பிக்கப்பட்டுள்ளன. ஒரே வர்ணம் கொண்ட இரேகைகள் ஓவியத்தின் நிறைவை அல்லது பூர்த்தியைக் காண்பிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு விபரிப்புத் தன்மையுடன் கூடிய அலங்கார வேலைப்பாடுகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பின்னணியை உருவாக்குகையில் கண்டியக் கலைஞனைப் போலவே தாமரை மலர்கள், மலர்க்கொடிகள் என்பவை உபயோகிக்கப்பட்டள்ளன. மரஞ்செடிகளை வரையும்போது மோடிப்படுத்தப்பட்ட தன்மை காணப்படினும் இயற்கையுலகுடன் தொடர்புறும் தன்மையை வெளிப்படுத்த ஓவியர் முயன்றுள்ளார். மனித உ திரும்பியிருக்கும் விதத்திலும் காட்டப்பட்டுள்ளன.

error: Content is protected !!