தெகல்தொறுவை விகாரைச் சுவரோவியங்கள்

கண்டியிலிருந்து லேவல்ல படகுத் துறை வழியே மறு கரையை அடைந்து கிரிமள்வத்தைச் சந்தியில் வலது புறமாகத் திரும்பச் சென்று தெகல்தொறுவை விகாரையை அடைய லாம். இது ஒரு குகை விகாரை யாகும். இது அமுணுகம தெகல்தொறுவை எனவும் வழங்கப்படும்.

கி.பி. 1771 இல் கண்டியை ஆட்சிசெய்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனின் காலத்தில் தெகல்தொறுவை விகாரை அமைக்கப்பட்டதாகக் தெகல்தொறுவை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னின் சகோதரனாகிய ராஜசிங்க மன்னனால் இவ்விகாரை கட்டுவிக்கப்பட்டது. இது ஏறத்தாழ நாற்பது அடி உயரமான ஒரு குகையை உள்ளடக்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு விகாரையாகும். பாரிய அளவில் மன்னனின் போசிப்பைப் பெற்ற இவ்விகாரையில் உள்ள கண்டிக் காலத்தைச் சேர்ந்த சுவரோவியங்களே மிகச் சிற்நத படைப்பாக்கங்களாகும். தெகல்தொறுவை ஏட்டின்படி, நீலகம் பரம்பரையைச் சேர்ந்த தெவரகம்பொள சில்வத்தன எனும் ஓவியரே இந்த ஓவியங்களை வரைவதில் முதன்மையிடம் பெற்றுள்ளதோடு, ஹிரியாலே நைதே, நீலகம பட்டபந்தா ஆகிய கலைஞர்களும் ஓவியங்கள் வரைவதில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

தெகல்தொறுவை குகை விகாரையில் ஹேவிசி மண்டபம், பிரவேச மண்டபம் , விகாரைக் கிருகம் என பிரதானமான மூன்று பகுதிகள் உள்ளன.

தெகல்தொறுவைக் குகை விகாரையில் காணப்படும் படைப்பாக்கங்களுள் புத்தர்சிலைகளும் (12 முழ சயனநிலைச் சிலை, நிற்கும் நிலைச் சிலைகள் 4, அமர்ந்த நிலைச் சிலைகள் 2) ஓவியங்களும் அடங்கியுள்ளன.

ஓவியங்கள்: ஜாதகக் கதைகள், ஏழு வாரங்கள் (சத் சத்திய), மாரனைத் தோற்கடித்தல் (மார பராஜய), பதினாறு இடங்கள் (சொலொஸ்மஸ்தான), அறிவொளி பெற்றோர் (ரஹத்) உருவங்கள்.

மத்திய கண்டிக்கால மரபின் தொன்மைப் பண்புகளைக் காட்டும் ஓவியங்கள் காணப்படும் ஓர் இடமாகிய இந்த விகாரையின் உட்கூரையிலும் பிரவேச மண்டபம் மற்மறும் ஹேவிசி மண்டபத்தின் சுவர்களிலும் இவ் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் வரையப்பட்ட வெளிச்சுவரைப் பின்வருமாறு காட்டலாம்.

தொடர் ஓவியத் தொகுப்பு

உலர் சாந்தின் மீது வரையப்பட்டுள்ள தெகல்தொறுவைச் சுவரோவியங்கள், விகாரையின் இட வெளியில் தொடர் ஓவியங்களாகவும் பெருந்தொடர் ஓவியங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர் ஓவியத் தொகுப்புகள் : ஜாதகக் கதைகள் – வெஸ்ஸந்தர, மகாசீலவ, சத்துஹத்த, சுத்தசோம. க்சாந்திவாதீ

பெரும் தொடர் ஓவியத் தொகுப்பு: மாரனைத் தோற்கடித்தல் (மார பராஜய)(உட்கூரை ஓவியங்கள்)

தெகல்தொலுவை ஜாதகக் கதை ஓவியங்களுள், வெஸ்ஸந்தர ஜாதகம் சிறப்பிடம் பெறுகின்றது. எதிர் காலத்தில் புத்தராவதற்கு ஆவலாக உள்ள போதிசத்துவர் தனது இறுதியான அவதாரத்தின்போது தானம் வழங்குதலைப் பூர்த்தி செய்துகொள்ளும் விதம் இதன் மூலம் காட்டப்படுகின்றது. விகாரையினது இடது பக்கச் சுவரில் வரையப்பட்டுள்ள வெஸ்ஸந்தர ஜாதகக் கதையின் நிகழ்வுகள், செய்திகள் (வக) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு காட்டப்பட்டுள்ள நிகழ்வுகளுள் ஆசையைப் போக்க தானம் செய்த செய்தி, சிவி நாட்டுப் பேரரசன் ஆட்சி நடத்தும் செய்தி, பிறந்தவுடனேயே தாய் தேவியிடம் தானப் பொருள்கள் தருமாறு கேட்ட செய்தி, அரசனாக முடிசூட்டப்பட்ட செய்தி, வெஸ்ஸந்தர மன்னன் பத்து அரச தர்மங்களையும் அனுசரித்து ஆட்சி செய்த செய்தி, வெள்ளை யானைகளைத் தானமாக ஈந்த செய்தி, நகரத்தோர் கோபடைந்த செய்தி, அதனை அமைச்சர்களுக்கு அறிவித்த செய்தி என்றவாறாகத் தொடர்ச்சியான கதை கூறல் முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வெஸ்ஸந்தர ஜாதகம்
வெஸ்ஸந்தர ஜாதகக் கதை – வெள்ளை யானை தானம் செய்தல்

வெஸ்ஸந்தர ஜாதகக் கதையில் இடம்பெற்றுள்ள வெள்ளை யானையைத் தானமாக வழங்குதல் எனும் ஓவியம் மிகச் சிறப்பான ஒரு படைப்பாகும். இங்கு தொடர்ச்சியான கதை கூறல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இருபரிமாண இயல்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பின்னணியின் ஆழம் காட்டப்படவில்லை. ஒரே தளத்தில் உருவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உருவங்களுக்கு இடையே வெறும் இடைவெளிகளும் கிடையாது. தலைப்புக்குப் பொருத்தமான வகையில் அதிக எண்ணிக்கை மனித உருவங்களை உள்ளடக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. பின்னணிக்காக பல்வேறு தாமரை மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓவியத்துக்கு வர்ணந்தீட்டுவதற்காக மஞ்சள், வெள்ளை, கறுப்பு, சிவப்ப நிறச் சாயங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உருவங்களின் பின்னணிக்காக சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புறவரை கோடுகள் கறுப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

வெஸ்ஸந்தர மன்னன், தங்க நகைகள் தரித்து மங்கல யானை மீது ஏறி வருகை தரும் விதமும் அதன் பின்னர் கலிங்க தேசத்திலிருந்து வந்த பிராமணர்களுக்குத் தானமாக வழங்கும் சந்தர்ப்பத்தில் யானையைக் கட்டியுள்ள விதமும் இந்த ஓவியத்தில் தெள்ளத்தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது. அசைவு பற்றிய கருத்தை உணர்த்தும் வகையில், யானை உருவத்தை வரையும்போது கலைத்துவ உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெஸ்ஸந்தர மன்னனுடன் வரும் யானை உருவத்தில் அது காட்டப்பட்டுள்ளது. தானமாக வழங்கும் சந்தர்ப்பத்தில் அசைவற்று நிற்கும் யானையைவிட, வெஸ்ஸந்தர மன்னனை முதுகில் சுமந்திருக்கும் யானை முப்பரிமாணத்தன்மையுடன் காட்டப்பட்டுள்ளது. இங்கு யானையின் அசைவுத் தன்மையைக் காட்டுவதற்காக, கால்கள் தூரமாகக் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் தொங்கும் மணியின் அசைவைக் காட்டுவதற்கும் ஓவியர் முயற்சி செய்துள்ளார்.

தெகல்தொறுவை விகாரையின் உட்கூரையில் காணப்படும் மாரனைத் தோற்கடித்தல் (மார பராஜய) எனும் ஓவியம் கண்டிக்கால தொன்மைக் கலைப் பண்புகளை நன்கு வெளிக்காட்டுகின்ற தனிச்சிறப்பான ஒரு பெருந்தொகுப்பு ஓவியமாகும். இங்கு நடுப்பகுதியில் வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் உருவத்தைச் சூழ மிக அழகிய ஒளிவட்டம் காணப்படுகின்றது. இந்த ஒளிவட்டத்தில் உள்ள சகல வட்டங்களும் சிறியதாக ஆரம்பித்துப் படிப்படியாகப் பெரிதாகிச் செல்லும் விதத்தில் தீச்சுடர் வடிவமைப்புகளாக வெவ்வேறு வர்ணங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

தெகல்தொலுவை விகாரை, மாரனைத் தோற்கடிக்கும் காட்சிகள்

ஒரு பெருந் தொடர் ஓவியத் தீட்டப்பட்டுள்ள இந்த ஓவியம் தெகல்தொறுவை விகாரையின் கற்குகை முகட்டில் காணப்படுகின்றது. இந்த ஓவியத்தின் நடுப்பகுதியில் புத்தர் பெருமான் பூமி ஸ்பரிச முத்திரை நிலையில் அமர்ந்துள்ளார். புத்தர் உருவத்தைச் சூழப் பாரிய அழகிய ஒளிவட்டமும் சமச்சீராகக் கிளை பிரித்துச் செல்லும் அரச மரமும் காட்டப்பட்டுள்ளன. நடுப்பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலையின் இரு புறங்களிலும் யுத்தத்துக்குத் தயாராக இருக்கும் மாரச் சேனை முகில்களின் மீது வெவ்வேறு மெயந்நிலைகளுடன் காட்டப்பட்டுள்ளனர். இங்கு காட்டப்பட்டுள்ள மாரன் சேனை வானத்திலிருந்து வெவ்வேறு ஆயுதங்களைக்கொண்டு புத்தர் பெருமானைத் தாக்கும் விதமும், அவ்வாறு எய்த அம்புகள் எதிர்ப்புறம் திரும்பி, இரு பக்கங்களை நோக்கியும் கீழ் நோக்கியும் செல்லும் விதமும் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு புறத்தே ஐந்து தலைகளைக் கொண்ட மாரர்களின் மன்னனாகிய வசவர்த்தீ’ ஒரு யானையின் மீது காட்டப்பட்டுள்ளான். மறுபுறத்தே மாரர்களின் மன்னனான ‘வசர்த்தி’ வலிமையிழந்து யானைமீது படுத்து விழுந்து கிடக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது.

வெவ்வேறு வகையான ஆயுதங்களை ஏந்தியவாறு மாரர் சேனையின் துப்பாக்கி ஏந்திய இரண்டு மாரர்கள் காட்டப்பட்டிருப்பது மற்றும் ஒரு சிறப்பியல்பாகும். இந்த ஓவியம் வரையப்பட்ட காலச் சமூகத்தின் தன்மையை எடுத்துக்காட்டுவதற்காக அக்காலத்தில் பயன்பாட்டில் இந்த ஆயுதங்கள் இவ்வாறு காட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகின்றது. இந்த ஓவியத்தில் மாரன் சேனையில் மாரர்கள் வெவ்வேறு பாங்கில் காட்டப்பட்டுள்ளனர். எனினும் ஓவியமெங்கிலும் உருவங்களுடன் வர்ணங்களின் சமனிலை பேணப்படும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளமை ஒரு தனிவர்ணத்தன்மை, மெல்லிய கோடுகளின் பயன்பாடு போன்ற இயல்புகள் மத்திய கண்டிக்கால தொன்மைக் கலையின் பண்புகளை நன்கு வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன.

ஓவியத்தில் உள்ள வஜ்ராசனத்தின் முன்னே பூமி மாதா தனது வலது காலை உயர்த்தி புத்தத்துவம் கிடைப்பதாகச் சபதம் செய்யும் விதம் காட்டப்பட்டுள்ளது. பெரிய, உயரமாக சிராசாபரணம் அணிந்துள்ள பூமி மாதாவின் தலையைச் சூழ ஒளிவட்டம் காணப்படுவதோடு, இடது கையில் அழகிய நிறைகுடம் (பூரணகும்பம்) காணப்படுகின்றது.

மாரனைத் தோற்கடித்தல் – ஓவியத்தின் வெவ்வேறு கட்டங்கள்

error: Content is protected !!