திவங்க (மூவளைவு) சிலை மனை

பொலனறுவைக்கால கெடி மனை வகையைச் சேர்ந்த மூன்றாவது சிலை மனை, திவங்க சிலை மனை ஆகும். இது தூபாராமை சிலை மனையை விடப் பெரியது. எனினும் லங்காதிலக்க விக்கிரக மனையைவிடச் சிறியது. சிலை மனையில் நடுப்பகுதியில் உள்ள நின்ற நிலை இச்சிலை காரணமாக இது திவங்க சிலை மனை – எனப்படுகின்றது. பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த இந்த நின்ற நிலைச் சிற்பம் செங்கல்லி னால் அமைக்கப்பட்டு, சுண்ணாம்புச் சாந்தினால் மெழுகப்பட்டுள்ளது. இந்த நின்ற நிலைச் சிற்ப மானது முழங்கால், இடுப்பு, தோள் ஆகிய

மூன்று இடங்களில் வளைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டிருப்பதோடு அது திவங்க (மூ வளைவு) எனப்பெயரிடப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. திவங்க சிலை மனையைக் கைகர். ‘வேலுவனாராமை’

எனவும் குறிப்பிட்டுள்ளார். சூல வம்சம் எனும் நூலின்படி, பராக்கிரமபாகு மன்னன் பொலனறுவை நகரத்துக்கு வெளியே அமைந்த ஒரு பிரதேசத்தில் ‘வேலுவன விகாரை எனும் பெயரில் அழகிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கும் வகையில் செய்விக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட ஒரு சிலை மனை இதுவாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. இதற்கமைய தெமல மகா தாதுகோபத்துக்கும் (தமிழ் மகா தாதுகோபத்தை) நலும்பொக்குனவிற்கும் (தாமரைக்குளம்) அப்பால் அமைந்துள்ள திவங்க சிலை மனையானது முதலாம் பராக்கிரமபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்ட ஒரு கட்டடக்கலைப் படைப்பாகக் கருதப்படுகின்றது.

நிலத்திட்டத்தைப் பொறுத்தமட்டில் தூபாராமை, லங்காதிலக்கை ஆகியவற்றை ஒத்ததாகக் காணப்பட்ட போதிலும் உட்புற பிரதட்சணைப்பாதை போன்ற வேறுபட்ட சில அம்சங்களையும் இதில் காணலாம். இவ்விக்கிரக மனை துவார மண்டபம், இடைக்கழிக்கூடம், அந்தராழம், கர்ப்பக்கிரகம். பிரதட்சணைப் பாதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இச்சிலை மனை, 133 அடி நீளமும் 67.6 அடி அகலமுமுடையது. கிழக்குத் திசையில் பிரதான நுழைவாயிலும் வடக்குத் திசையில் மற்றுமொரு நுழைவாயிலும் உள்ளன. இக்கட்டடத்தில் ஒட்டுமொத்தமாக ஆறு சாளரங்கள் உள்ளன. இதன் சுவர்கள் 7 அடி அகலமானவை. அத்திவாரப்பகுதி ஏறத்தாழ 12 அடி அகலமானது. இக்கட்டத்தில் எஞ்சியுள்ள இடிபாடுகளின்படி தளமாடியிற் போன்றே மேல் மாடியிலும் பிரதட்சணைக்காக இரண்டு பாதைகள் காணப்படுகின்றமை ஒரு சிறப்பியல்பாகும். அவை, புத்தர் சிலையை வழிபடுவோரின் வசதிக்காக உட்படுத்தப்பட்ட அங்கங்களாகக் கருதப்படுகின்றன. சிலை மனைக்கு அருகே வீழ்ந்து கிடந்த நிலையில் பாரிய செங்கற் குற்றியொன்று காணப்பட்டமையால் இதன் கூரை செங்கல்லினால் அமைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது.

இக்கட்டடம் இரண்டு காலப்பகுதிகளில் நிரமாணிக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் கருதப்படுகின்றது. திவங்க சிலை மனையின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள அலங்காரிப்புக் கோலங்களின் தன்மையை நோக்குகையில் அச்சுவர்கள் பிற்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. திவங்க சிலை மனையின் வெளிப்புறச் சுவர்கள், ஒன்றுடனொன்று நெருக்கமாக அமைந்த தூண்களால் இணைக்கப்பட்ட விமானங்களைக் கொண்டவை. அவ்விமானங்களில் வைக்கப்பட்ட தெய்வ உருவங்களும் உள்ளன. புனையப்பட்டுள்ள இவ்வேலைப்பாடுகள் அளவை மீறி அழகுபடுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக அவர்கள் மீது அதிகளவான உருவங்களைக் காணமுடிகின்றது. அத்திவாரத்தில் சிங்க உருவங்களும் அவற்றுக்கு மேலே அமைந்த வாமன (குள்ளர்) உருவ வரிசையும் உள்ளன. திவங்க சிலை மனையின் அழகிய அலங்கரிப்புக்கள் அதிக அளவுக்குக் காணப்படுவதற்கான காரணம் இந்து சமயத்தின் மிகையான செல்வாக்காக இருக்க இடமுண்டு. இச்செல்வாக்கு பல்லவர் காலத்துக்குப் பிற்பட்ட கால கட்டடநிர்மாணப் பாங்குகளின் ஊடாகக் கிடைத்துள்ளதாக அனுராத செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!