திவங்க சிலைமனை ஓவியங்கள்

 • கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் பராக்கிரமபாகு மன்னனால் செய்விக்கப்பட்ட திவங்க சிலைமனை, பெளத்த ஓவியக் கலையின் சிறப்பான ஆக்கங்களைக் கொண்ட பண்டைப் பெளத்த கட்டடக்கலையாக்கமாகும்.
 • பொலநறுவைக் கால, இந்து கட்டடக்கலையின் செல்வாக்கைக் கொண்ட ஒரு சிறந்த பெளத்தச் சிலைக்கூடமாக இது கருதப்படுகின்றது.
 • பொலனறுவைக் கால ஓவியக்கலை தொடர்பான சிறந்த அம்சங்கள் அச்சிலைமனையில் காணப்படுகின்றது.
 • இலங்கை ஓவியக்கலை வளர்ச்சியின் இரண்டு யுகங்களைச் சேர்ந்த ஓவியக்கலைப் பாணிகளை இங்கு காண முடிகின்றது.
 • அர்த்த மண்டபத்தில் காணப்படும் ‘தேவாரதனாவ’ எனும் ஓவியமும், கர்ப்பக்கிரகத்தில் உள்ள சங்கஸ்ஸ புரத்துக்கு வருகை தருதல்’ எனும் ஓவியமும் முன்னைய காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
 • பிரவேச மண்டபத்தில் காணப்படும் போதிசத்துவரைக் காட்டும் ஜாதகக் கதை ஓவியம், பிற்காலத்தில் வரையப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகின்றது.
 • ஜாதகக் கதைச் சித்திரங்களுள் தேமிய ஜாதகம் , சச ஜாதகம், அசங்கவதீ ஜாதகம், சுள்ள மதும் ஜாதகம் ஆகியன பிரதானவையாகும்.
 • ஆரம்ப கால ஓவியங்களாகக் கருதப்படும் கர்ப்பக்கிரக மற்றும் அர்த்தமண்டப ஓவியங்கள் அனுராதபுர ஓவியக்கலைப் பண்புகளைக் காட்டுகின்றன.
 • பிரவேச மண்டபத்தில் காணப்படும் பிற்கால ஓவியங்களாக ஜாதகக் கதை ஓவியங்கள், நிரையாக வரைதல், தொடர்ச்சியான கதை , பக்கத்தோற்ற உருவம், பின்னணியாக சிவப்பு நிறப் பயன்பாடு போன்றவை ஜாதகக் கதை ஓவியங்களின் சிறப்பியல்புகளாகும்.
 • திவங்க சிலை மனைச்சித்திரம் உலர் சாந்தின் மீது வரையப்பட்ட நுட்ப முறையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
 • பின் செந்நெறிப் பாரம்பரியக் கலைப்பண்புகளாக இவ்வோவியங்களுக்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

தேவாராதனாவ ஓவியம் (தேவ அழைப்பு)

 • இவ்வோவியம் திவங்க சிலை மனையில் அர்த்த மண்டபத்தில் காணப்படுகிறது.
 • தேவலோகத்தில் வசித்த போதிசத்துவருக்கு மண்ணுலகில் பிறக்கும்படி தெய்வத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பு இதில் காட்டப்படுகிறது.
 • அலங்காரமான ஆடை அணிகளுடன் காட்சியளிக்கும் தேவர்களின் உருவங்கள் தளம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் உயிர்ப்புடன் வரையப்பட்டுள்ளது.
 • வணங்கும் நிலையிலும், மலர் தூவும் நிலையிலும் உள்ள தேவர்கள் பொன்னிறத்தில் காட்டப்பட்டுள்ளதுடன் போதிச்சத்துவர் வடிவத்திற்கு நீலத்தை ஒத்த இளம்பச்சை நிறத்தில் உடலை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
 • இவை அஜந்தா பத்மபாணி போதிசத்து வரின் உருவுக்கு ஒத்த தன்மையைக் கொண்டிருக்கிறது.
 • இவற்றை சிவப்பு, கபிலநிறம், மஞ்சள் போன்ற வர்ணங்களை அதிகளவில் உபயோகித்து தீட்டியுள்ளார்.
 • இடப்பரப்பில் அதிகளவிலான உருக்களை ஒழுங்கமைத்துள்ளமை அவ்வாக்கத்தில் காணக்கூடிய சிறப்பான பண்பாகும்.

சங்கஸ்ஸபுரத்திற்கு ஏணியால் வருகை தரல்

 • இவ்வோவியம் சிலையை வைக்கத் திட்டமிட்ட இடத்தின் கர்ப்பக் கிரகத்தில் காணப்படுகிறது.
 • இவ்வோவியத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட ஏணியால் புத்த பெருமான் சங்கஸ்ஸபுரியை அடையும் காட்சியும், திவ்யராஜனுக்கு உபதேசம் செய்வதற்கு ‘தவ்திசா’ தேவலோகத்துக்கு வருகை தரும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது.
 • பாரிய தளத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் புத்த பெருமானின் உருவம் இயல்பான அளவை விட பெரிய அளவில் வரையப்பட்டுள்ளது.
 • முற்பட்ட காலப் படைப்பாகக் கருதப்படும் இது அனுராதபுர ஓவியக்கலைப் பண்புகளைக் கொண்டது.
 • நிறந் தீட்டுவதற்காக சிவப்பு, கபிலம், மஞ்சள் வர்ணங்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
 • ‘தேவாராதனாவ’ ஓவியத்தின் ஒத்த கலைப்பாணியைக் கொண்டதுடன் வர்ண உபயோகமும் ஒத்திருக்கின்றன.

தேமீக ஜாதகம்

 • தேமீக ஜாதகத்தில் போதிசத்துவரைக் காட்டும் சிறப்பான ஓர் ஓவியப்பகுதியாக இவ் வோவியத்தைக் குறிப்பிடலாம்.
 • ஜாதகக் கதை ஓவியங்களுள் மிகத் தெளிவாகத் தெரியும் ஓவியப்பகுதியாக இதனை இனங்காணலாம்.
 • குதிரை இரதத்தில் கை கால்களை அசைக்காது வைத்திருக்கும் தேமீக குமாரனும், குழி பறிக்க ஆயத்தமாகும் சுனந்த எனும் இரதமோட்டியும் அவனுக்கு முன்னால் போதிசத்துவர் போன்று நிற்கும் தேமீக குமாரனும் காட்டியுள்ளார்.
 • நிறந் தீட்டுவதற்காக கபிலம், செங்கபிலம், மஞ்சள் ஆகிய வர்ணங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • இவ்வோவியங்கள் கண்டிக்கால ஓவிய மரபைச் சேர்ந்த பண்புகளைக் கொண்டவை.
 • ஓவியங்கள் நிரையாக வரையப்பட்டிருத்தல், கதைத் தொடர்ச்சி , பக்கத்தோற்ற உருவங்கள், பின்னணிக்காக சிவப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருத்தல் போன்றவை ஓவியங்களில் காணப்படும் சிறப்பியல்புகளாகும்.
பயிற்சி வினாக்கள்

1. திவங்க சிலைமனை எக்காலப்பகுதிக்குரியது?
2. திவங்க சிலைமனையை கட்டுவித்த மன்னன் யார்?
3. திவங்காலயம் எக் கட்டடக்கலைச் செல்வாக்கைக் கொண்டுள்ளது?
4. இரு வேறுபட்ட கால ஓவியப் பாணியைக் கொண்ட சித்திரக்கூடம் எது?
5. திவங்க சிலைமனையின் அர்த்த மண்டபத்தில் காணப்படும் ஓவியம் எது?
6. திவங்க சிலைமனையின் கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் ஓவியம் எது?
7. திவங்க சிலைமனையின் பிரவேச மண்டபத்தில் காணப்படும் ஓவியம் எது?
8. திவங்க சிலைமனையில் காணப்படும் ஜாதகக் கதைகளுக்கு உதாரணம் தருக.
9. திவங்க சிலைமனையில் காணப்படும் அனுராதபுரக்கால பண்புகளைக் கொண்ட ஓவியம் எது?
10. திவங்க சிலைமனையில் காணப்படும் கண்டிக்கால பண்புகளைக் கொண்ட ஓவியம் எது?
11. திவங்க சிலைமனையில் காணப்படும் ஓவியங்கள் வரையப்பட்ட நுட்பமுறை யாது?

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இவ் ஓவியம் திவங்க சிலைமனையின் ……………………… இல் காணப்படுகின்றது.
2. இவ் ஓவியத்தில் புத்தபெருமான் தங்க ஏணியால் ……………………… யை அடையும் காட்சி காட்டப்பட்டுள்ளது.
3. இவ் ஓவியத்தில் புத்த பெருமானின் உருவம் …………………… காட்டப்பட்டதன் மூலம் தெய்வாம்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
4. இவ் ஓவியம் ………………………… கால ஓவியப் பண்புகளைக் கொண்டுள்ளது.
5. இது …………………………… நுட்பமுறையில் வரையப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………………
2. காணப்படும் மண்டபம் : …………………..
3. தொனிப்பொருள் : ……………………………….
4. வர்ணப்பயன்பாடு : ……………………………..
5. செல்வாக்கு : ………………………………………….

1. இனங்காண்க :………………………………………
2. காணப்படும் மண்டபம் : ………………….
3. தொனிப்பொருள் : ………………………………
4. வர்ணப்பயன்பாடு : …………………………….
5. கலை மரபு : ……………………………………………
6. ஒழுங்கமைப்பு : …………………………………..

error: Content is protected !!