தாவடி மு. துரைசாமி

 • ஓவியர் தாவடி மு.துரைசாமி அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர்.
 • இவர் தென் இந்திய தஞ்சாவூர் ஓவியங்களின் பாணி முறையைப் பின்பற்றியுள்ளார்.
 • ஐரோப்பிய யதார்த்தவாதத்தையும் (Realism) கீழைத்தேய ஓவியப் பாணி முறைகளின் இயல்புகளையும் இணைத்து இவர் வரைந்துள்ளார்.
 • நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் வரையப்பட்ட வெள்ளைக்கை ஐயரும் விநாயகரும், வெள்ளைச் சேவல், அலங்காரங்கள் என்பன சிறப்பானவை.
 • இவ்வோவியங்களிற் சிறப்பாக இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டமையும் கபில, நீல நிறங்களின் பாவனையும் குறிப்பிடப்படுகின்றன.
 • சுண்ணாம்புக் காரையின் (பூச்சு) மீது சுவரோவியமாக வரையப்பட்டவையாகும்.
 • கீழைத்தேய மரபினை பின்பற்றிய கோட்டை மையப்படுத்தியதாகவும் கபில நிறத்திலும் காணப்படுகின்றது.
 • நிறம் தொனி நிலை வேலைப்பாடு கொண்டது.
 • இவரது கோயில் சார் ஓவியங்களுள் தாவடி முருகமூர்த்தி கோவிலில் உள்ள பாற் காவடிக்காரன், வள்ளியை ஈன்ற மான், வசிட்டரும் காராம் பசுவும், முருகன் கிழப்பிரமாண வேடத்தில் தோன்றி வள்ளியை யானையிடமிருந்து காத்தல், வேடர்கள் என்பன சிறப்பானவை.
 • இவரது ஓவியங்கள் யாழ்ப்பாணக் கிட்டங்கி, காங்கேசன்துறைக் கிட்டங்கி மற்றும் பல தனியார் வீடுகளிலும் காணப்பட்டன.

கூவும் வெள்ளைச் சேவல் ஓவியம்

 • இது சட்டநாதர் சிவன் கோவிலிற்குரியது.
 • கம்பீரமான தோற்றத்துடன் யதார்த்த பாணியில் சேவலுக்குரிய குணப்பண்புகள் வெளிப்படுத்தப்பட்டு வரையப்பட்டுள்ளது.
 • ஐரோப்பிய யதார்த்தபாணியின் உள்வாங்குகை என்பது இங்கு தெளிவாக காணப்படுகின்றது.
 • இளங்கபில நிறச்சாயல் ஓவியமெங்கும் காணப்படுகிறது.
 • உலர் சாந்தின் மீது ஓவியம் வரையும் நுட்பமுறையில் இயற்கை வர்ணங்களைக் கொண்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
 • இது இங்கிருந்த முருகன் ஓவியத்தின் ஓர் பகுதியாகக் காணப்பட்டது.

வெள்ளைக்கை ஐயரும் விநாயகரும்

 • இது சட்டநாதர் சிவன் கோவிலிற்குரியது.
 • சட்டநாதர் ஆலய பூசகரான வெள்ளைக்கை ஐயரதும் விநாயகரதும் உருவங்கள் ரேகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரையப்பட்டுள்ளது.
 • விநாயகருக்கு பூசை செய்வது போல இவ்வுருவம் வரையப்பட்டுள்ளது.
 • கபில நிறச் சாயல் கொண்ட வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 • தென் இந்திய தஞ்சாவூர் ஓவியங்களின் பாணியும், ஐரோப்பிய யதார்த்தவாதப் பாணியும் இணைந்ததாகவுள்ளது.
 • விநாயகர் உருவம் அலங்கரிக்கப்பட்ட ஒளி வட்டம் கொண்டது. தீபாராதனையில் ஈடுபடும் வெள்ளைக்கை ஐயரினை விநாயகரிலும் சிறிதாகக் காட்டப்பட்டுள்ளது. பின்னணி தட்டையாக விடப்பட்டுள்ளது.
 • இயற்கையான வர்ணங்களைக் கொண்டு, சுண்ணாம்புக் காரையின் (பூச்சு) மீது வரையப்பட்டு இது காணப்படுகின்றது.
பயிற்சி வினாக்கள்

1. மு.துரைச்சாமியின் ஓவியங்கள் எந்த பாணி முறையில் வரையப்பட்டது?
2. இவரால் வரையப்பட்ட ஓவியங்கள் எவை?
3. இவரது ஓவியங்கள் காணப்படும் இடங்கள் எவை?
4. இவர் தமது ஓவியங்களுக்கு எவ்வகையான வர்ணங்களைப் பயன்படுத்தி உள்ளார்?
5. சேவல் ஓவியத்தின் பாணியானது? இது எவ் ஓவியத்தின் பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது?

error: Content is protected !!