தந்திரி மலை

அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மஹவிலச்சிய பிரதேசத்தில் உள்ள தந்திரி மலைக் கிராமத்தில் அமைந்துள்ள இக்குகை 1959 ஆம் ஆண்டில் நிக்கலஸ் இனால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓவியங்கள் அருகருகே அமைந்த இயற்கையான கற்குன்றின் இருபுறங்களிலும் உள்ள சரிவான சுவர்களில் காணப்படுகின்றன.

ஒரு பக்கத்தில் உள்ள சரிவான சுவர் மீது பல விலங்கு உருவங்களும் ஏழு மனித உருவங்களும் பல கேத்திரகணித வடிவங்களும் வரையப்பட்டுள்ளன. வெவ்வேறு உடல் நிலைகளைக் காட்டும் மனித உருவங்கள் காணப்படுவதோடு, விலங்கொன்றின் முதுகு மீது இருக்கும் மனித உருவம் கவனத்தை ஈர்க்கும் தன்மையுடையது. கைகளை இரு புறமாகவும் வைத்துள்ள இந்த உருவத்தின் முகம் இடது பக்கம் திரும்பிய நிலையில் உள்ளது. இதேகுகையில் மான் எனக் கருதத்தக்க ஓர் உருவத்துடன் இருக்கும் மற்றுமொரு மனித உருவமும் காணப்படுகின்றது. அவ்விலங்கு உருவம் நரை நிறக் கோட்டினால் வரையப்பட்டு உள்ளே சிவப்பு நிறத்தில் புள்ளிகள் இடப்பட்டுள்ளன. அத்தோடு வெண்ணிறக் கோட்டினால் வரையப்பட்ட ஓடுமாப்போன்ற மெய்நிலையைக் காட்டும் மனித உருவமொன்றும் இங்கு காணப்படுகின்றது. நரைநிறக் கோடுகளால் வரையப்பட்ட இரண்டு விலங்குகளின் பின்னே நிற்கும் இரண்டு மனித உருவங்களும் வெண்ணிறக் கோட்டினால் வரையப்பட்ட கையில் வில்லுடன் இடதுபுறமாக திரும்பிய நிலை மனித உருவமொன்றும் இங்கு உள்ள ஓவியங்களுள் அடங்கியுள்ளன.

விலங்கொன்றின்மீது செல்லும் மனிதன்
மான் என அனுமானிக்கக்கூடிய ஒரு விலங்குடன் நிற்கும் மனிதன்
வில்லுடன் நிற்கும் மனிதன்
ஓடும் மனிதர்கள்
விலங்கு உருவம் மனித உருவமும்
உடும்பு
மனிதர்
error: Content is protected !!