டேவிட் பெயின்ரர்

 • தேசிய ஓவியக் கலைஞரான டேவிட் பெயின்ரர் ஆங்கிலேய இனத் தந்தைக்கும் சிங்களத் தாயாருக்கும் 1900 ஆம் ஆண்டில் இந்தியாவில் அல்மேறா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கிறிஸ்தவப் போதகராவார்.
 • இங்கிலாந்து சென்று றோயல் அக்கடமியில் ஓவியக் கலையைக் கற்றுள்ளார்.
 • ஐரோப்பிய மரபு சார்ந்த இயற்கை வாதப் பாணிப் பண்புகள் வெளிப்படும் வகையில் மனித வடிவை ஓவியமாக வரையும் பொழுது உடலின் அழகு, லயம், அகஇயல்புகள் என்பன சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.
 • தேசிய புகழ் பூத்த ஓவியரான இவர் இலங்கைக் கலைச் சங்கத்தின் சமகாலக் கலைஞர்களுள் ஒருவராவர்.
 • டேவிட் பெயின்ரது படைப்புக்களின் விடயப் பொருள்கள் வருமாறு

♦ பிரதிமை ஓவியம்
♦ மனித உருவ ஒழுங்கமைப்பு
♦ திரித்துவத் தேவாலய சுவரோவியங்கள்.

டேவிட் பெயின்ரர் ஓவியக் கலைஞரின் படைப்புகளும் ஓவிய ஒழுங்கமைப்பு இயல்புகளும்.

 • உயிரோட்டத்தையும், மேனி அழகையும் நன்கு வெளிப்படுத்தும் வகையில் மனித உருவங்களைச் சித்தரித்தல்.
 • மனித மெய்நிலைகள், உணர்வுகளை வெளிப்படுத்தலும் காத்திரத் தன்மையைக் கொண்டிருத்தலும்.
 • முப்பரிமாண இயல்புகள் வெளிப்படுமாறு பிரகாசமான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்.
 • கிறிஸ்தவக் கருப்பொருள்களைச் சித்தரிக்கும் போது ஐரோப்பியப் பண்பாடும் நிலவுருவில் இலங்கைப் பின்னணியும் சித்தரிக்கப்பட்டிருத்தல்.
வெற்றியுடன் ஜெரூசலத்திற்குள் பிரவேசித்தல்
 • தேசிய கலாபவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் கன்வஸ்துணி மீது எண்ணெய் வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ளது.
 • தளத்தில் உருவங்களைச் சித்தரிக்கும் போது முன்பகுதி, நடுப்பகுதி, பின்பகுதி மீது உருவங்களைத் ஸ்தாபித்து, ஓவியத்தின் அழகும் தூரநோக்கு இயல்புகளும் காட்டப்பட்டுள்ளன.
 • முப்பரிமாண இயல்புகளுடன் அதிக இளஞ்சிவப்பு நிறம் சார்ந்த பிரகாசமான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • ஓவியத்தின் பின்னணியாக, ஜெரூசலம் பாலைவனத்துக்குப் பதிலாக, இலங்கை உலர்வலயத்தைச் சேர்ந்த மலைப்பாங்கான தரைப் பிரதேசம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நல்ல சமாரியன்

 • இது கண்டி திருத்துவத் தேவாலயத்தில் வரையப்பட்டுள்ள ஓர் ஓவியமாகும்.
 • இயேசு நாதர் போதித்த உண்மைக் கதையொன்றின் ஒரு அங்கமே இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது அடிவாங்கிக் காயமடைந்த ஒருவருக்கு நல்ல சமாரியன் உதவி புரியும் சந்தர்ப்பமே இதுவாகும்.
 • இயேசு பிரானின் கதையைச் சித்தரிக்கும், கண்டி திருத்துவ தேவாலய சுவரோவியங்களின் சிறப்பியல்பானது ஐரோப்பியப் பண்பாக உருவமும், பின்னணியாக இலங்கைப் பின்னணியிலும் சித்தரிக்கப்பட்டுள்ளமையாகும்.
 • இலங்கை மனிதரின் உருவங்கள், ஆடையணிகள், சூழற் தன்மை ஆகியன இங்கு தெட்டத் தெளிவாகக் காட்சியளிக்கும் இயல்புகளாகும்.
 • ஐரோப்பிய ஓவியக் கலைக் கோட்பாடுப் பண்பில் ஆழத்தைத் காட்டுதல், தூரநோக்கு, முப்பரிமாண இயல்பு ஆகியவற்றை இந்த ஓவியத்தில் காணலாம்.
பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இடமும் கலைஞரும் : .……………………………………………
2. தொனிப்பொருள் : .……………………………………………………
3. சிறப்பம்சம் : .……………………………………………………………………
4. ஒழுங்கமைப்பு : .……………………………………………………….
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………………………………

1. காணப்படும் இடம் : .……………………………………………..
2. தொனிப்பொருள் : .……………………………………………………
3. ஓவியப் பாணி : .…………………………………………………………….
4. வர்ணங்களின் பயன்பாடு : .……………………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………………………………

error: Content is protected !!