ஜோர்ஜ் கீற்

 • ஆசியாவில் புகழ்பெற்ற ஓவியரான ஜோர்ஜ் கீற் கி.பி.1901 ஆம் ஆண்டு 17ஆம் திகதி கண்டி அம்பிட்டியாவில் சிங்கள பறங்கியர் குடும்பத்தில் பிறந்தார்.
 • கண்டி திரித்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.
 • 43 குழுவைச் சேர்ந்த இவர் கோதமி விகாரை ஓவியங்களையும் வரைந்துள்ளார்.
 • அவருடைய ஓவியங்கள் இந்து மதக் கலைச் செல்வாக்கைக் கொண்டதாக காணப்படுகிறது. பப்லோ பிக்காசோ ஓவியங்களுக்கு ஒத்த தன்மை கொண்டதாகவும் காணப்படுகிறது. இருந்த போதும் அவருக்கே உரிய பாணியில் அவற்றை வரைந்துள்ளார்.
 • நவீன காலத்தில் வாழ்ந்த திறமையான ஓவியராவார். கி.பி. 1939 – 1940 காலப் பகுதியில் கொழும்பு பொரளை விகாரையில் பௌத்த மத ஓவியங்களை வரைந்து பாராட்டைப் பெற்றார்.
 • இவருக்கு ஓவியங்கள் வரைவதற்காகச் சுவரை நிர்மாணித்துக் கொடுத்தவர் அன்ட்று புரொயிட் எனும் கலைஞன் ஆவார்.
 • கோதமி விகாரையின் சித்திரங்கள் தொடராக வரையப்பட்டுள்ளன.

♦ மகா மாயாதேவியின் கனவு.
♦ சித்தார்த்தரின் பிறப்பு.
♦ நடனக்கார்களின் ஆட்டங்களைக் காணுதல்.
♦ யசோதரை திருமணம்.
♦ நான்கு முன்னறிகுறிகளைக் காணுதல்.
♦ மார யுத்தம்.

 • இவ்வோவியங்கள் 192 சதம மீற்றர் அளவு உயரமான சுவரில் உயிரூட்டமாக வரையப்பட்டுள்ளன.
 • ஜோர்ச் கீற் ஓவியங்களை வரையும் போது இரேகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். நேர்கோடு, குறுக்குக் கோடுகள், வளைகோடுகள் என்பதை பொதுவாக இவற்றில் காணலாம். இரேகைகளைக் கையாண்ட முறையே ஓவியங்களுக்கு உயிர் கொடுத்துள்ளன. மனித உடலின் நிறைவுத் தன்மையை இரேகைகள் மூலம் தெளிவாகக் காட்டியுள்ளார்.
 • சிவப்பு, வெள்ளை, மண்ணிறம், மஞ்சள், நீலம், பச்சை எனும் வர்ணங்களை பிரயோகித்து கோதமி விகாரையின் சுவர்களை விசித்திரமாக அலங்கரிக்க ஜோர்ச் கீற் ஓவியக் கலைஞர் பெரும் பணியாற்றியுள்ளார்.
 • மேற்குறிப்பிடப்பட்ட ஓவியங்களைத் தவிர விகாரையின் தியான மண்டப உட்சுவரிலும் வெளிச்சுவரிலும் (பிரதக்ஷினா பாதய ) மூன்று பக்கச் சுவர்களில் பாரிய அளவில் மூன்று சித்திரங்கள் வரைந்துள்ளார். அவை உயரமான சுவரில் வரையப்பட்டுள்ளன.

மார யுத்தம்

 • கோதமி விகாரையின் ஓவியங்களுள் இது முக்கியமானது.
 • இவ்வோவியத்தில் பிக்காசோவின் கவைடிவ வாதத் தன்மைப் பண்புகளைக் காட்டியிருக்கிறார்.
 • விசித்திரமான கேத்திர கணித வடிவங்களைப் பயன்படுத்தி யுத்தப் படையினரின் பயங்கரமான சுபாவத்தைத் திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
 • படைகளைச் சாம்பல், கறுப்பு போன்ற இருளான வர்ணங்களையும், புத்த பெருமானைச் சித்தரிக்க மஞ்சள் மெல்லிய மண்ணிறம் போன்ற வர்ணங்களையும் பிரயோகித்துள்ளார்.
 • இரேகைகளின் தன்மையைப் போலவே முப்பரிமாணத்தைக் காட்ட வர்ணத்தை பிரயோகித்த விதமும் அவருக்கே உரிய பாணியில் அமைந்துள்ளன.

நாயிகா ஓவியம்

 • நாயிகா ஓவியங்கள் பலவற்றை ஜோர்ஜ் கீள் வரைந்துள்ளார்.
 • எண்ணெய் வர்ண ஊடகத்தாலான கன்வஸ் ஓவியப்படைப்புக்களாகும்.
 • நாயிகா சித்திரங்கள் நீண்ட விழிகளையும், அகன்ற உதடுகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
 • நெற்றியையும் மூக்கையும் காண்பிக்க தனி நேர் கோட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்.
 • இவ்வோவியங்கள் இந்து சமய மரபுக்கு ஒத்த இயல்பைப் பெற்றிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
பயிற்சி வினாக்கள்

1. இலங்கையில் கோதமி விகாரையில் ஓவியம் வரைந்த ஓவியர் யார்?
2. கோதமி விகாரை ஓவியங்களின் முதன்மையான தொணிப்பொருள் யாது?
3. ஜோச்கீற் ஓவியங்கள் வரையும் போது எதற்கு முக்கியத்துவம் வழங்கினார்?
4. மார யுத்த ஓவியங்களில் காணப்படும் வர்ணங்களை குறிப்பிடுக?
5. நாயிகா ஓவியம் வரைய பயன்படுத்தப்பட்ட வர்ண ஊடகம் யாது?
6. நாயிகா ஓவியம் வரையப்பட்ட சமய மரபினைக் குறிப்பிடுக

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இடமும் கலைஞரும் : .……………………………………………………..
2. தொனிப்பொருள் : .………………………………………………………………
3. கோடுகள். வர்ணங்களின் பயன்பாடு : .……………………….
4. ஒழுங்கமைப்பு : .…………………………………………………………………..
5. உணர்வு வெளிப்பாடு : ………………………………………………………………

error: Content is protected !!