ஜே.டீ.ஏ. பெரேரா (1897 – 1967)

கி.பி. 1897 ஆம் ஆண்டு கம்பஹா பிரதேசத்தில் பிறந்த ஜே.டீ.ஏ. பெரேரா, பாடசாலைக் காலம் முதல் சித்திரம் வரைவதில் காட்டிய ஆர்வமே அவரது கலைத்துறை வாழ்க்கைக்கு பெரிதும் வழிகோலியது. அவர் அக்கடமி கஓவியக் கலையின் முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவரும், திறமைமிக்க ஓர் ஆசிரியரும் ஆவார். இலங்கை நுண்கலைக் கல்லூரியின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பெரும்பாங்காற்றியதோடு, இலங்கையின் நவீன ஓவியக் eகருவிகக கல்கி இதம் பெறும் ஒரு கலைஞருமாவார். நாடகக் கலைக்கும் அளப்பரிய சேவையாற்றிய அவர், ஜோன் டி சில்வாவிற்குப் பின்னர் சிங்கள நாடகக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் பங்களிப்புச்செய்து. ஹரிஸ்சந்திர, வெஸ்ஸந்தர, ஸ்ரீ விக்கர (Harischandra, Wessanthara, Srec Vikrama) போன்ற பல நாடகங்களுக்கான கலைத்துவப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

ஜே.டீ.ஏ. பெரேரா மாணவனாக இருந்த காலத்தில் அவரது திறமைகளை அவதானித்த சி.எவ். வின்சர் அவரை மருதானை தொழினுட்பக்கல்லூரியில் சேர்த்தார். அங்கு அவர் ஏ.ஈ. பார்ட்லர் அவர்களின் கீழ் சித்திரக்கலை பயின்றார். கொழும்பு தொழில்னுட்பக்கல்லூரியில் ஏறத்தாழ 11 ஆண்டு காலம் கல்வி பெற்ற ஜே.டீ.ஏ. பெரேரா, உருவப்படம் வரைதலில் சிறப்பான திறமையைக் காட்டினார்.

இலங்கைக் கலை ஓர் அமைப்பைத் தாபித்த முன்னோடிகளுள் ஒருவராகிய ஜே.டீ.ஏ. பெரேரா, கொழும்பு தொழினுட்பக் கல்லூரியில் பெற்ற முறைசார்ந்த கல்வி மற்றும் அவரது தனித்திறமான திறமைகள் காரணமாக, பாட்லர் இன் பின்னர், அக்கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கைக் கலைத்துறைக் கல்வியில் பரந்துபட்ட மாற்றங்களை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டார். சீ.எவ். வின்சர் இனது தலையீடு காரணமாக பிலிங் பாடசாலை (இடைநிலைக்) கல்வி மீது தலையிட்டுச் செயற்பட்ட அதேவேளை ஜே.டீ.ஏ. பெரேரா உயர் (மூன்றாம்நிலை) கல்வியைச் சேர்ந்த பணிகளில் ஈடுபட்டார். அதற்கமைய தொழினுட்பக் கல்லூரியிலிருந்து வேறாகிய தனியான ஒரு நிறுவனமாக, அரச நுண்கலைக் கல்லூரியைத் தாபிப்பதிலும் அதன் மூலம் பல கலைஞர்களை உருவாக்குவதிலும் ஜே.டீ.ஏ. பெரேரா வெற்றி கண்டார். இன்று அந்நிறுவனம் கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழக்கழகமாகப் பரிணமித்துள்ளது.

ஓர் ஓவியக் கலைஞராக முறைசார்ந்த வெளிநாட்டு உயர்கல்வியைப் பெற்றிராத இவர், முதன்முதலாக 1946 இல் அரசினால் கலைகளுக்காக வழங்கும் ஒரு புலமைப் பரிசிலைப் பெற்று இங்கிலாந்து செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அங்கு வெல்சா” கலைக்கழகத்தில் உறுப்புரிமை பெற்றதோடு, இங்கிலாந்து தேசிய கலைக்கூடத்தில் பல ஓவியக் கண்காட்சிகளை நடாத்துவதற்கு வாய்ப்பையும் பெற்றார். அவை தவிர றோயல் கலைக்கல்லூரி. பரிஸ் நகர ‘சலோன்’ ஆகியற்றிலும் ஓவியக் கண்காட்சிகள் நடத்தினர்.

ஜே.டீ.ஏ. பெரேரா வரைந்த ஓவியங்கள் சிறு தொகையே காணப்பட்ட போதிலும் அவரது படைப்புக்கள் இலங்கைக் அக்கடமிக் யதார்த்தவாத கலைப்படைப்புக்களுள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. தைல வர்ணத்தையும் நீர் வர்ணத்தையும் பயன்படுத்தி, கலைப்பாணிகளில் ஈடுபட்ட அவரது படைப்புக்களுள் இலங்கையின் முதன்மையான கல்வி மான்கள் மற்றும் பிரசித்தி பெற்ற ஆட்களதும் உடல் மேற்பகுதி (Bust) உருவப்படங்கள் பலவற்றைப் படைத்துள்ளார். அவற்றுள் ஏதல் வோக்கர், சீதா உருவம், மாமியின் உரு ஆகியன பிரபல்யம் வாய்ந்த ஆட்களின் உருவப்படங்களாகும்.

மேலும் கருப்பொருள் சார்ந்த ஓவியங்களுள் சீட்டாடுவேன், இந்து யாசகன், சங்த்வனி, தபசு, காவடி ஊர்வலம் போன்ற படைப்புக்களை உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம்.

ஜே.டீ.ஏ. பெரேராவினது படைப்பாக்கங்களின் சிறப்பான இயல்புகள்
  • கன்வசு மீது தைலவர்ண ஊடகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
  • நுணுக்கமாக வர்ணந்தீட்டியிருத்தலும் அதற்காக இசைவான வர்ணங்கள் தொட்டந்தொட்டமாகத் தீட்டப்பயன்படுத்தப்பட்டிருத்தலும்
  • ஆட்களின் உருவங்களை விடயப்பொருள்களாகக் கொண்டிருத்தல்.
  • ஐரோப்பிய கலைக்கல்லூரிக் கலையின் உருவப்பட ஓவியப் படைப்பாக்கத்தின் யாதேனும் செயற் பாட்டை அல்லது பொருளைப் பயன்படுத்தியிருத்தல் மூலம் அதன் செல்வாக்கு நன்கு காட்டப் பட்டிருத்தல்.
  • ஐரோப்பிய அக்கடமிக் மெய்ப்பண்பு வாதக் கலையினது இயல்புகளின்படி உருவத்தில் அவரது புறத்தோற்றம் மட்டுமன்றி உள்ளார்ந்த மனோநிலையும் காட்டப்பட்டிருத்தல்.
  • உருவத்தின் மூலம் வெளிப்புற அர்த்தம் பின்தள்ளப்பட்டு இரண்டாவது அந்தமொன்றினைக் கட்டியெழுப்புதல். அதற்காகப் உருவத்தினால் குறிக்கப்படும் ஆளின் செயற்பாட்டை அல்லது பொருள் களைக் காட்டுவதை விஞ்சிச் சென்று முகத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் கூர்மையான கவனமும் உணர்வுபூர்வமான தன்மையும் காட்டப்பட்டிருத்தல்.
  • உருவத்திற்குப் பொருத்தமானவாறு பின்னணி அமைக்கப்பட்டுள்ளதோடு, மனித உருவங்களில் உடைகளுக்கும் கடலின் நிறத்துக்கும் சமமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த உருவத்தினால் குறிக்கப்படும் ஆட்களின் பண்புகளைக் காட்டுவதற்காகப் பின்னணியில் பல்வேறு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருத்தலும்.

நடனமாது (சந்திரலேகா)

‘நடனமாது’ என்பது, நடனத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண்ணினது உடலின் மேற்பகுதியை கொண்ட ஒரு படைப்பாக்கமாகும். ஐரோப்பிய அக்கடமிக் கலையில், உருவப்பட ஓவியப் படைப்பாக்கத்தில் ஏதேனும் ஒரு செயலை அல்லது பொருளைப் பயன்படுத்துதல்” எனும் இயல்பின் செல்வாக்கைக் கொண்ட ஒரு படைப்பாக்கமாக ஜே.டீ.ஏ. பெரேரா இனது ‘நடனமாது’ எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம். அப்பெண், நடனத்துக்குரிய ஆடையணிகளுடன் நடன உடல்நிலை அபினயம் காட்டும் விதம் இதில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஓவியத்தில் மனிதப்

பின்னணியில் பல்வேறு குறியீடுகள் பயன்படுத்தப் படுதல் எனும் அக்கடமி செல்வாக்கின்படி, இங்கு காட்டப்பட்டிருக்கும் உரு ஒரு நடனமாது என்பதை உறுதிப்படுத்தும் பின்னணியாக தடித்த அலைமடிப்புக்கள் உள்ள திரை காட்டப்பட்டுள்ளது.

ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணங்கள் மற்றும் நுணுக்கமான கோடுகள் மூலமும் முகத்தில் காட்டப்பட்டுள்ள வெளிப்பாடுகள் மற்றும் உடலின் உடல்நிலை மூலமும் நடனமாதின் உள்ளுணர்வுகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன. அம்மாதுவினது முகத்தில் காணப்படும் உணர்வுபூவமான தன்மையை முனைப்புறுத்திக் காட்டுவதற்காக ஒரு பக்கமாகத் திரும்பியுள்ள முகத்தின் சில பகுதிகள் நிழற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண் உடலின் மென்மையையும் வடிவத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதற்காக மிக நுணுக்கமான தொட்டங்களாக வர்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளமையைஙக் காண முடிகிறது. மிகப் பிரகாசமானவர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அவற்றின் சேர்மானத்துக்காக இணக்கமான வர்ணப்பேதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காணமுடிகின்றது. அதன் மூலம் ஆடையணிகளின் மற்றும் ஆபரணங்களின் மினுமினுப்புத்தன்மை வேறுபாடுகள் நன்கு காட்டப்பட்டுள்ளது. திரையின்மீது வீழ்ந்துள்ள மஞ்சள்நிற ஒளி மிகச்சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதோடு அது, பெண்ணினது உடலில் உள்ள ஆடைகளின் வர்ணங்களுடன் நன்கு பொருந்தியமைந்துள்ளது.

ஆட்களின் உருவங்களைச் சித்திரிப்பதால் ஜே.டீ.ஏ. பெரேரா இனது சிறப்பான தன்மையாகிய குறித்த ஆளின் தனித்துவதற்திற்கமைய உருவத்தைக் காட்டுதல் எனும் தன்மையையும் இங்கு காணமுடிகின்றது. குறிப்பாக, நடனமாதுஎன வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்திற்கான பாத்திரம், ஜே.டீ.ஏ. பெரேரா இனது மனைவியராகிய ‘சந்திரலேகா ஆவார். அவர் ஒரு நடனக்கலைஞர் ஆவார். அவரது உடல் மேற்பகுதியின் உருவமானது அவரது லலித்தத்துவத்திற்கமைய ஒரு நடனக்கலைஞராகக் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரலேகாவின் அழகிய நடனத்தைவிட மேலாக அவரது உள்ளுணர்வு வெளிப்பாடு காட்டப்படுகின்றமையைக் காணமுடிகின்றது.

சீதா த சேரம் – உருவப்படம் (Portrait)

மெய்யுரு ஓவியக்கலையில், ஆளின் புறத்தோற்றத்தை மட்டுமன்றி இந்த காடாகத்தான காட்டப்பட்டுள்ள ஓர் ஓவியமாக சீதாவின் உருவப்படம்’ எனும் இந்த ஓவியம் கருதப்படுகின்றது. இந்த ஓவியத்தின் மூலம் சீதா த சேரம் எனும் கல்வியறிவுமிக்க பெண்ணின் உருவம் காட்டப்பட்டுள்ளது. உருவத்தில் காட்டப்பட்டுள்ள சீதாவின் புலமையைக் காட்டுவதற்கும், நூல்களுடன் அவர்கொண்டுள்ள தொடர்பைக் காட்டுவதற்கும் அவரது கையில் திறந்த நிலையில் உள்ள புத்தகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய அக்கடமிக் உருவப்பட ஓவியம் வரையப்படுதலின் யாதேனும் செயலை அல்லது விடயத்தைப் பயன்படுத்துதல் எனும் விசேட தன்மை இதன் மூலம் காட்டப்படுகின்றது.

ஆசனமொன்றின் மீது அமர்ந்து நூலை வாசிப்பதாகக் காட்டப்பட்டுள்ள அவரது முகத்தின் வெளிப்பாடானது அதிக கவனத்துடனான உணர்வுபூர்வமான தன்மையைக் காட்டுகின்றது. அவர் கூர்மையான பார்வையுடன் முன்னோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அதன் மூலம் அவரது வெளிப்படையான அர்த்தம் பின்தள்ளப்பட்டு, இரண்டாம் அர்த்தத்தைக் கட்டியெழுப்புதல் எனும் சிறப்பியல்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது.

நீல – பச்சை நிற சேலை அணிந்திருக்கும் சீதாவின் உருவத்துக்கு ஒப்பாக இள நீலநிறத்தில் பின்னணி தீட்டப்பட்டுள்ளது. வேகமாக தூரிகை வீச்சுக்களைக்கொண்ட நிறத்தோற்றங்கள் போன்று வர்ணந்தீட்டப்பட்டுள்ளது. அப்பண்பு மனப்பதிவுவாத வர்ணந்தீட்டல் பண்புகளுக்கு ஒப்பானது எனினும், ஐரோப்பிய அக்கடமிக் கலையின் மூலம்பெற்ற செல்வாக்குக்கு அமைய ஒளி – நிழல் காட்டியவாறு நிலைத்தன்மையுடன் ஒரே திசையில் விழுந்த இயற்கை ஒளி நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒளியின் வேறுபாடானது ஒருபோது தெளிவாகவும் மற்றொருபோது நுணுக்கமாகவும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!