ஜேதவனராமய தாதுகோபம்

அனுராதபுரக் காலத்தில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜேத்தவன தாதுகோபம் (உரு: 28) மகசென் மன்ன னால் (கி.பி. 362 , 389) கட்டுவிக்கப்பட்டது.

மகாசென் மன்னன், மகாவிகாரையைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதியில் ஜேத்தவனாராமயவைக் கட்டுவித்து, ‘தக்கின’ விகாரையில் இருந்த திஸ்ஸ எனும் பிக்குவுக்குப் பூசித்துள்ளார். இத்தாதுகோபத்தில் புத்தர் பெருமானின் இடைவார்த்தாது (பட்டித்தாது) அடக்கஞ் செய்யப்பட்டுள்ளதாக ‘பூஜாவலிய எனும் நூலிலும் கோட்டே காலத்தில் எழுதப்பட்ட ‘பரகும் சிரித்த’ எனும் நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வம்சக் கதைகளின்படி தொடக்கத்தில் இருந்ததாது கோபத்தின் உயரம் ஏறத்தாழ 400 அடி எனவும் கருதப்படுகிறது. தற்போது அதன் உயரம் 232 அடி ஆகும். தாதுகோபத்தின் விட்டம் 370 அடி ஆகும். இதன் அத்திவாரம் ஏறத்தாழ 27 அடி ஆழமுடையது. செங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜேத்தவன தாதுகோபம், அவ்வகையைச் சேர்ந்தவற்றுள், எஞ்சியுள்ள நினைவுச்சின்னங்களுள் உலகில் இன்று எச்சமான நிலையில் காணப்படும் மிக உயரமான புனிதக் கட்டடமாகும்.

ஜேதவனாராமை தாதுகோபம் புணர்நிர்மாணத்தின் பின்னர்

ஜேத்தவன தாதுகோபம் பண்டைய தாதுகோப மரபைத் தழுவி, கம்பத்தையும் குடைத்தொகுதி யையும் கொடண்டமைந்திருக்க இடமுண்டு. தற்போது அது கலசத்தையும் கலசந்தாங்கியையும் கொண்டமைந்துள்ளது. தாதுகோபத்தைச் சூழவுள்ள தாதுகோபக் கூறுகளுள் அடங்கியுள்ள, தாதுகோபம் அமைக்கப்பட்டுள்ள சதுரவடிவ மேடை, அதனுள் நுழைவதற்குரிய நான்கு வாயில்கள், யானை மதில், தாதுகோபத்தின் நான்கு வாகல்கட அமைப்புக்கள் ஆகியன சிறப்பானவை. மேலும், ரோலன்ட் சில்வா இத்தாதுகோபம் நெற்குவியல் (தானியக்குவியல்) வடிவத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்ததாகக் கூறுகின்றார்.

error: Content is protected !!