ஜீ. எம். பெர்னர்து (1904-1990)

 •  1904 பெப்ரவரி இரண்டாந் திகதி காலி மாவட்டத்தைச் சேர்ந்த பெந்தரை நகர சுத்தா கொடைக் கிராமத்தில் பிறந்த ஜீ. எஸ். அதாவது கம்வாரி சரத் பெர்னாந்து, நீர்வர்ண சித்திரக் கலையில் நுட்பத்திறன்களை வெளிக்காட்டிய பிரபல்யம் வாய்ந்த ஒரு ஓவியக் கலைஞர் ஆவார்.
 • ரிச்சர்ட் ஹென்ரிக்கஸ் எனும் ஓவியக் கலைஞரிடத்தே ஓவியக்கல்வி பயின்ற அவர் முதல் சுவரோவியக் கலையினூடாக சித்திரக் கலைத்துறையில் பிரவேசித்த ஒருவராவார்.
 • தொடர்ந்தும் எம். சார்லிஸ், முதலியார் அமரசேகர போன்ற கலைஞர்களிடத்தே ஓவியக்கலை பயின்ற அவர் நீர் வர்ண ஊடகம் தொடர்பான பரந்த அறிவைப் பெற்ற சிறந்த ஒரு சித்திரக் கலைஞராக தனது தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
 • கருத்துப்பட ஓவியக் கலையின் (Cartoon) திறமை காட்டிய அவர் இலங்கையின் முதலாவது சித்திரக் கதையைப் படைத்தவர் ஆவார்.
 • வணிக விளம்பர ஓவியக் கலைஞர் என்ற வகையில், அவர் வணிக விளம்பரச் சுவரொட்டிகள், பெயர்ச் சுட்டிகள், புத்தக அட்டைகள் போன்றவற்றையும் படைப்பதிலும் பங்களித்துள்ளார்.
 • நீர்வர்ண ஊடக நுட்ப முறையைக் கையாண்டு இவரால் படைக்கப்பட்ட சித்திரங்கள், ஐரோப்பிய கலாநிலைய சித்திரக் கலையின் செல்வாக்குடன் தமக்கே உரித்தான இயற்கைவாதச் சித்திரக் கலைப்பாணியில் படைக்கப்பட்ட ஆக்கங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன.
 • நீர் வர்ணப் பயன்பாட்டின் பொருட்டு ஐரோப்பிய தரைக் காட்சி அமைப்பின் தழுவல் பெறப்பட்டுள்ளது. இலங்கைச் சூழலின் இயற்கை அமைப்பை மிக அழகாக வெளிக்காட்டி இருப்பது, இவரது நிர்மாணிப்புக்களில் வெளிப்படுகின்ற விசேச பண்புகளாகும்.
 • கலைஞர் ஜீ. எஸ். பெர்னாந்து படைத்த சித்திர ஆக்கங்களுள் பின்வரும் நீர் வர்ண ஊடக சித்திரங்கள் மிகச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.

♦ ஓட்டுச்சூளை
♦ கடலாதெனிய

 • கலைஞர் ஜீ. எஸ். பெர்னாந்து படைத்த , நீர்வர்ண ஊடக சித்திர ஆக்கங்களின் பாணி, சித்திர அடிப்படைகள் , சித்திரிப்பு முறையியல் ஆகியவற்றைப் பின்வருமாறு இனங்கண்டு கொள்ளலாம்.

♦ சித்திரத்தில் ஆழமும் தூரநோக்கு இயல்புகளும் வெளிப்படுத்தப்பட்டிருந்தல்.
♦ மனித மெய்நிலைகள் லலிதத்தையும், உணர்வு வெளிப்பாட்டையும் கொண்டிருத்தல்.
♦ முப்பரிமாண இயல்புகளுடன் பிரகாசமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல்.

ஓட்டுச்சூளை

 • தேசிய கலா பவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் ஐரோப்பிய இயற்கை வாதப் பாணி சார்ந்த ஒரு படைப்பாகும்.
 • கடதாசியில் நீர்வர்ணத்தினால் தீட்டப்பட்ட ஒரு கலைப்படைப்பாகும்.
 • ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள ஓட்டுச்சூளையையும், சூழவுள்ள பிரதேசத்தையும் சித்திரிப்பதற்காக, பிரகாசமான வர்ணங்கள் முப்பரிமாண இயல்பில் நீர்வர்ண தடங்கள் முறையில் உயர்வான வெளிப்பாட்டுத்தன்மையுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • தளத்தின் மீது உருவங்களைச் சித்திரிப்பதற்காக, முன்னணி, இடையணி, பின்னணி ஆகிய மூன்று பகுதிகளிலும் உருவங்களைத் தாபிப்பதன் மூலம் சித்திரத்தின் ஆழமும் தூரநோக்கு இயல்புகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
 • இப்படைப்பு மீது இயற்கைவாதப்பாணியின் பண்புகளும், ஐரோப்பிய நிலத்தோற்ற ஓவியங்களும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

கடலாதெனிய – விஜயோத்பாயா

 • இந்த ஓவியம் கொழும்பு தேசிய கலாபவனத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டுள்ள ஒரு கலைப்படைப்பாகும்.
 • நீர்வர்ண ஊடகத்தையும் ஐரோப்பிய இயற்கைவாத நுட்ப முறைகளையும் பயன்படுத்தி இது படைக்கப்பட்டுள்ளது.
 • ஐரோப்பிய கலாநிலையச் சித்திரக் கலைக் கோட்பாட்டின் இயல்புகளான ஆழத்தைக் காட்டும் தூரநோக்கு இயல்புகள், முப்பரிமாண இயல்புகள் போன்றவை பயன்படுத்தப் பட்டுள்ளமை இந்த ஓவியத்தின் சிறப்பியல்பாகும்.
 • தளத்தின் மீது உருவங்களைச் சித்திரிக்கும் போது முன்னணி, இடையணி , பின்னணிகளில் உருவங்களைத் அமைத்து தூரநோக்கு இயல்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளமையும் இந்த ஓவியத்தின் ஒரே சிறப்பியல்பாகும்.
 • பிரகாசமான வர்ணங்களைக் கொண்டு , முப்பரிமாண இயல்புகளை உள்ளடக்கி, நீர் வர்ணப் பிரதேச (Patoh) முறை கையாளப்பட்டுள்ளது.
 • இப்படைப்பு மீது இயற்கைவாதப் பாணியின் பண்புகளும் ஐரோப்பிய நிலத்தோற்ற ஓவியங்களும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
பயிற்சி வினாக்கள்

1. இலங்கையில் நீர்வர்ண சித்திரக் கலையில் நுட்பத்திறன்களை வெளிக்காட்டிய பிரபல்யம் வாய்ந்த ஒரு ஓவியக் கலைஞர் யார்?
2. இலங்கையின் முதலாவது சித்திரக் கதையைப் படைத்தவர் யார்?
3. கலைஞர் ஜீ. எஸ். பெர்னாந்து படைத்த நீர் வர்ணச் சித்திர ஆக்கங்கள் எவை?

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இது ………………………………… என்னும் ஓவியமாகும்.
2. இவ் ஓவியம் ………………………………………… என்னும் கலைஞரால் வரையப்பட்டது.
3. இது கடதாசியில் …………………… ஊடகமாகக் கொண்டு தீட்டப்பட்ட ஒரு கலைப்படைப்பாகும்.
4. இப்படைப்பு மீது …………………………… பாணியின் பண்புகளும், ஐரோப்பிய நிலத்தோற்ற ஓவியங்களும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
5. இவ் ஓவியம் தற்போது ……………………………………………… இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காணுதல் : .……………………………………
2. வர்ண நுட்பம் : .…………………………………………
3. ஒழுங்கமைப்பு : .………………………………………
4. கலைப்பாணி : .…………………………………………
5. காணப்படும் இடம் : .………………………………

error: Content is protected !!