சோழர் கலை மரபு

தென்னிந்தியாவைச் சேர்ந்த அரச பரம்பரையினராகிய சோழர்கள், பல்லவர் பரம்பரையின் பின்னர் அரசாட்சிக்கு வந்தவர்களாவர்.இவர்களுடைய மொழி, தமிழாகவும் சமயம் இந்துவாகவும் காணப்பட்டது. தஞ்சாவூர் நகரத்தை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட சோழ அரச பரம்பரையில் அதிகளவான பிரதேசம் தென்னிந்திய புனித நதிகளுள் ஒன்றாகிய காவேரி நதிக் கரைக்கு மாத்திரம் வரையறைப்பட்டுவிடவில்லை.

கி.பி. 900-1300 இற்கு இடைப்பட்ட காலம் சோழர் கலை மற்றும் கட்டட நிர்மாணத்துறையின் முக்கியமான காலப்பகுதியாகும். இந்து சமயத்தைப் பின்னணியாகக் கொண்டு கட்டியெழுப்பப் பட்ட இக்கலை மரபின் மூலம் ‘சிவ’ தெய்வம் பெரிதும் உச்சநிலைப்படுத்தப்பட்டுள்ளது. பல்லவர்கள் ‘விஷ்ணு’ தெய்வத்தை முதன்மையாகக் கொண்டது போன்று சோழர்கள் சிவபெருமானை முதன்மையாகக் கொண்டனர். எனவே சோழர்கலையிலும் கட்டட நிர்மாணத்திலும் அதற்கே உரித்தான கருப்பொருள்களும் உருவ அமைப்பும் பண்புகளும் (Formal Properties) உள்ளன. அதாவது சோழர் கலையையும் கட்டட நிர்மாணத்தையும் இந்து சமயப் பின்னணியில் அமைந்த பல்லவர் கலை மற்றும் கட்டட நிர்மாணத்தின் ஒரு தொடர்ச்சியான தோற்றப்படாகக் கருத முடியாது. அதற்கமைய சோழர் கலைக்கும் கட்டட நிர்மாணத்துக்கும் அவற்றுக்கே உரித்தான கருப் பொருள்கள், கலைத்துவ உத்திகள், உருவ அமைப்புப் பண்புகளை (Formal Properties) உள்ளடக்கிய வகையில் காணப்பட்டது. சோழர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பாணியின் (Representative Style) செல்வாக்குகளுடன் தமது சமய உலகை வெளிப்படுத்தியதோடு அது பல்லவர் கலையில் காணப்பட்ட இயற்பண்புவாதத்திலிருந்து வேறுபட்டமைந்தது. பல்லவ கட்டடக் கலையிற் போன்று இல்லாமல் சோழக் கட்டடக் கலையானது அமைப்புச் சார்ந்த கட்டடங்களை அடிப்படையாகக் கொண்டமைந்தது. இவர்களது கட்டடக்கலையின் தனிச்சிறப்பான அம்சம் கோபுரம் ஆகும். சோழர்கள் பிரதான ஆலயத்தின் அளவுடையதாக அல்லது அதிலும் பெரியதாகக் கோபுரங்களைக் கட்டியெழுப்பினர். அதற்கே உரித்தான பாணியில், பாரிய கோபுரம், சிவ தெய்வம் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தமையை சோழர்கலை மற்றும் கட்டட நிர்மாணத்தில் தெள்ளத்தெளிவான பண்புகளாகக் கருதலாம். மேலும் இலங்கையின் முன் நவீனத்துவ சமூகக் கால கட்டமொன்றாகிய பொலனறுவைக் காலக் கலையையும் கட்டட நிர்மாணத்தையும் விளங்கிக் கொள்வதற்காக சோழர் கலையை யும் கட்டட நிர்மாணத்தையும் துணையாகக் கொள்ளலாம்.

சோழர் வரலாற்றை நான்கு காலகட்டங்களாக வகுத்து விளங்கிக் கொள்ளலாம்.

 1. சங்க காலச் சோழர் பரம்பரை – கி.பி. 100-200 (சோழர்கள் இக்காலப் பகுதியிலேயே முதன்முதலாக ஆளும் பரம்பரையினராக உருவெடுத்தனர்.)
 2. கலப்ரா அராஜிகக் கால கட்டத்தில் சோழர் பரம்பரை
 3. விஜயாலய சோழர் முதல் முதலாவது இராஜராஜசோழன் வரையிலான காலம் கி.பி. 900-1200.
 4. குலோத்துங்கன் காலம் கி.பி.1100-1300 (சாலுக்கிய சோழர் காலம்)

சோழர் கலை மற்றும் கட்டட நிர்மாண அமைவின் பின்னணியில் அதற்கு முற்பட்ட பல மரபுகள் உள்ளன. பாண்டவர், முத்தராயர், இருக்குவேல் ஆகிய தலைமுறையினரின் நம்பிக்கைகள் மற்றும் அதன் மீது கட்டியெழுப்பப்பட்ட கலைத்துவப் பிரயோகங்களைச் சோழர்கள் மூலாதாரங்களாகக் கொண்டனர். சோழர்களுக்கு அவர்களுக்கே உரித்தான நீண்ட கலைத்துவப் பாரம்பரியம் காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகக் கல்வெட்டுக்கள் இதற்கு உதாரணங்களாக உள்ளன. இந்த வரலாற்றுத் தகவல் எவ்வாறானதாக இருந்தபோதிலும், சோழர் ஆலய மரபு, கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதன்மை பெற்றது. அதாவது இக்காலப்பகுதியில் இந்து சமயச் சின்னங்களை மீண்டும் கல்லினால் ஆக்குவது அல்லது புதிதாக ஆக்குவது ஆரம்பமாகியது. இந்த முதலாவது காலகட்டம் விஜயாலய சோழன் காலத்தில் ஆரம்பமாகியது.

சோழர் கால பிரதான ஆலயங்கள்

சோழர்கால ஆலயங்களுள் தனிச் சிறப்பான சில ஆலயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 • விஜயபால சோழீசுவரர் ஆலயம் – நார்த்தாமலை, 9 ஆம் நூற்றாண்டு – விஜயாலய சோழன்.
 • பிரஹ்புரீஸ்வரர் ஆலயம்- புள்ளமங்கை – 9-10 ஆம் நூற்றாண்டு – முதலாம் பரந்தகன்.
 • நாகேசுவரசுவாமி ஆலயம்(கோயில்) – கும்பகோணம் – 9-10 ஆம் நூற்றாண்டு – முதலாம் ஆதித்தன் அல்லது முதலாம் பரந்தகன்.
 • குரங்கநாதர் ஆலயம் – ஸ்ரீனிவாச நல்லூர் – 9-10 நூற்றாண்டு – முதலாம் ஆதித்தன் அல்லது முதலாம் பரந்தகன்.
 • அகேஸ்தீஸ்வரர் ஆலயம் – அனங்கூர் – கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டு – செம்பியன் மகாதேவ்.
 • இராஜராஜேஸ்வர (பிரஹஸ்தீஸ்வரர்) ஆலயம் – தஞ்சாவூர் – கி.பி. 1003-1010 – முதலாம் இராஜராஜசோழன்.
 • பிரகதீஸ்வரர் ஆலயம் – கங்கை கொண்ட சோழ புரம் – கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் அரை நூற்றாண்டு – முதலாம் இராஜேந்திரன்.
 • சிவன் ஆலயம் – சிதம்பரம் – கி.பி. 1070-1122 – குலோத்துங்கன்.
error: Content is protected !!