சோமபந்து வித்தியாபதி (1923-2006)
நவீன விகாரை ஓவியக் கலை பற்றிக் கற்றாயும்போது பெல்லன்விலை புராண ரஜமகாவிகாரை தனிச்சிறப்பான ஓர் இடத்தைப் பெறுகின்றது. ஓவியர் சோமபந்து வித்தியாபதி அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களே அவ்விகாரையில் காணப்படுகின்றன. சோமபந்து வித்தியாபதி 1923 மார்ச் மாதம் 23 ஆந் திகதி பிறந்தார். பல பாடசாலைகளில் கல்வி கற்றமையும் சிறு பராய முதலே தனது குடும்பச் சூழலில் கலைசார்ந்த சிறந்த பின்னணி காணப்பட்டமையும் ஒரு கலைஞராக உருவெடுப்பதற்கு அவருக்குத் துணையாயின. பாடசாலையில்கல்வி கற்ற காலத்தில் கிராம நாடகம் மற்றும் நடனக்கலையில் அதிக ஆர்வம் காட்டினார நடனக்கலைப் பின்னணியைக் கொண்ட ஒரு குடும்பத்தின் வழித்தோன்றலான சோமபந்து வித்தியாபதி, வேட உடைகள். அரங்க அலங்கரிப்பு, அரங்கப் பொருள்கள் போன்றவற்றை வடிவமைக்கும் கலைஞராகவும் புகழ் பெற்றுள்ளார்.
நீண்டகாலமாக ஆசிரியராகச் சேவை செய்த அவர் அதனிடையே ஓவியக்கலை மற்றும் நடனக்கலை தொடர்பாகப் பயிலுவதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக்கொண்டார். முதலில் ஓவியக்கலை பயிலுவதற்காக 1945 இல் இந்தியாவில் சாந்திநிகேதனில் சேர்ந்து அங்கு, புகழ்பூத்த ஓவியக் கலைஞர் நந்தலால் போஸ் அவர்களிடம் கலை பயின்றதோடு, சுதேச மற்றும் வெளிநாட்டு ஓவியக் கலை தொடர்பான சிறப்பான பயிற்சியையும் பெற்றார். குறிப்பாக இந்திய, தொல்சீர் (Classical) கால ஓவியங்களில் காணப்படும் சந்தத்துக்கு (லயத்துக்கு) இசைவான கோடுகள், எளிமையான வண்ணப் பயன்பாடு, வரைக்குட்பட்ட வர்ண வீச்சினுள் ஓவியத்தை வரைதல் போன்ற பண்புகளை அவர் சிறப்பாகக் கிரகித்துள்ளார் என்பதை பெல்லன்விலை விகாரை ஓவியங்களினூடாக அவதானிக்க முடிகின்றது.
சாந்திநிகேதனத்தில் கல்வி பயின்று இலங்கைக்குத் திரும்பி வந்த பின்னர், அப்போதைய இலங்கை அரசு வழங்கிய ஒரு புலமைப் பரிசிலைப் பெற்று இந்தியாவில் ‘இற்ரவன்கோ ‘ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு தென்னிந்திய ஓவியம் மற்றும் சிற்பக்கலை தொடர்பாகவும், ஒப்பனை மற்றும் வேட உடைகள், அரங்கப் பொருள்கள் போன்ற பல பாடத்துறைகளில் முறைசார்ந்த கல்வியைப்பெற அவருக்கு வாய்ப்புக் கிட்டியது. இவ்வாறாக இந்தியர் கலை பற்றிய கல்வியைப்பெற்ற பின்னர் இலங்கைக்கு வந்த சோமபந்து வித்யாபதிக்கு அவற்றை பிரயோக ரீதியாகப் பயன்படுத்துவதற்காகப் பல வாய்ப்புக்கள் கிடைத்தன. குறிப்பாக நடனக்கலைஞர் சித்திரசேன அவர்களின் கரதிய’ (உவர் நீர்) எனும் அபிநய (முத்ரா) நாடகத்திற்கான வேட உடைகள் மற்றும் அரங்கப் பொருள்களை நிர்மாணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் அவ்வாறான பல அபிநய நாடகங்களுக்கு பல்வேறு வகைகளில் கலைத்துவப் பங்களிப்புச் செய்தார். இவ்வாறான நடனக்கலைத் துறையில் இணைந்து படைப்பாக்கத்தில் ஈடுபட்ட சோமபந்து வித்தியாபதி, பெல்லன்விலை விகாரை ஓவியங்களின் ஊடாகவே ஓவியக்கலையில் பிரவேசித்தார். அதற்கு முன்னர் கூட வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தலைப்புக்களின் கீழ் பல ஓவியங்கள் வரைந்து ஓவியக்கலையில் . பங்களிப்புச் செய்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்துக்காகவும் அவர் ஓர் ஓவியத்தைப் படைத்துள்ளார்.
மங்கிச் சென்றுள்ள சுதேச தொல்சீர் மரபுகள் மூலம் இலங்கையில் புதிய விகாரை ஓவியக் கலையைத் தோற்றுவித்தமையை அவரது பெல்லன்விலை விகாரை ஓவியங்கள் பறைசாற்றி நிற்கின்றன. 1990 – 1998 காலப்பகுதியில் விகாரையின் சுண்ணாம்புச் சுவர் மீது தைல வர்ண ஊடகத்தைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்த சுவர். அதற்காக சித்தார்த்த குமாரனின் இல் வாழ்க்கை , புத்தராதல், புத்தர் தொடர்பான நிகழ்வுகள், பௌத்தம் தொடர்பான இலங்கைக்கு முக்கியமான நிகழ்வுகள் போன்றவற்றை கருப் பொருள்களாகக் கொண்டுள்ளன. சித்தார்த்த குமாரனின் இல்வாழ்க்கையைக் காட்டும் படைப்பாக்கங்களுள், மகாமாயாதேவி கண்ட கனவு, சித்தார்த்த குமாமரனின் பிறப்பு, கலைகள் பயிலுதல், இல்லற இன்பம் துய்த்தல், திருமணம், நடனமாதுக்களின் பித்தலாட்டங்கள், நான்கு முன்னறிகுறிகள், வெளியேறிச் செல்லல் ஆகிய ஓவியங்கள் அடங்கியுள்ளன. புத்தரது வாழ்க்கைச் சம்பவங்களைக் காட்டும் படைப்பாக்கங்களுள் மாரனைத் தோற்கடித்தல் (மாரபராஜய), புத்தராதல், ஜாத சிடுதேவி, கிரிபிண்டு வழங்குதல், ஏழு வாரங்கள், அங்குலிமாலயை அடக்குதல், பட்ாச்சாரா மற்றும் கிஜராகோத்தமிக்கு உதவுதல் ஆகியனவும் அடங்கியுள்ளன.
பௌத்த சமயம் தொடர்பில் இலங்கைக்கு முக்கியமானவையாக அமைந்த வரலாற்று நிகழ்வுகளாக அசோக மன்னன், புத்தரின் போதனைகள் செவிமடுத்து தெளிவு பெறுதல், இலங்கையில் பௌத்த சமயம் தாபிக்கப்படல், சங்கமித்திரை மகாபோதிக் கிளையை கொண்டு வருதல் போன்ற பெருந்தொகை யான ஓவியங்களை இங்கு காணலாம்.
பெல்லன்விலை விகாரை ஓவியங்களின் சிறப்பான இயல்புகள்
சிகிரியா, மூளைவு (திவங்க) சிலைமனை, இந்தியாவில் கலை பயின்றதன் மூலும் பெற்ற அஜந்தா எல்லோரா பிராக் போன்ற தொல்சீர் கலை ஆகியவற்றின் செல்வாக்கையே அவர் இந்த ஓவியங்களைப் படைப்பதற்கான மரபாகக் கொண்டுள்ளார். அதற்கமைய அவரது இந்த ஓவியப் படைப்பாக்கங்களில் காணப்படும் மரபுரீதியான பண்புகளைப் பின்வருமாறு இனங்காணலாம்.
- சந்தத்துக்கு (லயத்துக்கு) அமைவான மெல்லிய நீண்ட வடிவங்கள்
- மனித உருவங்களைச் சித்திரிக்கும்போது உடலின் தசைகள் பொலிவாகக் காட்டப்படாமை.
- சந்தர்ப்பங்கள் மற்றும் உணர்வுகளைப் படைப்பதற்காக சந்த (லய) அசைவுகளைக் கொண்ட பரத மற்றும் கதகளி நடன மரபின் செல்வாக்குடன் பயன்படுத்தப்பட்டிருத்தல்.
- சந்தத்துக்கு (லயத்துக்கு) அமைவான கோடுகள், மற்றும் எளிமையான வர்ணப்பயன்பாடு, வரையப்பட்ட வண்ண வீச்சினுள் ஓவியம் தீட்டப்பட்டிருத்தல்.
- தளத்தின் மீது சீரான வெளிபாட்டுத்தன்மை.
- தூரதரிசனம் காட்டப்படாமை.
- ஒளி – நிழலும் முப்பரிமாணத்தன்மையும் காட்டப்பட்டிருத்தல்.
- பலவகையான அலங்கரிப்புக்களும் அழகிய ஆடையணிகளும் காட்டப்பட்டிருத்தல்.
குறிப்பாகப் பெண் உருவங்களில் உடலின் மேற்பகுதி வெறும் மேனியாகவோ உடலுடன் ஒட்டியது போன்ற ஆடைகளுடனோ வரையப்பட்டுள்ளன. அத்தோடு, வெவ்வேறு முடி அலங்காரங்களைக் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளதன் மூலம் பல்வகையமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண் உருவங்களில் பெரும்பாலும் உடலின் கீழ்ப்பகுதியில் மாத்திரமே ஆடை காணப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் தோள்களிரண்டையும் மூடிய சால்வையும் காட்டப்பட்டுள்ளது.
திருமணக் காட்சி
சித்தார்த்த குமாரனின் திருமணத்தைக் காட்டுகின்ற, பெல்லன்விலை விகாரை ஓவியமானது, நவீன பௌத்த விகாரைச் சுவரோவியக் கலை வகையைச் சேர்ந்ததாகும். தெற்காசிய சமய ஓவிய மரபானது கலைத்துவப் பாங்குகளை ஐரோப்பிய இயற்கைவாதக் கலையின் கலைத்துவ உத்திகளுடன் கலந்து இந்த ஓவியங்கள் படைக்கப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் சோமபந்து வித்யாபதிக்கே உரித்தான கலைத்துவப் பாங்கையும் இந்த ஓவியத்தில் காணலாம். அதற்கமைய மிகத் தெளிவான திருமணக்காட்சி எனும் இந்த ஓவியம், நவீன இலங்கையின் பௌத்த சுவரோவியக்கலை வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த ஓவியத்தைச் சுவரில் உள்ள மற்றைய ஓவியத்திலிருந்து வேறாக்கிக் காட்டுவதற்கான மரபுரீதியான நிறைமுறை கையாளப்படவில்லை. அதாவது ஒரு கதைப் பொருளில் இருந்து மற்றுமொரு கதைப்பொருளை வேறாக்குவதற்கான பொலனறுவை, மூவளைவு (திவங்க) ஓவியங்களிலோ மத்திய கண்டி மரபைச் சேர்ந்த ஓவியங்களிலோ அல்லது தென்னிந்திய மரபைச் சேர்ந்த ஓவியங்களிலோ காணப்படும் முறை பயன்படுத்தப்படவில்லை . ஐரோப்பிய நவீன ஓவியங்களில் காட்சிகள் வேறாக்கப்பட்டுள்ள முறையிலேயே இங்கு ஒரு கதைக்கும் மற்றைய கதைக்கும் இடையே எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. மறுபுறமாக நோக்குகையில் ஓவியத்தின் வெளியைக் கட்டியெழுப்புவதற்காக ஒருபோது அக்கடமிக் யதார்த்தம் சார்ந்த பண்புகளும் மற்றொருபோது மரபுரீதியான பண்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது. அதற்கமைய இந்த ஓவியம் நவீன கலைத்துவ உத்திகளுக்கு உட்பட்டதாகும்.
ஓவியத்தின் பிரதான கதையானது ஒரு முக்கோண அமைப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. பிரதான பாத்திரங்களான சித்தார்ந்த குமாரன், யசோதரை தேவி, கிரியையை நடத்துபவர் ஆகிய மூவரும் இந்த அமைப்பினுள் அமைக்கப்பட்டுள்ளனர். தொல்சீர் வர்ணங்களைக் கொண்டே ஓவியத்துக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனி வர்ணத்தன்மை ஓவியம் முழுவதிலும் தீட்டப்பட்டுள்ளது. பிரதானமாக இரண்டு பாத்திரங்களைக் காட்டுவதற்காக வர்ணம் வலிதாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சித்ார்த்த குமாரனின் உருவமும் யசோதரை தேவியின் உருவமும் பிரசாரமாமன மஞ்சள் நிறத்தினால் தீட்டப்பட்டுள்ளன. அதாவது நிறத்தொகுதியில் மிக உதாரணமான வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கதைப்பொழிப்புடன் இணைந்த பிரகாரமான பாத்திரங்கள் ஓவிய உத்திகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. ஓவியம் தளம் முழுவதிலும் பரம்பியுள்ளது. மஞ்சள் நிறத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்காக, இடையிடையேயும் நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளமை நவீன ஓவியக்கலையின் ஒரு சிறப்பான உத்தியாகும். அப்பண்பையும் இந்த ஓவியத்தில் காணமுடிகின்றது.