சிவன் ஆலயம் – இல. 01

பொலனறுவைப் புனித நகரத்தில் பிரவேசிக்கும் போது இடது புறத்தே காணப்படும் சமயக் கட்டடமே சிவன் ஆலயம் இல. 1 ஆகும். பல்வேறு கட்டட நிர்மாணப் பண்புகளின் சேர்மானத்தைக் கொண்ட இக்கட்டடத்தில் இந்துக் கட்டடட நிர்மாணப் பண்புகளை அதிக அளவில் காணலாம். இந்த ஆலயம் பிரதானமாக, பிரவேச மண்டபம், இடைக்கழிக்கூடம், அந்தராழம், கர்ப்பக்கிரகம், ஆகிய பகுதிகளைக் கொண்டது.

சிவாலயம் இல. 1 இல் முதன் முதலாகக் காணப்படுவது துவார மண்டபம் ஆகும். அது சமயக் கிரியைகளில் ஈடுபடும் பொது மக்களது பூசைக் கருமங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இத்துவார மண்டபம், சமதளமான, உயரம் குறைவான ஒரு மாடம் போன்று காட்சியளித்தல் தனிச்சிறப்பான ஒரு கட்டட நிர்மாணப் பண்பாகும். அந்தராழமானது, பக்தர்களும் பூசகர்களும் பிரதட்சணை செய்வதற்கான பிரவேச வழியாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் உள்ள கர்ப்பக்கிரகம் எனப்படும் பகுதி, பூசகர்கள் சமயக் கிரியைகளைச் செய்யும் இடமாகும். இது அந்தராழத்தைவிட அளவிற் பெரியதாகும். கர்ப்பக் கிரகத்தின் நடுப்பகுதியில் சிவலிங்கம் அமைந்துள்ளது; அச்சிவலிங்க அபிசேக நீர் அல்லது பால் வடக்குப் பக்கச் சுவருடன் இணைந்த வடிகாலின் வழியே வெளியேறும்.

வடக்குப் பக்கமாக இருந்த கட்டடம் அழிந்துபோயுள்ளதைக் காண முடிகின்றது. வடமேற்குப்பக்கமாக உள்ள சுவரில் ஒரு சிறிய நுழைவாயில் உள்ளது. அது கல்லினாலேயே அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கென அமைக்கப்பட்ட கதவுநிலை காணப்படுவதில்லை. ஆலயத்தின் செவ்வக வடிவப் பகுதி கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. சிகரம் செங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. அச்சிகரம் தற்போது சிதைவடைந்துள்ளமையால் அது ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறிய முடியாதுள்ளது.

சிவ ஆலயம் இல. 1 இனை நிர்மாணிப்பதற்காக வெட்டித்தயார்ப்படுத்திய கருங்கற்பாளங்களும் செங்கற்களும் என இரண்டு வகை ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பமாகத் தயார்ப்படுத்திய கருங்கற் பாளங்களை ஒன்றுடனொன்று இணையுமாறு நிலைக்குத்தாகவும் கிடையாகவும் வைத்து இச்சிவ ஆலயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கருங்கற் பாளங்களை ஒன்றின் மீது ஒன்று வைக்கும்போது அவற்றுக்கு இடையே சாந்து இடாமலேயே இக்கற்பாளங்கள் பொருத்தப்பட்டுள்ளமை ஒரு சிறப்பியல்பாகும். மேலும் இந்த ஆலயத்தை நிர்மாணிப்பதற்காகப் பயன்படுத்தியுள்ள பாறை வகை பொலனறுவைப் பிரதேசத்தில் காணப்படுவதில்லையாதலால், இக்கற்பாளங்கள் வேறொரு பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் இக்கற்சுவர்கள் மீது காணப்படும் அலங்கரிப்புக்களுள் பல சுதேச அலங்கரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. மனங்கவரத்தக்க வகையில் அமைந்த தாமரைப்பூ அலங்காரக் கற்றூண் தனிச்சிறப்பானதாகும். நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள கற்றூண்களின் உச்சியிலேயே இத்தாமரைப்பூ அலங்காாரம் காணப்படுகின்றது.

தாடு, இக்கற்றூண்கள் மீது அழகிய விமான வடிவங்கள் இடப்பட்டுள்ளன. இவை சிவ ஆலயம் இல. 2 இல் காணப்படும் விமனாங்களைப் பெரிதும் ஒத்தவை. விமானத் துவாரங்களுக்கு ஆதாரமாக இரு புறங்களிலும் தூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் கட்டடத்துக்குச் சமச்சீர்த் தன்மை கிடைக்குமாறு அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிவ ஆலயக் கட்டடத்தைச் சூழ ஒரு மதில் அமைந்துள்ளது. நீள் சதுர வடிவமுடையது. இம்மதில் செங்கற்கலினால் அமைக்கப்பட்டுள்ளது. ஆலய வளவினுள் பிரவேசிக்கும் இடத்தில் ஒரு படிக்கட்டு வரிசை உள்ளது. பிரவேச மண்டபத்திலிருந்து 27 அடிக்கு அப்பால் அதாவது பின்னாக ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்புறத்தே அந்தராழத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் ஒன்றுடனொன்று இணைக்கும் பகுதிகளில் (Pancl) வியாள உருவங்கள் காணப்படுகின்றன.

ஆரம்பத்தில் ‘தலதா மலுவை’ என அழைக்கப்பட்ட இக்கட்டடம் பல கட்டடக்கலை மரபுகளின் சேர்மானத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கட்டடம் பிரதானமாக தென்னிந்திய பாண்டவ கட்டடக்கலைப் பண்புகளைக் காட்டுவதாக சுரவீர இந்திரகீர்த்தி எடுத்துக் காட்டியுள்ளார். இந்த ஆலயத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளின்போது அதனுள் இருந்து பல வெண்கலச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவை தற்போது கொழும்பு மற்றும் பொலனறுவை அரும்பொருட் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!