சிறப்புவாய்ந்த பாரம்பரிய விலங்குரு அலங்காரங்கள்

அறிமுகம்
 • ரிஷப குஞ்சரம், கிஹிம்பி முகம், மகர உருவம், யாழி உருவங்களின் சிறப்புவாய்ந்த பாரம்பரிய அலங்கார வேலைப்பாடுகள் ஆகும்.
 • இவ்வலங்கார வடிவங்கள் விலங்குருவங்களாலேயே அதிகளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • பழைமையான சுவரோவியங்களில் செதுக்கல்களில் இந்நிர்மாணிப்புகளைக் காணலாம்.
 • தென் இந்திய தேவாலயங்களில் காணப்படும் யாழி உருவம் இலங்கையில் காணப்படும் மகர உருவத்துக்கு ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றன.
 • கலைஞரின் ஒழுங்கிணைப்புத் திறன் வெளிப்படுத்துவதாக இந்நிர்மாணிப்புக்கள் அமைந்துள்ளன.
ரிஷப குஞ்சரம்
 • எதிரெதிரே நோக்கியிருக்கும் விதத்தில் யானையினதும் மாட்டினதும் தலைகள் ஒருங்கிணைந்து ரி~ப குஞ்சரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 • மாட்டின் கொம்புகள் யானையின் தந்தங்களாக இடப்பட்டுள்ளன. யானையின் தும்பிக்கை மாட்டின் திமிலாக அமைந்துள்ளது. இரு விலங்குகளுக்கும் பொதுவாக இரு கண்கள் மட்டுமே உள்ளன.
 • இந் நிர்மாணிப்பு அக்கால கலைஞனின் திறமையை நன்கு வெளிப்படுத்துவதாக உள்ளது.
 • குருணாகல் ரிதிவிகாரை, கண்டி தலதா மாளிகை, எம்பக்கே தேவாலயம் போன்ற இடங்களில் ஓவியமும் செதுக்கல்களும் காணப்படுகின்றன.
 • தோவ ரஜமகா விகாரையிலுள்ள ரி~ப குஞ்சரம் கடுமையாகப் போர் புரியும் யானையையும், எருதுகளையும் குறிக்கிறது.
கிஹிம்பி முகம்
 • கீர்த்திமுக, கிஹிம்பி முகம் எனும் பெயர்களைக் கொண்டது.
 • மகர தோரணத்தின் இரு புறத்திலும் அமைந்திருக்கும் மகர உருவங்கள் இரண்டுக்கும் மத்தியில் இவ் கிஹிம்பி முகம் அமைந்துள்ளது.
 • கிஹிம்பி முகத்தின் வாய் அகன்றது. சிவப்பு நிற உதடுகளைக் கொண்டுள்ளது.
 • தந்தங்கள் இருபுறத்தில் காணப்படுவதுடன் அவை சுருண்டவடிவில் அமைந்த அலங்கார கொடிவலை நிர்மாணிப்பாகும்.
 • பெரிய விழிகள் கீழ்நோக்கி பெரியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • கிஹிம்பி முகத்தைப் பற்றிய முரண்பாடான கருத்துகள் பல நிலவுகின்றன.
மகர உருவம்
 • யானையின் தும்பிக்கை, சிங்கத்தின் பாதம், முதலையின் பற்கள், குரங்கின் கண்கள், பன்றியின் காதுகள், மீனின் உடல், குருவியின் இறகுகள் இணைந்த வடிவம் மகரம் ஆகும்.
 • இவை ஏழு விலங்குகளினதும் கூட்டுபலத்தை எடுத்துக் காட்டுகிறது.
 • மகர எண்ணக்கருவானது கிரேக்கம், சீனா, பாரதம் எனும் நாகரங்களில் பிரபல்யம் அடைந்துள்ளது.
 • கைப்பிடிச் செதுக்கல்களிலும் மகர தோரணங்களிலும் மகர உருவத்தை அதிகம் காணலாம்.
யாழி உருவம்
 • யாழி என்பது புராணக் கதைகளில் கூறப்பட்ட ஒரு கற்பனை வடிவமாகும்.
 • அனேகமான இந்துக் கோயில்களில் இதனைக் காணலாம்.
 • ஆலயத்தின் உட்புறத்தூண்களுடன் இணைந்ததாக இவ்வடிவம் அமைக்கப்பட்டிருக்கும்.
 • யாழி உருவை நிர்மாணிக்க யானை, சிங்கம், குதிரை போன்ற விலங்குகளின் பாகங்களை உபயோகித்தனர்.
 • இருவிலங்குகளை அல்லது மூன்று விலங்குகளை ஒன்று சேர்த்து கற்பனை உருவான யாழியை வடிவமைத்துள்ளனர்.
 • கோயில் பாதுகாப்பின் பொருட்டு இவ்வடிவம் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 • இவ்வடிவத்தில் அடங்கியுள்ள விலங்கு வடிவங்கள் பலம், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.
 • கோயில் நிர்மாணிப்புக்களில் ஒன்றான மஞ்சத்தில் அழகிய யாழி உருவங்களைக் காணலாம்.
 • இது ஒரு பழமையான நிர்மாணிப்பாக இருப்பினும் கலைசார் நிர்மாணிப்பாக தென்னிந்தியச் சிற்ப கலைவடிவங்களிலேயே அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர்.

பயிற்சி வினாக்கள்

பின்வரும் அட்டவணையைப் பூரணப்படுத்துக.

error: Content is protected !!