சாராநாத் புத்தர்சிலை
- குப்தர் காலப் படைப்புக்களுள் ஒன்றாகிய இப்புத்தர்சிலை சாராநாத் குருகுலத்தைச் சேர்ந்த சிறப்பான ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
- சாராநாத் புத்தர் சிலை ‘சூனார்’ எனப்படும் ஒரு வகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
- பத்மாசன முறையில் அமர்ந்த நிலையில் உள்ள இச்சிலை கைகளில் தர்ம சக்கர முத்திரையைக் காட்டி நிற்கின்றது.
- வாரணாசியில் இசிப்பத்தன, மிகதாய எனுமிடத்தில் புத்தர் பெருமான் ஐந்து பேருக்கு முதலாவது தரம் போதனையை நடத்தும் சந்தர்ப்பத்தை இது குறிக்கின்றது என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
- புத்தர் பெருமான் அமர்ந்திருக்கும் ஆசனத்தின் மத்தியில் உள்ள தர்ம சக்கரமும், இருபுறத்தே உள்ள இரு மான்களும், ஏனைய மனித உருவங்களும் இதனைக் குறித்து நிற்கின்றன.
- சிலையின் தலையின் பின்புறத்தே அழகிய ஒளிவட்டமும், அதில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட பொட்டுக் கோலங்களும், பூங்கொடி அலங்காரங்களும் , ஒளிவட்டத்தின் இரு புறங்களிலும் இரு தேவதை உருவங்களும் உள்ளன.
- ஒளிவட்டத்துக்குக் கீழே சிலையின் இரு புறங்களிலும், மகரம், குதிரை உருவங்களைக் கொண்ட அழகிய செதுக்கல் வேலைப்பாடொன்று உள்ளது.
- குடுமி, சுருட்டை முடி, பாதி திறந்த கண்கள், நீண்ட காதுச்சோணைகள் , சாந்த முகம், பெருங்கருணை ஆகிய இயல்புகள் கொண்ட பேராளுமை இயல்பை வெளிக் காட்டி நிற்கின்றன.
- இரண்டு தோள்களையும் மூடியுள்ள காவியுடை , உடலுடன் ஒட்டிய தன்மையைக் காட்டுகின்றது. மெல்லிய கோடுகள் சிலவற்றின் மூலம் காவியுடை வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
- சாராநாத் அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சாராநாத் புத்தர் சிலை இந்திய சிற்பக் கலையின் அரிய படைப்புக்களுள் ஒன்றாகும்.
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க : …………………………….
2. கருப்பொருள் : …………………………….
3. ஊடகம் : …………………………………………
4. ஆசன முறை : …………………………….
5. முத்திரை : …………………………………….
6. கலை மரபு : …………………………………..
7. அமைப்பு : ………………………………………
8. உணர்வுவெளிப்பாடு : ……………..