சாஞ்சி தூபியும் அதனுடன் தொடர்புடைய கலைப் படைப்புகளும்

சாஞ்சி உலகில் வாழும் பௌத்தம் உட்பட சகல இன மக்களையும் கவரத்தக்க ஓர் இடமாகும். இலங்கைக்குப் பௌத்த மதம் கொண்டு வரப்படுவதற்குச் சாஞ்சி தூபி கேந்திர நிலையமாக விளங்கியதன் விளைவாக இலங்கையர்களும் இவ்விடத்தை ஒரு முக்கிய இடமாகக் கருதுகின்றனர். இலங்கைக்குப் பௌத்த மதத்தினைக் கொண்டு வந்த மகிந்த தேரர் சாஞ்சியில் வாழ்ந்துள்ளார். இச்சம்பவத்தினை அசோக மன்னன் ஒரு தூண் கல்வெட்டாக அமைத்துள்ளான். முன்பு காகநாத. காகநாய போட்ட ஸ்ரீ பர்வத்த, சேத்திய கிரி போன்ற பெயர்களினால் அழைக்கப்பட்ட சாஞ்சி தூபி இந்தியாவின் விதிசாவில் அமைந்துள்ளது. சாஞ்சி தலம் தாதுகோபத்தையும் பல விகாரைகளையும் உள்ளடக்கி அழகிய மலைக்குன்றொன்றின் மீது அமைந்துள்ளது.

சாஞ்சி தூபி அமைந்துள்ள தலத்தின் கட்டடக்கலை சார்ந்த அமைப்புகளாகப் பெரும் தாதுகோபமும் அதனை சுற்றியுள்ள இரு சிறிய தாதுகோபங்களும் நான்கு தோரணங்களும் இதன் சிறப்பை மேலும் எடுத்துக் காட்டுகின்றது. அவற்றுள் ஒரு சிறிய தூபியில் ஒரு தோரணத்தை மட்டும் காணக்கூடியதாகவுள்ளது.

அரச போசிப்பு

சாஞ்சியின் கலை நிர்மாணங்களுக்கு நீண்டகாலமாக பல அரசர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஹர்ஷ என்னும் அரசனும் (கி.பி. 606 – 647) இவர்களுள் ஒருவராவர். கி.மு. 232 இல் அசோக மன்னன் காலமானதையடுத்து கி.மு. 185 களில் புஷ்யமித்திரனின் தலைமையில் மகத இராஜ்யத்தில் சுங்கர்களின் ஆட்சி இடம்பெற்றது. சுங்க அரச பரம்பரையினர் பௌத்த மதத்திற்கு அனுசரணை வழங்கியதன் விளைவாக சாஞ்சியின் கலை நிர்மாணிப்புகள் வளர்ச்சியடைந்தன.

அத்துடன் சாதவாகனருடைய காலத்திலும் (கி.மு. 128 – 110) சாஞ்சி தோரண செதுக்கல்களில் பல ஆக்கங்கள் சேர்க்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இருந்த போதிலும் அசோக மன்னனுடைய ஆட்சிக் காலத்திலேயே சாஞ்சி தூபி கட்டப்பட்டதற்குத் தொல்பொருளியல் சான்றுகள் உள்ளன.

சாஞ்சி தாதுகோபம்

சாஞ்சி தாதுகோபம் அசோக மன்னனினால் நிர்மாணிக்கப்பட்டது. அதேபோன்று பேரரசர் அசோகனால் இந்தியா முழுவதும் 84 000 விகாரைகள் அமைக்கப்பட்டன எனக் கூறப்பட்டபோதிலும் தற்போது சேதம் எதுவுமின்றிப் பாதுகாப்பாகக் காணப்படுபவை சாஞ்சி தாதுகோபமும் ஜிப்ராவ எனும் இரண்டு சிறிய தூபிகளும் மட்டுமேயாகும்.

சாஞ்சி தூபி சாஞ்சி புனித பூமி இடிபாடுகளில் காணப்படும் முக்கியத்துவமான கட்டடக் கலையம்ச மாகும். தற்போது காணப்படும் சாஞ்சி தாதுகோபத்தை விட அசோகனால் நிறுவப்பட்ட தாதுகோபம் சிறியதென்ற கருத்து நிலவுகின்றது. இன்று காணப்படும் தூபி பிற்பட்ட காலத்தில் (சுங்கர் ஆட்சிக் காலம்) புனரமைப்பு செய்யட்டதென்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. பௌத்தத்தின் முதலாவது தாதுகோபமாகக் கருதப்படும் தாதுகோபத்தைக் கலைத்துவமிக்கதாக அசோக மன்னன் கட்டுவித்தான்.

தாதுகோபம் 54 அடி உயரமும் 120 அடி விட்டமும் உடையது. தாதுகோபத்தைச் சுற்றி வலம் வரும் பகுதியொன்று உள்ளது. கர்ப்பக்கிரகத்துக்கு மேலே ‘ஹர்மிக்கா” உள்ளது. அதன் மத்தியில் பெரிய கற்றூண் (யஷ்டிய) உள்ளது. யஷ்டியுடன் பொருத்தப்பட்ட குடைகள் மூன்றுள்ளன. அவை மேலிருந்து கீழ் நோக்கிய படிப்படியாகப் பெரியதாகும் முறையில் சிறப்பாக அமைக்க பட்டுள்ளன. வலம் வரும் பகுதிகள் இரண்டு உள்ளன. இவை – மேதி” என்ற பெயரினால் அழைக்கப்படுகிறது. மேல் வலம் வரும் பகுதியில் செல்வதற்கான படிவரிசையும் காணப்படுகின்றது. இது முதலாவது வலம் வரும் பகுதியை விட 16 அடி உயரமுடையது. பாதுகாப்பாகக் காணப்படும் கல்வேலி 4 அடி உயரமுடையது. வலம் வரும் மேடை 10 அடி அகலமுடையது. இக்கல்வேலி செதுக்கல் வேலைப்பாடுகளற்றது.

சாஞ்சியில் மேலும் சிறிய தாதுகோபங்கள் இரண்டைக் காணக்கூடியதாகவுள்ளது. அதிலொன்றில் சிறந்த செதுக்கல் வேலைப்பாடுடைய தோரணத்தைக் காணலாம். இலக்கம் 02 தாதுகோபத்தில் மொக்கலீ புத்த திஸ்ஸ தேரரினதும் மற்றும் பத்துத் தேரர்களதும் தாதுப்பொருள்கள் வைக்கப் பட்டுள்ளன. இலக்கம் 03 தாதுகோபத்தில் சரியுத் முகலன் ஆகியோரின் தாதுப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது.

சாஞ்சி தோரணச் செதுக்கல் வேலைப்பாடுகள்

பெரும் தூபியைச் சுற்றி நான்கு தோரணங்களுள்ளன. அவை புராதன இந்திய செதுக்கல் கலைஞர்களின் முதிர்ச்சித் தன்மையினை வெளிப்படுத்துகின்றது. சாஞ்சி தோரணமானது சாதவாகனர் காலத்திற்குரியது. (கி.மு. 128 – 110) நான்கு தோரணங்களையும் அமைப்பதற்காக ஐம்பது வருடங்கள் செலவாகி இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவற்றுள்ளே தெற்குத் தோரணம் மிகவும் பழமையானதென பர்சி பிரவுன் கூறுகிறார். அதன் பின்னரே வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று தோரணங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தோரணத்தின் கட்டமைப்பும் நுட்ப முறையும்

இத்தோரணத்தை நிர்மாணிப்பதற்காக இரு கற்றூண்கள் நாட்டப்பட்டு அதற்குக் கிடையாக மூன்று கற்றூண்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிடையாகவுள்ள கற்றூண்களுக்கிடையில் செங்குத்தாக மூன்று தூண்கள் இடப்பட்டுள்ளன. கிடையாகவுள்ள தூண்களின் அந்தங்களின் உச்சியில் யானை, சிங்க உருவம் கொண்டதாகக் காணப்படுகின்றது. முதலாவது கற்றூணுடன் இணையுமாறு தாக்குப் பிடிப்பது போன்று பெண்ணுருவமொன்று அமைக்கப்பட்டுள்ளது. அவ்வடிவம் மரக்கிளையொன்றைப் பிடித்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இவ்வடிவத்தினூடாக செழிப்புத்தன்மை புலப்படுத்தப் படுகின்றது. இப்பெண் வடிவம் ”சாலபஞ்சிகா” என இனங்காணப்பட்டுள்ளது. கிடையான கற்றூண்கள்

என்று பொருந்தக்கூடிய வகையில் மூன்று சிறிய குறுக்குத் தூண்கள் காணப்படுகின்றன. தோரணத்தின் உச்சியில் மும்மணிகளும் தர்மச்சக்கரமும் காணப்படுகின்றன. அவற்றிற்கிடையில் யானை, சிங்க வடிவங்களுமுள்ளன. கிடையாக இடப்பட்டுள்ள மூன்று கற்றூண்களிலும் இரண்டு அந்தங்களும் சுருட்டப்பட்ட ஓலைச்சுவடி போன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விடயப் பொருள்களாகக் காணப்படுபவை புத்த சரிதையும் பௌத்த வரலாற்றுச் சம்பவங்களுமாகும். இவை பற்றிய தகவல்களினை ஓலைச் சுவடிகளில் எழுதப்படுவது அக்கால மரபாகும் என்பது இதன் மூலம் காட்டப்படுகிறது. ஓலைச்சுவடி போன்று விரிந்துள்ள இருபக்கங்களிலும் செதுக்கல்கள் காணப்படுவது இங்குள்ள சிறப்பம்சமாகும்.

கருப்பொருள்

சாஞ்சி செதுக்கல் கலைஞர்கள் தங்களின் நிர்மாணிப்பிற்காக ஜாதகக் கதைகளை தெரிவு செய்துள்ளனர். புத்தசரிதையும் பல்வேறுபட்ட வரலாற்றுச் சம்பவங்களின் தகவல்களும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள ஜாதகக் கதைகளாக ஜத்தந்த ஜாதகம், மகாகபி ஜாதகம், வெஸ்ஸந்தர ஜாதகம், ஆலம்புசா ஜாதகம், சாம ஜாதகம் ஆகியன அடங்கியுள்ளதோடு, அனுசரணையாளரின் கோரிக்கை மற்றும் சனரஞ்சகத்தன்மை காரணமாக, ஜத்தந்த ஜாதகம் மூன்று தேவாலயங்களிலும் அடக்கப்பட்டுள்ளது. புத்த சரிதை நிகழ்வுகளுக்கிடையே மகாமாயா தேவியின் கனவு, மாறனைத் தோற்கடித்தல், ஜட்டிலதமனய (இல்லறந் துறத்தல்), புத்த பெருமான் கபில வஸ்துவுக்கு வருகை தரல், புத்தராகுதல், புத்தபெருமான் சங்கிஸ்ஸ புரத்துக்கு வருகை தரல், முதலாவது தர்ம உபதேசம் ஆகியன முக்கியமானவை. வரலாற்று நிகழ்வுகளுக்கிடையே தாதுக்கலகம், தர்ம உபதேசம் என்பன முக்கியமானவை. வரலாற்று நிகழ்வுகளுக்கிடையே தாதுக்கலகம். அசோக மன்னன் இராம கிராமத்துக்கு வருகை தரல் போன்றன விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.

கலை நுட்பங்களும் கலையம்சங்களும்

சாஞ்சி தோரண செதுக்கல்களில் காணக்கூடிய விசேட அம்சமாக மனித மற்றும் மிருக வடிவங்களை ஒன்றினால் மற்றொன்று மறைக்கப்பட்டுச் செய்யப்பட்டதாகும். மிகச் சிறிய இடைவெளிகளிலும் கூட மனித உருவங்கள், விலங்குருவங்களை ஒப்பமாகவும் கருத்துப் புலப்படுத்தும் வகையிலும் அளவுப் பிரமாணத்திற்கு ஏற்பவும் தளங்களில் செதுக்கியுள்ள விதம் கலைஞனின் கலை நுட்பத்தைக் காட்டுகின்றது. சில இடங்களில் செதுக்கு வேலையில் பங்களிப்புச் செய்தோரின் பெயர்கள் மற்றும் விதிசா’ சேர்ந்த யானைத்தந்தக் கலைஞர்கள் இவற்றைச் செய்தமைக்கான குறிப்புகளும் உள்ளன. ஜாதகக் கதைகளைக் காண்பிக்கும்போது குறியீட்டுத் தன்மை பயன்படுத்தப் பட்டுள்ளது. புத்த பெருமானைக் காட்டுவதற்காகக் குறியீடுகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வெள்ளரசு மரம், தாதுகோபம், தர்மச்சக்கரம், ஸ்ரீ பாதச்சுவடி, வஜ்ராசனம் என்னும் குறியீடுகளினால் புத்த பெருமான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

தெற்குத் தோரணத்தில் காணப்படும் ஆக்கங்கள்

தெற்குத் தோரணம்

(1) சித்தார்த்தரின் பிறப்பு (2) புத்தர் நிலையடைதல் (3)

இராமகிராமத்தையடையும் அசோக மன்னன் (4) பரிநிர்வாணமடைதல் (5) மகாமாயா தேவி (6) முதலாவது தர்ம போதனை (7)|

இயமனைத் தோற்கடித்தல் (மாறனை) (8) கேச தாதுவை காணிக்கையாகக் கொடுத்தல் (புனித

கேசத்தை ) (9) ஜத்தந்த ஜாதகம் (10) துரோண பிராமணரின் தாதுக்களை வழங்கல்

(தாதுக்கலகம்)

வடக்குத் தோரணம்

(4) |

(6)

ஏழு புத்தர்களைக் காட்டும் ஏழு தாதுகோபங்கள் (2) வெஸ்ஸந்தர ஜாதகம்

முதலாவது தர்ம போதனை குரங்கின் பூசை ஜேதவனாவைக் காணிக்கையாக வழங்குதல் இயமனைத் தோற்கடித்தல்

பிரம்மாவின் வருகை (8) * முச்சலிந்த” எனும் நாகம் புத்தபெருமானின் உடலை

சுற்றியிருத்தல். (9) புத்தரின் பரிநிர்வாணம்

ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

கிழக்குத் தோரணம்

து

(1) (2)| (3)|

STORES

(4)|

(5) (6) (7)

சதேவ்லொவ (தேவ லோகங்கள்) இல்லறந் துறத்தல் (மகாபி நிக்மன) வாழ்க்கை விருட்சம் (ஜீவன வுருக்ஷய) புத்தர் கபில வஸ்துவுக்கு வருகை தருதல் தேவாராதனை விலங்குகளின் புத்தர் வழிபாடு யானைகள் தாதுகோபத்துக்கு தாமரைப் பூக்களைக் காணிக்கையாகச் செலுத்துதல் என்பவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

(1) முதல் தர்ம போதனை (2) பிரம்மாவின் வருகை

”முச்சலிந்த” எனும் நாகம் புத்தபெருமானின் உடலை சுற்றியிருத்தல்.

இயமனைத் தோற்கடித்தல் (5) புத்தரின் பரிநிர்வாணம்

ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

சாஞ்சி தோரணத்தில் காணப்படும் முக்கியமான செதுக்கல் வேலைப்பாடுகள் புத்தர் சங்கஸ்ஸ

புடைதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்த செதுக்கலாகும். புத்தர் தாயாருக்கு தர்ம போதனை செய்த பின் பிரம்மன் படைத்த தங்க ஏணியில் சங்கஸ்ஸ புரியை அடையும் காட்சி இதில் செதுக்கப்பட்டுள்ளது. இங்கேயும் குறியீட்டு வடிவில் புத்தர் காண்பிக்கப்பட்டுள்ளார். தங்க ஏணியின் உச்சியிலும் அடியிலும் இரு போதிமரங்கள் புத்தர் அடையாளப்படுத்துகின்றன. செதுக்கலின் மேற்பகுதியில் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தேவர்கள் மேளம் இசைத்தவண்ணம் அவரை வணங்கி கௌரவிக்கின்றனர். கீழ்ப் பகுதியில் மனித உருவங்கள் காணப்படுகின்றன. அத்துடன் அவர்கள் செவிமடுக்கும் மக்களாகக் கருதப்படுகின்றனர். இதனை வடக்கில் அமைந்த தோரணத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.

IIIIIIIITRINITHIK

* ஜடில தமனய” எனப்படும் செதுக்கலும் புத்தரின் சரிதையின் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக்காட்டுகிறது. இது கிழக்கு வாயில் தோரணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெருமையுடன் காணப்படும் ‘ஜடிலர்கள்’ அற்புத வழியில் அடக்கும் காட்சியே இதுவாகும். பிறர் நினைப்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் புத்தர் இருந்ததால் அதனை அறிவு நீர் நிரம்பிய பிரதேசம் ஒன்றை உருவாக்கி அதில் தான் மூழ்கும் விதத்தைக் காண்பித்தார். இதனைக் கண்ட ‘ஜடிலர்கள்’ ஓடமொன்றில் ஏறி புத்தரைக் காப்பாற்ற முயற்சிப்பதும், அதன்போது புத்தர் தன் அருகே நீர் பிரவாகிக்காதவாறு நான்கு சுவர்களால் நிறுத்துவது போன்று நீரை நிறுத்தி அதன் நடுவே எவ்வித ஆபத்துமின்றி அமர்ந்திருப்பது ஜட்டிலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமும் கூட செதுக்கலில் மேற்பகுதியில் உள்ளது. பின்னர் ‘ஜடிலர்களின் பெருமையை நீக்கி அவர்களுக்குப் புத்தர் தர்ம போதனை வழங்கும் காட்சி செதுக்கலின் கீழ் பகுதியில் காணப்படுகிறது. இங்கேயும் வலப்பக்கத்தில் குறியீடாக அரச மரம் ஒன்றைக் காணலாம்.

இயமனைத் தோற்கடித்தல் எனும் செதுக்கலை வடக்குத் தோரணத்தில் காணலாம். செதுக்கலின் மத்தியில் சிம்மாசனம் ஒன்றின் மீது இயமன் அமர்ந்து இருக்கிறான். அவனைச் சுற்றி இயமனின் கூட்டத்தினரும் அவனது கூட்டத்தைச் சேர்ந்த பெண்களும் செதுக்கப்பட்டுள்ளனர். சிலர் மது அருந்திக் கொண்டு இருக்கின்றனர். இயமனின் முகம் பயந்த சுபாவத்தைக் காட்டுகிறது. புத்தர் தன்னையும் தனது கூட்டத்தாரையும் தோற்கடித்துவிடுவார் என்ற உணர்வு இயமனின் முகத்தில் பிரதிபலிக்கின்றது. இயமனின் புதல்வியர்கள் புத்தர் தன்வசப்படுத்த எத்தனிக்கின்றனர். இறுதியில் மாறனும் அவனது படையினரும் தோற்கடிக்கப்படுகின்றனர்.

மகா கபி ஜாதகக் கதை செதுக்கலைச் செய்துள்ள தளம் அற்புதமாக உபயோகித்துள்ள விதம் சிற்பியின் அபாரத் திறமையை வெளிப்படுத்துகின்றது. மேற்குத் தோரணத்தில் இச்செதுக்கலைக் காணலாம். குரங்குப் பிறவியெடுத்த போதிசத்துவர் தமது சகாக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சியை இது சித்தரிக்கின்றது. செதுக்கலின் மத்தியில் ஆறு ஒன்று காணப்படுகிறது. நீரலைகள் கூட அதில் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆறு பாயும் தன்மையைக் காட்ட கீழ்நோக்கி நீந்தி வரும் மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்காக இரண்டு மரங்களுக்கு இடையில் இருக்கும் போதி சத்துவ குரங்கு தனது சகாக்களை ஆற்றின் அக்கரையில் சேர்க்கும் விதம் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. போதிசத்துவரை அடையாளப்படுத்தத் தலைமைக் குரங்கு பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. பரணஸ் பட்டணத்தின் பிரம்மதத்த மன்னன் தேன் மாம்பழம் சாப்பிடும் அவாக் கொண்டதால் அத்தேன் மாமரத்தில் இருந்த குரங்குகளைக் கொல்ல திட்டமிட்ட தால் தலைமைக் குரங்கு தனது சகாக்களைக் காப்பாற்றும் விதம் மகா கபி ஜாதகக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா கபில ஜாதகம்

இல்லறந் துறத்தல் (மகாநிபிக்மன) செதுக்கல் கிழக்குத் தோரணத்தில் காணப்படுகிறது. விலங் குருக்களைச் செதுக்கும் திறமையைப் பிரதபலிக்கும் வகையில் சிற்பி இவற்றைச் செதுக்கியுள்ளார். குதிரைகளின் இயக்கத்தன்மை, அளவுப் பிரமாணம் பற்றிய நல்லறிவு சிற்பிக்கு : புலப்படுகிறது. சித்தார்த்தர் செல்லும் குதிரையுடன் கூடிய வாகனம் தெய்வத்தின் உள்ளங்கை மீது உள்ள விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குதிரையின் மீது குடையொன்று உள்ளது. அச்செதுக்கலின் ஒரு பக்கத்தில் புனித பாகங்களும் குறிக்கப்பட்டுள்ளன.

மகாநிபிக்மன

வெஸ்ஸந்தர ஜாதகக் கதை வடக்குத் தோரணத்தின் கீழ்க் கற்பாளத்தின் இரண்டு பக்கங்களிலும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. வடதோரணத்தின் அடியில் உள்ள தூணில் இதனைக் காணலாம். இது தொடர்ச்சியாக கதைகூறும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. வெஸ்ஸந்தர மன்னன் உட்பட குடும்ப அங்கத்தவர்கள் பன்சலவுக்கு அருகில் நிற்கின்றனர். தாமரைக் குளமொன்றில் யானைகள் நீராடுகின்றன. அடுத்ததாக மன்னன் இரு பிள்ளைகளையும் தானமாக வழங்குகிறார். அரசனுடைய மெய்க்காப்பாளரால் ‘ஜுஜக’ எனப்படும் பிராமணனை தடுக்க முயற்சித்தல், மகாராணியார் (மந்திரீதேவி) காய்கறிகள் பறித்து வரும் விதம், மகாராணியை தானமாக வழங்கும் விதம், திரும்பிவரும் செய்தி ஆகியன ஒரே தளத்தில் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

வெஸ்ஸந்தர ஜாதகக் கதை

ஜத்தந்த ஜாதகக்கதையானது தென் தோரணத்தின் உட்புறத்தில் உள்ள இரண்டாவது கிடைத் தூணிலும் வடக்குத் தோரணத்தின் உட்புறத்தில் உள்ள மேற்கிடைத் தூணிலும் மேற்குத் தோரணத்தின் வெளிப்புறத்தில் கீழேயுள்ள கிடைத்தூணிலும் செதுக்கப்பட்டுள்ளது. ஜத்தந்த யானைக்கு ஏழு தந்தங்கள் உண்டு. இமயமலையின் குளமொன்றுக்கருகில் எட்டாயிரம் யானை களுக்குத் தலைமைத்துவம் தாங்கும் ஜத்தந்த எனப்படும் யானை அரசனுக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்கள் ஒருவரையொருவர் பகைக்கின்றனர். ஜத்தந்த யானையின் தந்தங்களைத் தேடிவந்த வேடன் ஒருவனுக்குத் தனது தந்தங்களை தானம் செய்து இறுதியில் ஜத்தந்த யானை இறந்து விடுகிறது. அந்த யானை தானம் செய்யப்படுகிறது. இக்காட்சிகள் அனைத்தும் செதுக்கப் பட்டுள்ளன. யானைகளின் உடல்நிலைகள் மிகவும் இயற்கையான தன்மையுடன் அமைக்கப் பட்டுள்ளன. நுணுக்கமாகவும் அளவுப் பிரமாணத்துடனும் செதுக்கல் அமைந்துள்ளது. சூழலின் தன்மையை இவர் காண்பித்துள்ள விதம் அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.

ஜத்தந்த ஜாதக்கதை

சாஞ்சி தோரணங்களில் காணப்படும் ‘சாலபஞ்சிகா” எனப்படும் பெண் உருவங்கள் சிறப்பு வாய்ந்த சிற்பங்களாகின்றன. இவை இரு தூண்களை இணைக்க உபயோகித்த தண்டயக் கட்டுக்களாக (bracket) இவற்றைக் குறிப்பிடலாம். கிடையாகக் காணப்படும் இரு தூண்களை இணைப்பதற்கு சிற்பி இவ்வாறான ஒரு கலைத்துவ நிர்மாணிப்பை உருவாக்கியிருக்கலாம். வெறும் மேனியான பெண் உருவங்களை இதற்காக உபயோகப்படுத்தியதன் காரணம் பற்றி பல கருத்துகள் நிலவுகின்றன. இச்செதுக்கல்களைச் செய்த சிற்பிகளின் தோசங்கள் நீங்குவதற்காக இவை அமைக்கப்பட்டனவா என்று சிலர் வினவுகின்றனர்.

இந்த சாலபஞ்சிகா உருவங்கள் இலயத்துடன் கூடியவை. ஆபரணங்கள் காணப்படுகின்றன. ஒரு காலை ஊன்றி மற்றைய கால் தளர்வாக வைக்கப்பட்டுள்ளது. ஒரு கையால் மாமரக் கிளையுள்ள தோடு பிடிக்கப்பட்டுள்ளன.

சாலபஞ்சிகா உருவம்

சிலவேளை செழிப்பைக் காட்டுவதற்காக இவற்றை நிர்மாணித்திருக்கக்கூடும். இந்த சாலபஞ்சிகா உருவங்கள் அக்கால சமூகத்தின் நம்பிக்கையை குறியீட்டு வடிவில் காண்பிக்க எடுத்த ஒரு முயற்சியென பேராசிரியர் எச். ரீ. பஸ்நாயக்க கருத்துத் தெரவித்துள்ளார்.

error: Content is protected !!