சாஞ்சித் தூபியும் தோரணச் செதுக்கல்களும்

 • மௌர்ய, சுங்கர் கால கலையில் சாஞ்சித்தூபியானது அசோக மன்னனால் கட்டப்பட்ட இந்திய கட்டட நிர்மாணத்தின் உன்னதமான படைப்பாகும்.
 • பாரத நாட்டின் மத்தியில் கலைத்துவமான அழகான மலையொன்றில் நிர்மாணிக்கப் பட்டுள்ள சாஞ்சித் தூபியும் அதன் சுற்றுப்புறமும் கலைக்கூடமாக திகழ்கின்றது.
 • சாஞ்சி மகா தூபியைத் தவிர வேறு இரண்டு சைத்தியங்கள் காணப்பட்டபோதும் மகாதூபியே சிறப்பான நிர்மாணமாகும்.
 • இது 120 அடி விட்டமும் 54 அடி உயரமும் கொண்டது.
 • இது நீர்குமிழி வடிவமுடையது. நிலமட்டத்திலிருந்து 16 அடி உயரத்தில் சைத்தியத் தைச் சுற்றி வலம் வருவதற்கான அமைப்பு இருக்கிறது. இது மேதிய ‘ எனப்படுகிறது. அதைச் சுற்றி கல்வேலி காணப்படுகிறது. வலம் வரும் பகுதியை அடைவதற்கு இரண்டு படி வரிசைகள் உள்ளன.
 • ‘மேதிய’ யின் மீது அண்டம் (கர்பய) அமைந்திருக்கிறது. தூபியின் உச்சிப் பகுதியில் கல்வேலியைக் கொண்ட சதுரக் கோட்டம் காணப்படுகிறது. இது கர்மிகா’ எனப்படுகிறது. 
 • ‘கர்மிகா’ வின் மத்தியில் கூர்மையான கற்றூண் காணப்படுகிறது. இது ‘யூபய’ அல்லது ‘யஷ்டிய’ என அழைக்கப்படுகிறது.
 • யூபயவின் உச்சியில் வட்ட வடிவமான தட்டையான 3 கற் தகடுகள் காணப்படுகின்றன. இவை கீழே இருந்து மேல்நோக்கி உருச்சிறுத்து காணப்படுகிறது. இவை குடை (சத்திர ) என அழைக்கப்படும்.
சாஞ்சி தூபியின் பிரதான அங்கங்கள்

சாஞ்சி தோரணம்

 • சாஞ்சித் தூபியின் நாற்புறத்தில் அமைந்த தோரணங்கள் இந்திய கலை நிர்மாணங்களின் சிறப்பான படைப்புகளாகும் எனக் கருதப்படுகின்றது.
 • சாதவாகன காலத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
 • சாஞ்சி தோரணங்கள் நான்கும் அமைப்பைப் பொறுத்தமட்டில் ஒரே வடிவமைப்பைக் கொண்டவை.
 • உச்சியில் விலங்குருவங்களைக் கொண்ட சதுர வடிவமுடைய இரு தூண்கள் உள்ளன. அதன் மேற்பகுதியில் கிடையாகவும் சமாந்தரமாகவும் 3 கற்பாளங்கள் உள்ளன. இக் கற்பாளங்கள் உட்பக்கமாக சுருண்ட வடிவில் காணப்படுகிறது. இது கலைத்துவமாக ஓலைச்சுவடி வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் 3 சிறுகற்தூண்களால் இணைக்கப்பட்டுள்ளன.
 • ஒவ்வொரு செங்குத்தான தூண்களிலும் கிடையான கற்பாளங்களிலும் அலங்கார வடிவிலான சிற்பங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பிரதானமான செங்குத்துத் தூண் உச்சியில் யானை உருவங்கள், வாமன உருவங்கள் சிங்க உருவங்கள் கொண்டதாகக் காணப்படுகின்றன. கிடையாக உள்ள முதல் கற்பாளத்துக்கும் செங்குத்துத் தூணுக்கும் இடையில் ஓரமாக ‘சாலபஞ்சிகா’ எனும் பெண்ணின் உருவம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
 • தோரணத்தின் மேலே இருக்கும் கிடையான கற்பாளத்தின் மீது திரிசூலம், மனித உருவங்கள் மற்றும் விலங்குருவங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சாஞ்சி தோரண வேலைப்பாடுகளின் கருப்பொருள்கள் :

 • ஜாதகக் கதைகள் :
  உதாரணம் : சத்தந்தஜாதக , வெஸ்ஸந்திர , மகாகபி ஜாதக
 • புத்த பெருமானின் வாழ்க்கை நிகழ்வுகள் :
  உதாரணம் : ஞானம் பெறல், கபில வஸ்துவுக்கு வருகை தரல்.
 • சித்தார்தரின் வாழ்க்கை நிகழ்வுகள் :
  உதாரணம் : கேசம் களைதல், இல்லறத்தைத் துறத்தல்.
 • வரலாற்று நிகழ்வுகள் :
  உதாரணம் : அசோக மன்னன் ஸ்ரீ மகாபோதியை வணங்குதல், புனித சின்னங்களுக்கான கலகம்.

சாஞ்சி தோரண வேலைப்பாடுகளில் காணப்படும் சிறப்பியல்புகள் :

 • செங்குத்தாக அமைந்த கல் தூண்களில் உள்ள செதுக்கல்கள் பலகங்களுக்குள் நிர்மாணிக் கப்பட்டுள்ளதுடன் கிடையாக உள்ள கற்பாளங்களில் தொடர்ச்சியான கதை உருவாகும் விதத்தில் செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • இச் செதுக்கல்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சிறு புடைப்பு நுட்ப முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • உருவம் இன்னொரு உருவத்தை மறைத்து இருக்கும் விதத்தில் அவை நிர்மாணிக்கப் பட்டுள்ளன.
 • மனித உருவங்கள், விலங்கு தாவர உருவங்கள் என்பன கொண்டு தளம் முழுவதும் இடைவெளியின்றி இச் செதுக்கல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
 • கலைப்பாணியுடன் கூடிய மனித உருவங்களும் இயற்கைத் தன்மையுடன் கூடிய விலங்குருவங்களும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். –
 • விலங்குகளின் மெய்நிலைகள், பண்புகள், அசைவுகள் தத்துரூபமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
 • சாஞ்சி தோரண வேலைப்பாடுகளை நிர்மாணித்த கலைஞன் புத்தபெருமானையும், சித்தார்த்த குமாரனையும் காட்டுவதற்காக அரசமரம், குடை, தூபி , தர்ம சக்கரம், பாதச் சுவடு போன்ற குறியீடுகளை உபயோகித்துள்ளார்.

சாஞ்சி தோரணமும் அதன் பகுதிகளும்

ஜத்தன்த ஜாதகம்
(வடக்குத் தோரணம், உட்புறம் )

ஜத்தன்த ஜாதகம் – அண்மித்த தோற்றம்
 • ஜக்தன்த ஜாதகக் கதைச் செதுக்கல் சாஞ்சி தோரணத்தின் மிகச் சிறந்த ஒரு கலை ஆக்கமாகும்.
 • அந்த ஜாதகக் கதையின் செதுக்கல் வேலைப்பாடுகளுள் ‘ஜத்தன்த’ ஜாதகச் செதுக்கல் வேலை சிறப்பானது. அது பல சாஞ்சி தோரணங்களில் காணப்படுகின்றது.
 • வடக்குத் தோரணத்தின் ஒரு செதுக்கு வேலைப்பாடே இங்கு தரப்பட்டுள்ளது.
 • இது தோரணத்தின் உட்புறத்தே மிக உயரத்தில் அமைந்துள்ள கிடையான கற்பாளங் களாகும்.
 • கிடைக்கற்தகட்டின் மீது தொடர்கதை முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
 • ஜத்தன்த ஜாதகக் கதையில் ஆல மரத்தடியில் இருக்கின்ற யானைகளை சித்தரிக்கும் காட்சி காணப்படுகிறது.
 • இதில் காணப்படுகின்ற யானைகள் யாவும் இயற்கை வடிவில் உள்ளதுடன், யானைகளின் மெய்நிலை, அவற்றின் இயல்பு , சலனம். தாத்வீகத் தன்மையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 • ஒன்றிற் ஒன்று மறைந்து காணப்படும் யானை வடிவங்கள் தளம் முழுதும் பரவி இருக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
 • மிகச் சிறிய இடங்களையும் பயன்படுத்தி உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.
 • யானைகள் செதுக்கலில் நுணுக்கமாகவும், மென்மையாகவும் பூரணப்படுத்தப்பட்டு உள்ள தன்மையைக் காணலாம்.

புத்த பெருமான சங்கஸ்ஸபுரத்திற்கு வருகை தரல்
(வடக்குத் தோறணத்தின் முன்பக்கம்)

 • இச் செதுக்கல் வடக்குத் தோரணத்தில் உள்ளது. 
 • புத்த பெருமான் சங்கஸ்ஸபுரத்திற்கு வருகை தருவதைச் சித்தரிக்கும் இச் செதுக்கலில், புத்தர் பெருமானின் வடிவத்திற்கு பதிலாக அரசமரத்தை குறியீடாக காட்டப்பட்டுள்ளது. அதன்படி ஏணியின் மேலேயும், கீழேயும் அரசமரம் காட்டப்பட்டுள்ளது.
 • இங்கு காணப்படும் மனித வடிவங்கள் கலைப்பாணியுடன் இயற்கை அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது
 • உருவத்துக்கு உருவம் மறைந்துள்ள தன்மையில், தளம் முழுதும் ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. மிகச்சிறிய இடத்தைக் கூடப் பயன்படுத்தி வடிவங்கள் வரையப்பட்டுள்ளது.
 • யானைத்தந்த செதுக்கல்களில் காணக்கூடிய நுட்பமாகவும், மென்மையாகவும் பூரணப்பாட்டை கொண்டுள்ளது.
 • சிறுபுடைப்பு சிற்ப முறையில் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இக் கட்டட அமைப்பானது ………………………… என அழைக்கப்படுகின்றது.
2. இத் தூபி ………………………. மன்னனால் கட்டப்பட்டதாகும்.
3. இத் தூபியானது ……………………. வடிவத்தில் காணப்படுகின்றது.
4. இச் சைத்தியத்தைச் சுற்றி வலம் வருவதற்காகக் காணப்படும் அமைப்பு ……………… என அழைக்கப்படுகின்றது.
5. இத் தூபியின் சதுரக்கோட்டமானது …………………. எனப்படுகின்றது.
6. இதன் உச்சியில் காணப்படும் கூர்மையான கற்தூண் ……………… என அழைக்கப்படுகின்றது.
7. இக் கற்தூணின் உச்சியில் காணப்படும் சிறுத்துச் செல்லும் மூன்று கற்தகடுகள் …………………… எனப்படுகின்றது.

இச் செதுக்கல் (1)…………………………… திசையிலுள்ள (2)………………………… இல் காணப்படுகின்றது. இது (3)………………………… ஜாதகக் கதையின் ஒரு பகுதியாகும். இச்செதுக்கலானது (4)………………………. முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் யானை வடிவங்கள் (5)…………………………… வடிவில் நுணுக்கமாகவும் மென்மையாகவும் (6)…………………… நுட்பமுறையில் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.

1. கருப்பொருள் : ……………………………………………………
2. காணப்படும் இடமும் திசையும் : ……………..
3. குறியீடுகள் தொடர்பாக : ………………………………
4. மனித மெய்நிலை தெடர்பாக : ………………….
5. செதுக்கல்கள் தொடர்பாக : …………………………
6. நுட்பமுறை : ……………………………………………………….

error: Content is protected !!